மக்கள் எழுச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மக்கள் எழுச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

16 அக்டோபர் 2011

கேரளா:நகரங்​களை மக்கள் வெள்ளமாக்கி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய அமைதிப் பேரணிகள்

fb4திருவனந்தபுரம்/பெரும்பாவூர்/கோழிக்கோடு: போலீஸ்-ஆட்சியாளர்களின் உரிமை மறுப்புக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்து கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மண்டல அளவிலான பேரணிகள் மூன்று நகரங்களை மக்கள் வெள்ளத்தால் திணறடித்தது.



பேரணிக்கு முன்னோட்டமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கேடர்கள் சீருடை அணிந்து நடத்திய வாலண்டியர் அணிவகுப்பு சுதந்திர தினத்தில் அணிவகுப்பு நடத்த மறுக்கும் ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் படைத்த இறைவனை தவிர வேறு எவருக்கும் அஞ்சமாட்டோம் என்ற துணிச்சலை பதிலாக அளிப்பதாக அமைந்தது.

‘சுதந்திரம் பிறப்புரிமை’ என்ற முழக்கத்துடன் திருவனந்தபுரம், பெரும்பாவூர், கோழிக்கோடு ஆகிய நகரங்களில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

திருவனந்தபுரம் ப்ரஸ் க்ளப்பிற்கு அருகே துவங்கிய பேரணியும், வாலண்டியர் அணிவகுப்பும் கிழக்கே கோட்டை காந்தி பூங்காவில் முடிவடைந்தது.

பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் மெளலவி அஷ்ரஃப், மாநில தலைவர் அப்துல் ஹமீது, நூருல் அமீன், ஹாரிஸ் மற்றும் திருவனந்தபுரம், கொல்லம், பத்தணம் திட்டா மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் தலைமை வகித்தனர்.

கோழிக்கோட்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொருளாளர் வழக்கறிஞர் கெ.பி.முஹம்மது ஷெரீஃப் பொதுக்கூட்டத்தை துவக்கி வைத்தார். வழக்கறிஞர் ரஃபீக் சிறப்புரை நிகழ்த்தினார்.

16 ஏப்ரல் 2011

லிபியா நிலவரம் ஓர் அலசல்

மீடியாக்களின் திரித்தல் தணிக்கைகளுக்கு அப்பால் லிபியா நிலவரம் ஓர் அலசல்

முஸ்லிம் கண்டமான ஆபிரிக்காவின் வட நாடுகளில் தூனிஸ் முதலாக அல்ஜீரியா மொரோக்கோ என ஆட்சியாளர்களுக்கு எதிரான புரட்சிகள் வெடித்ததைத் தொடர்ந்து எகிப்து பஹ்ரைன் யமன் ஈரான் போன்ற நாடுகளிலும் மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக களமிரங்கியதை கண்டுகொண்டிருக்கும் இவ்வேளையில் வட ஆபிரிக்க நாடுகிளில் ஒன்றான லிபியாவைப் பற்றியும் அதன் அரசியல் வரலாற்று நிலவரங்கள் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

லிபியா என்ற பிரதேசம் இஸ்லாமிய வரலாற்றில் தராப்லிஸ் என்று வழங்கப்பட்டு வந்தது. இன்று தராப்லிஸ்(ட்ரிபொலி) என்பது அதன் தலை நகரிற்கு வழங்கப்படுகிறது. லிபியா என்ற பெயர் ஓர் ஆதிப் பெயராகும். லீபூ என்ற சொல்லிலிருந்து பிறந்தது. லிபியர்கள் என்ற பழமை இனத்தையும் மொழியையும் இது குறிக்கிறது. ஆரம்பத்தில் கிபியிற்கு முன்னர் ஆபிரிக்கா என்பதற்குப் பதிலாக லிபியா என்றே ஆபிரிக்கக் கண்டம் முழுவதும் அழைக்கப்பட்டது. குறிப்பாக வட ஆபிரிக்க நாட்டுப் பகுதிகளைக் குறிக்க இந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டது. ஆபிரிக்கா என்ற பெயர் தூனிஸின் மஹ்தியா என்ற நகரத்திற்கே ஆரம்பத்தில் வழங்கப்பட்டது. ஆக்கிரமப்பாளர்கள் அனைவரும் ஒன்றோ எத்தியோப்பா(எரிந்த முகம்) அல்லது லிபியா என்ற பெயர்களையே ஆபிரிக்கக் கண்டத்திற்கு வழங்கி வந்தனர். அதே நேரம் அரேபியர்களிடத்தில் கண்டம் முழுவதையும் குறிக்க எந்தச் சொல் ஆளப்பட்டது என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் இல்லாத போதினும் அவர்கள் பிரதேசவாரியாகவே ஆபிரிக்க நாடுகளுக்குப் பெயர் சூட்டியுள்ளனர் என்பது தெளிவு. லிபியா என்ற பெயர் சுருங்கி இன்று தூனிஸிற்கும் எகிப்திற்கும் தசாத் நைஜீரியாவிற்கும் மத்தியிலுள்ள பிரதேசத்திற்கு வழங்கப்படுகிறது.

யெமன்:பெருமளவிலான ராணுவத்தினர் எதிர்ப்பாளர்களுடன் இணைந்தனர்

ஸன்ஆ:யெமன் நாட்டில் பெருமளவிலான ராணுவத்தினர் எதிர்ப்பாளர்களுடன் இணைந்துள்ளனர். குடியரசு படை, மத்திய பாதுகாப்புப் படை, விமானப்படை ஆகியவற்றைச் சார்ந்த ராணுவத்தினர் எதிர்ப்பாளர்களுடன் இணைந்துள்ளனர்.

அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் பதவியை ராஜினாமாச் செய்துவிட்டு அதிகாரத்தை கீழ் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸன்ஆவில் எதிர்ப்பாளர்கள் மத்தியில் தோன்றிய ராணுவத்தினரை மக்கள் கரகோஷத்துடன் வரவேற்றனர். பணியிலிருந்து விலகப்போவதை முன்னரே ராணுவத்தினர் கமாண்டர் ஜெனரல் அலி முஹ்ஸின் அல் அஹ்மருக்கு தெரிவித்திருந்தனர். இளைஞர்களின் அமைதியான முறையிலான புரட்சியை பாதுகாப்போம், ஆதரிப்போம் என அவர்கள் அறிவித்துள்ளனர்.

இதற்கிடையே, ஸன்ஆவில் எதிர்ப்பாளர்கள் அணியில் சேர்ந்த ராணுவத்தினருக்கும், அரசு ஆதரவு ராணுவத்தினருக்கும் இடையே நடந்த மோதலில் ஐந்துபேர் கொல்லப்பட்டனர். ஏடனில் இரண்டுபேர் மரணித்துள்ளனர்.

10 ஏப்ரல் 2011

அரபு நாடுகளில் போராட்டங்களுக்கு ஓய்வில்லை

டமாஸ்கஸ்/கெய்ரோ/ஸன்ஆ:சிரியாவில் சர்வாதிகார அதிபர் பஸ்ஸார் அல் ஆஸாதிற்கு எதிராக பல வாரங்களாக தொடரும் போராட்டம் ஓயவில்லை. எதிர்ப்பாளர்கள் மீது ராணுவம் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 30க்கும் அதிகமான பேர் கொல்லப்பட்டனர். இதில் 10 பேர் வெள்ளிக்கிழமை நடந்த மோதலில் கொல்லப்பட்டவர்களாவர்.

வெள்ளிக்கிழமை ஜும்ஆவிற்கு பிறகு துவங்கிய போராட்டம் நேற்றும் தொடர்ந்து நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்டோர் பல இடங்களில் ராணுவத்துடன் மோதலில் ஈடுபட்டனர். அதேவேளையில், மோதலில் 19 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டதாகவும், 75 பேருக்கு காயமேற்பட்டதாகவும் அதிகாரப்பூர்வ செய்தி ஏஜன்சியான ஸனா தெரிவிக்கிறது.

பாதுகாப்பு அதிகாரிகளின் மரணத்தை சிரியாவின் உள்துறை அமைச்சகமும் உறுதிச்செய்துள்ளது.

கிழக்கு சிரியாவில் நேற்று குர்துகளும் வீதிகளில் இறங்கி போராடத் துவங்கினர். லடாகியா, தார்தூஸ், ஹும்ஸ், இத்லிப் ஆகிய நகரங்களிலும் போராட்டம் நடைபெற்றது. மூன்று பேர் கொல்லப்பட்ட ஹரஸ்தாவில் கடுமையான துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக உள்ளூர்வாசிகளை மேற்கோள்காட்டி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

06 ஏப்ரல் 2011

அமைதி பேச்சுவார்த்தை:ஜி.சி.சியின் அழைப்பை யெமன் ஏற்றுக்கொண்டது

ஸன்ஆ:ஒரு மாதத்திற்கும் மேலாக தொடரும் உள்நாட்டு மோதல்களுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வளைகுடா நாடுகளிடையேயான ஒத்துழைப்பு கவுன்சில்(ஜி.சி.சி) அழைப்பை யெமன் ஏற்றுக்கொண்டுள்ளது.

அரசு பிரதிநிதிகளும்,எதிர்கட்சியினரும் பங்கேற்கும் பேச்சுவார்த்தை சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் வைத்து நடைபெறும். ஆனால்,தேதி நிச்சயிக்கப்படவில்லை.

பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக வளைகுடா நண்பர்களின் அழைப்பை ஏற்றுக்கொள்ள தயார் என யெமன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அபூபக்கர் அல் பிர்பி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

எதிர்ப்பாளர்களின் போராட்டத்தை அடக்கி ஒடுக்கும் அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹின் நடவடிக்கையை கண்டித்து ராஜினாமாச் செய்த ராணுவ தளபதி ஜெனரல் அலி முஹ்ஸினும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வார்.

03 ஏப்ரல் 2011

லிபியா:மேற்கத்திய ராணுவத்தின் கண்மூடித்தாக்குதலில் 10 எதிர்ப்பாளர்கள் படுகொலை

திரிபோலி:மேற்கத்திய ராணுவத்தின் விமானத்தாக்குதலில் லிபியாவில் எதிர்ப்பு போராளிகள் 10 பேர் கொல்லப்பட்டனர்.ப்ரீகாவுக்கும், அஜ்தாபியாவுக்குமிடையே சென்றுக்கொண்டிருந்த எதிர்ப்பு போராளிகளின் வாகனங்கள் மீது மேற்கத்திய ராணுவம் குண்டுவீசித்தாக்கியது.

ப்ரீகாவை நோக்கிச்சென்றுக்கொண்டிருந்த எதிர்ப்புபோராளிகள் வெற்றிப்பெற்றதை சுட்டிக்காட்ட வானத்தைநோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.இதுதான் மேற்கத்திய ராணுவத்தின் தாக்குதலுக்கு காரணமென பி.பி.சி கூறுகிறது.

இதற்கிடையே எதிர்ப்பாளர்களின் போர் நிறுத்த அறிவிப்பை லிபியாவின் அரசு நிராகரித்துவிட்டது.எதிர்ப்பாளர்களின் வசமிருக்கும் நகரங்களை கத்தாஃபியின் ராணுவம் சுற்றி வளைத்துள்ளதாகவும், இங்கிருந்து வாபஸ் பெறுவதற்கான எவ்வித நடவடிக்கைக்கும் தயாரில்லை என அரசு செய்தி தொடர்பாளர் மூஸா இப்ராஹீம் தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை மேற்கத்திய ராணுவம் நடத்திய விமானத்தாக்குதலில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகவும், மனித தன்மையற்ற கொடுஞ்செயல்களை மேற்கத்திய ராணுவம் நடத்திவருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

30 மார்ச் 2011

மக்கள் எழுச்சி:சிரியா அமைச்சரவை ராஜினாமா

டமாஸ்கஸ்:கடந்த சில வாரங்களாக தொடரும் அரசுக்கெதிரான மக்கள் எழுச்சிப் போராட்டத்தை தணிப்பதற்காக சிரியாவின் கேபினட் அமைச்சரவை ராஜினாமாச் செய்துள்ளது.

1963-ஆம் ஆண்டு முதல் அமுலிலிருக்கும் அவசரச் சட்டத்தை வாபஸ் பெறவும், அரசியல்-குடியுரிமை சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாட்டை நீக்குவதுக் குறித்தும் உடனடியாக அதிபர் பஸ்ஸார் அல் ஆஸாத் பிரகடனப்படுத்துவார் என செய்திகள் கூறுகின்றன.

2003-ஆம் ஆண்டுமுதல் பதவியில் தொடரும் 32 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையின் ராஜினாமாவை அதிபர் அங்கீகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சேனல் தெரிவிக்கிறது.

புதிய அரசு உருவாகும்வரை தற்போதைய அமைச்சரவை தொடரும். ஆனால், பெரும்பான்மையான அதிகாரங்களை தம் வசம் வைத்திருக்கும் அதிபரை இந்த ராஜினாமா பாதிக்காது.

லிபியாவின் எதிர்காலத்தைக் குறித்து விவாதிக்க லண்டனில் கூட்டம்

லண்டன்:லிபியாவின் எதிர்காலத்தைக் குறித்து விவாதிக்க பல்வேறு நாடுகளின் கூட்டம் லண்டனில் துவங்கியுள்ளது.

லிபியாவில் எதிர்ப்பு கவுன்சில் தலைவர் முஹம்மது ஜிப்ரீலுடன் கூட்டத்திற்கு முன்பு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டன் பேச்சுவார்த்தை நடத்தினார். கூட்டத்திற்கு தலைமை வகிக்கும் பிரிட்டீஷ் வெளியுறவு செயலாளர் வில்லியம் ஹேகின் அழைப்பை ஏற்று ஜிப்ரீல் லண்டனுக்கு வருகைத் தந்தார். எதிர்ப்பாளர்களுடன் உறவை பலப்படுத்துவோம் என பிரிட்டனும், அமெரிக்காவும் அறிவித்துள்ளன. கத்தாஃபி கீழ்படியும் வரை தாக்குதல் தொடரும் என ஹிலாரி கூட்டத்தில் தெரிவித்தார்.

கத்தாஃபியின் தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளைக் குறித்து கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும். ஐ.நா, நேட்டோ, ஆப்பிரிக்கன் யூனியன், அரபு லீக் ஆகியவற்றின் 40 பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

29 மார்ச் 2011

கத்தாஃபியின் சொந்த நகரை மீட்டதாக எதிர்ப்பாளர்கள் தகவல்

திரிபோலி:லிபியாவின் ஏகாதிபத்திய அதிபர் முஅம்மர் கத்தாஃபியின் சொந்த நகரான ஸிர்த்தை மீட்டதாக எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவில் வெற்றியை ஈட்டியதாக எதிர்ப்பாளர்களின் தேசிய கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஷம்ஸி அப்துல் மொலாஹ் தெரிவித்துள்ளார்.

பெங்காசியில் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எதிர்ப்பாளர்கள் தங்களது வெற்றியைக் கொண்டாடினர். அதேவேளையில், ஸிர்த்தில் கத்தாஃபியின் ராணுவம் தாக்குதலை பலப்படுத்தியதாக செய்திகள் கூறுகின்றன.

மிஸ்ரத்தாவில் கத்தாஃபியின் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர். பின் வாஜிதிற்கு மேற்கிலுள்ள நவ்ஃபலியாவிலும் மோதல் கடுமையாக நடக்கிறது. ஸிர்த் அரசு கட்டுப்பாட்டிலுள்ளதாக நேரடி சாட்சிகளை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.

பல நகரங்களிலும் மோதல் தொடர்கிறது. மேற்கத்திய ராணுவம் நடத்தும் தாக்குதலின் பின்னணியில் எதிர்ப்பாளர்கள் லிபியாவின் 5 கடற்கரை நகரங்களை நேற்று முன்தினம் கைப்பற்றியிருந்தனர்.

28 மார்ச் 2011

லிபியாவில் புரட்சி வெல்லும் – எதிர்ப்பாளர்கள் தலைவர் தேஜஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டி

தோஹா:கத்தாஃபியின் மோசமான ஆட்சிக்கெதிராக லிபியா மக்கள் நடத்திவரும் போராட்டம் வெற்றிப் பெறுமென எதிர்ப்பாளர்களின் தலைவர்களில் ஒருவரான டாக்டர்.அலி ஸல்லாபி தேஜஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:”லிபியாவில் அனைத்து பிரிவைச் சார்ந்த மக்களும் அரசுக்கெதிரான போராட்டத்தில் பங்கேற்கிறார்கள். பல கோத்திரங்களிலிருந்து வந்த இளைஞர்கள் தற்பொழுது போராட்டத்தை வழி நடத்துகிறார்கள். ஆதலால், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டதைப் போன்று புரட்சிக்கு பிறகு உள்நாட்டுக் குழப்பம் ஏற்பட வாய்ப்பில்லை.

புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள நகரங்களில் அராஜகங்கள் இல்லை. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நீதிபதிகள், போலீஸ் தலைவர்கள், ஜெனரல்கள், சமூக சேவகர்கள் ஆகியோர் அடங்கிய கவுன்சில்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

சிரியா:போராட்டம் தொடர்கிறது – மேலும் 12 பேர் மரணம்

டமாஸ்கஸ்:அரசுக்கு எதிரான போராட்டம் தொடரும் சிரியாவில் மோதல் பரவியுள்ளது. பல இடங்களிலும் ராணுவமும், எதிர்ப்பாளர்களும் மோதலில் ஈடுபட்டனர். லதாகியாவில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலியாகினர்.

இத்துடன் கடந்த 15-ஆம் தேதி சிரியாவில் துவங்கிய எதிர்ப்பு போராட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 26 என அரசு தரப்பு கூறுகிறது. ஆனால், பலியானவர்களின் எண்ணிக்கை 126 என எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் இறுதிச்சடங்கு நடக்கும்பொழுது அக்கிரமமான முறையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் பலியாகினர். ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்தான் இவர்கள் மரணித்ததாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

ஆனால், அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்திய கும்பல் துப்பாக்கியால் சுட்டதாக அரசு அறிவித்துள்ளது. ஆளுங்கட்சியான பாஆஸின் டமாஸ்கஸின் வடக்குப் பகுதியில் தஃபாஸில் அமைந்துள்ள அலுவலகத்தை எதிர்ப்பாளர்கள் தீவைத்து கொளுத்தினர். தரா நகரத்தில் நிறுவப்பட்டுள்ள சிரியா அதிபர் பஸ்ஸாருல் ஆஸாதின் தந்தை ஹாஃபிஸுல் ஆஸாதின் சிலை மீது ஏறி எதிர்ப்பாளர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

லிபியா:கூட்டணி படைகளின் உதவியுடன் முன்னேறும் எதிர்ப்பாளர்கள்

திரிபோலி:அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படைகள் விமானத் தாக்குதல் நடத்திவரவே, முஅம்மர் கத்தாஃபியின் எதிர்ப்பாளர்கள் மேலும் பல நகரங்களின் கட்டுப்பாட்டை தம் வசம் கொண்டுவந்துள்ளனர்.

தற்பொழுது கத்தாஃபியின் ஆதிக்கத்திலுள்ள நகரங்களை நோக்கி எதிர்ப்பாளர்கள் நகர்ந்துக் கொண்டிருக்கின்றார்கள். உகைலா, ப்ரீகா ஆகிய எண்ணெய் நகரங்களை எதிர்ப்பாளர்கள் கத்தாஃபியின் ராணுவத்திடமிருந்து நேற்று மீட்டனர்.

முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான அஜ்தாபியா ஏற்கனவே கத்தாஃபியின் ராணுவம் இழந்திருந்தது. கூட்டணி படைகளின் விமானத் தாக்குதலை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு எதிர்ப்பாளர்கள் லிபியாவின் மேற்கு பகுதியை நோக்கி முன்னேறுகிறார்கள்.

எண்ணெய் வளமிக்க ராஸ்லனூஃப் நகரத்தையும் எதிர்ப்பாளர்கள் கைப்பற்றியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முக்கியத்துவம் வாய்ந்த எண்ணெய் ஏற்றுமதி நகரங்களை கைப்பற்றியதை எதிர்ப்பாளர்கள் சாதனையாக கருதுகிறார்கள்.

கத்தாஃபியின் ஆதரவாளர்களுடைய கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் எதிர்ப்பாளர்களுக்கு பெரிய அளவிலான எதிர்ப்பை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படவில்லை என அல்ஜஸீரா தெரிவிக்கிறது.

26 மார்ச் 2011

அரசியல் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்துவோம்-சிரியா

டமாஸ்கஸ்:தரா நகரத்தில் நடந்த மோதலில் நூற்றுக்குமேற்பட்ட மக்கள் அநியாயமாக சுட்டுக்கொல்லப்பட்டதைத்தொடர்ந்து சிரியாவில் மக்கள் எழுச்சி கிளர்ந்தெழுந்துள்ள சூழலில் அரசியல் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.1963-ஆம் ஆண்டுமுதல் அமுலில் உள்ள அவசரச்சட்டத்தைக்குறித்து ஆராய்வோம் என அரசு உறுதியளித்துள்ளது . தராவில் கூட்டுப்படுகொலை நடத்தியவர்களை சட்டத்தின் முன்னால் நிறுத்துவோம்.கைதுச்செய்யப்பட்டவர்களை விடுவிக்க அதிபர் பஸ்ஸாருல் ஆஸாத் உத்தரவிட்டுள்ளார்.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த அரசு உத்தரவிடவில்லை எனவும், வெளியிலுள்ள சக்திகள் தாக்குதலுக்கு பின்னணியிலிருப்பதாகவும் அதிபரின் செய்தித்தொடர்பாளர் பவ்த்தானியா ஷாபான் தெரிவித்துள்ளார்.மக்களின் கோரிக்கையை பரிசீலிக்க குழு உருவாக்கப்படும்.தொழிலாளிகளின் சம்பளத்தை உயர்த்துவதற்கும், சுகாதாரத்துறையில் சீர்திருத்தங்கள் கொண்டுவரவும் அரசு தயார் என அவர் தெரிவித்துள்ளார்.தேர்தலில் மேலும் அதிகமான கட்சிகள் போட்டியிட அனுமதி வழங்கப்படும்.ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்படும்.ஊழலுக்கெதிராக நடவடிக்கை மேற்கொள்ள சிறப்புக்குழு உருவாக்கப்படும் எனவும் ஷாபான் தெரிவித்தார்.

யெமன்:ராஜினாமாச் செய்யத் தயார் – ஸாலிஹ்

ஸன்ஆ:பதவியிலிருந்து விலக தயார் என யெமன் அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் அறிவித்துள்ளார். பொறுப்பானவர்களிடம் மட்டுமே அதிகாரத்தை ஒப்படைப்பேன் என தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரை நிகழ்த்தவே ஸாலிஹ் குறிப்பிட்டார்.

எதிர்ப்பாளர்களின் கோரிக்கையை அங்கீகரிக்க தயார். சுதந்திர தேசத்தை கோரும் ஹூத்திகளின் நிர்பந்தம் காரணமாகவே மக்கள் என்னிடம் ராஜினாமாச் செய்ய கோருகின்றனர்.

அதிகாரம் நமக்கு தேவையில்லை. ஆனால், நாட்டில் வலுவான ஆட்சி தேவை. இரத்தக் களரியை அனுமதிக்க முடியாது என ஸாலிஹ் தெரிவித்தார்.

இந்த ஆண்டு கடைசியில் தேர்தலுக்குப் பிறகு பதவியிலிருந்து விலகுவதாக ஸாலிஹ் அறிவித்திருந்தார். இதனை கடந்த வியாழக்கிழமை எதிர்ப்பாளர்கள் நிராகரித்திருந்தனர்.

காஸ்ஸாவின் மீதான தடையை ராணுவம் முடிவுக்குக்கொண்டுவரவேண்டும்-இஃவானுல் முஸ்லிமீன் கோரிக்கை


கெய்ரோ:காஸ்ஸாவின் மீதான தடையை முடிவுக்குக்கொண்டுவர எகிப்தின் உயர் ராணுவ கவுன்சில் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென அந்நாட்டின் முக்கிய எதிர்கட்சியான இஃவானுல் முஸ்லிமீன் வலியுறுத்தியுள்ளது.மக்கள் விருப்பவாக்கெடுப்பை மதித்து புரட்சிக்கு ஆதரவளித்த ராணுவம் காஸ்ஸா விவகாரத்திலும், எகிப்து மக்களின் விருப்பத்திற்கிணங்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென இஃவானுல் முஸ்லிமீனின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காஸ்ஸா மக்களின் உயிரை ஆபத்திற்குள்ளாக்கும் தடையை முடிவுக்குக்கொண்டுவர அனைத்து அரபு நாடுகளும் தங்களது நிலைப்பாட்டை விளக்கவேண்டும்.காஸ்ஸாவிலுள்ள மக்களை இஸ்ரேல் ராணுவம் கொன்றொழிக்கும்பொழுது மெளனம் சாதித்த ஹுஸ்னி முபாரக்கின் யுகம் முடிந்துவிட்டது.

22 மார்ச் 2011

யெமனில் திருப்பம் – புரட்சியாளர்களுக்கு ஆதரவாக 3 ராணுவ கமாண்டர்கள்

ஸன்ஆ:யெமன் நாட்டில் நடந்துவரும் அரசுக்கெதிரான எதிர்ப்பு போராட்டத்தில் அந்நாட்டு ராணுவத்தின் 3 முக்கிய தளபதிகள் புரட்சியாளர்களுடன் இணைந்துள்ளனர்.

தலைநகரான ஸன்ஆவில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 52 பேர் இறந்தனர். இதனையடுத்து அமைச்சரவையை கலைத்தார் ஏகாதிபத்திய அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ். இந்நிலையில்தான் 3 ராணுவ தளபதிகள் ராணுவத்திலிருந்து விலகி புரட்சியாளர்களுடன் சேர்ந்துள்ளனர்.

ஜெனரல் முஹம்மது அலி முஹ்ஸின் அல் அப்மர், பிரிகேடியர்களான அலி முஹ்ஸின் ஸாலிஹ், ஹமீத் அல் குஸைபி ஆகியோர் புரட்சியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

வாஷிங்டனில் யெமன் தூதரக அதிகாரி இச்செய்தியினை உறுதிச் செய்துள்ளார். திங்கள் கிழமை அல்ஜஸீரா தொலைக்காட்சியில் தோன்றிய பிரிகேடியர் ஸாலிஹ் அமைதியாக போராட்டம் நடத்தும் மக்களை ராணுவம் அடக்கி ஒடுக்குவதாக சுட்டிக்காட்டினார்.

ராணுவ கமாண்டர்கள் புரட்சியாளர்களுடன் இணைந்ததற்கு எதிர் கட்சியினர் வரவேற்றுள்ளனர்.

19 மார்ச் 2011

போர்நிறுத்தம்:பேச்சுவார்த்தைக்கு தயார் – கத்தாஃபி

திரிபோலி:எதிர்ப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என லிபியா ஏகாதிபத்தியவாதி முஅம்மர் கத்தாஃபி அறிவித்துள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர் மூஸ்ஸா குஸா இதனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

லிபியாவில் போர் நிறுத்தத்தை பிரகடனபடுத்திய அவர் ஐ.நா தீர்மானத்தை அங்கீகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்ப்பாளர்களை அடக்கி ஒடுக்குவதை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு தயாராக வேண்டுமென்ற ஐ.நாவின் தீர்மானத்தை அங்கீகரிப்பதாக லிபியா அறிவித்துள்ளது.

எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல்கள் தொடர்ந்தால் லிபியாவின் மீது தாக்குதல் நடத்த அனுமதிக்கும் தீர்மானத்திற்கு ஐ.நா அனுமதியளித்தது. இச்சூழலில் அமெரிக்க ஆதரவுடன் லிபியாவின் மீது தாக்குதல் நடத்த பிரிட்டனும், பிரான்சும் தயாராக இருந்தன.

லிபியா:போராட்டத்தில் சிறிய முன்னேற்றம் – எதிர்ப்பாளர்கள்

திரிபோலி:கத்தாஃபி ஆதரவு ராணுவத்திற்கெதிரான போராட்டத்தில் சிறியதொரு வெற்றியை ஈட்டியுள்ளதாக எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த 48 மணிநேரத்திற்குள் ராணுவம் எதிர்ப்பாளர்களை தோற்கடிப்பார்கள் என கத்தாஃபியின் மகன் ஸைஃபுல் இஸ்லாம் அறிவித்ததைத் தொடர்ந்து எதிர்ப்பாளர்களின் அறிக்கை வெளியாகியுள்ளது.

எதிர்ப்பாளர்களின் வலுவான கட்டுப்பாட்டிலுள்ள பெங்காசியில் நேற்றும் கடுமையான மோதல் நிகழ்ந்தது. கத்தாஃபியின் ராணுவம் நடத்திய அக்கிரமத் தாக்குதலில் நகரத்தில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

அஜ்தாபியிலும், மிஸ்ரத்தாவிலும் இரு தரப்பினருக்குமிடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை கூறுகிறது.

துப்பாக்கிச் சண்டையில் 80 ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக எதிர்ப்பாளர்களின் தலைவர் தெரிவித்துள்ளார். அதேவேளையில், லிபியாவில் அவசரமாக விமானம் பறப்பதை தடைச்செய்ய ஐ.நாவில் லிபியாவின் துணை தூதரக பிரதிநிதி இப்ராஹீம் தபாஷி ஐ.நாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

17 மார்ச் 2011

பஹ்ரைன்:எதிர்ப்பாளர்களை விரட்டியடித்த ராணுவம் – 6 பேர் பலி

மனாமா:கடந்த ஒரு மாத காலமாக பஹ்ரைன் நாட்டின் தலைநகரான மனாமாவில் ப்யர்ல் சதுக்கத்தில் முகாமிட்டிருந்த எதிர்ப்பாளர்களை ராணுவம் விரட்டியடித்தது.

இன்று காலை துவங்கிய இந்நடவடிக்கைக்கு பஹ்ரைன் டிஃபன்ஸ் ஃபோர்ஸ் தலைமை வகித்தது. சாலைகளில் தடை ஏற்படுத்தி எதிர்ப்பாளர்களை தனிமைப்படுத்திய பிறகு ப்யர்ல் சதுக்கத்திலிருந்து அவர்களை விரட்டியது ராணுவம். இரண்டு மணிநேரத்திற்குள் அனைத்து எதிர்ப்பாளர்களும் அப்புறப்படுத்தப்பட்டனர்.

பிரதான மருத்துவமனையான ஸல்மானியா மெடிக்கல் காம்பள்க்ஸின் கட்டுப்பாட்டை ராணுவம் கைப்பற்றியது. நேற்று இரவு சிட்ராவில் எதிர்ப்பாளர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்குமிடையே கடுமையான மோதல் நடந்தது. இதில் எதிர்ப்பாளர்களில் 3 பேரும் போலீஸ்காரர் மூன்று பேரும் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட 3 போலீஸ்காரர்களில் இருவர் எதிர்ப்பாளர்களை விரட்டியடிக்கும் போது வாகனம் மோதி இறந்துள்ளனர். இதர பகுதிகளில் அமைதி நிலவுகிறது.

ராணுவம் பெங்காசியை நெருங்கியது: கத்தாஃபியின் மகன்

திரிபோலி:அரசு ராணுவம் எதிர்ப்பாளர்களின் வலுவான பிரதேசமான பெங்காசியை நெருங்கியுள்ளதாக ஏகாதிபத்தியவாதி கத்தாஃபியின் மகன் ஸைஃப் அல் இஸ்லாம் கூறியுள்ளார்.

இன்னும் இரண்டு தினங்களில் ராணுவம் வெற்றிப் பெறும் என ஸைஃபுல் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.

பிரான்சு நாட்டு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார் அவர். எதிர்ப்பாளர்களின் தலைவர்கள் இதுக்குறித்து இதுவரை கருத்துத் தெரிவிக்கவில்லை.

மிஸ்ரத்தாவில் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஐந்துபேர் கொல்லப்பட்டுள்ளனர். பெங்காசியில் நேற்று தாக்குதல் நடைப்பெற்றதாக அல்ஜஸீரா கூறுகிறது. கடுமையான மோதல் பெங்காசியில் காத்திருக்கிறது.