ஸன்ஆ:யெமன் நாட்டில் நடந்துவரும் அரசுக்கெதிரான எதிர்ப்பு போராட்டத்தில் அந்நாட்டு ராணுவத்தின் 3 முக்கிய தளபதிகள் புரட்சியாளர்களுடன் இணைந்துள்ளனர்.
தலைநகரான ஸன்ஆவில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 52 பேர் இறந்தனர். இதனையடுத்து அமைச்சரவையை கலைத்தார் ஏகாதிபத்திய அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ். இந்நிலையில்தான் 3 ராணுவ தளபதிகள் ராணுவத்திலிருந்து விலகி புரட்சியாளர்களுடன் சேர்ந்துள்ளனர்.
ஜெனரல் முஹம்மது அலி முஹ்ஸின் அல் அப்மர், பிரிகேடியர்களான அலி முஹ்ஸின் ஸாலிஹ், ஹமீத் அல் குஸைபி ஆகியோர் புரட்சியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வாஷிங்டனில் யெமன் தூதரக அதிகாரி இச்செய்தியினை உறுதிச் செய்துள்ளார். திங்கள் கிழமை அல்ஜஸீரா தொலைக்காட்சியில் தோன்றிய பிரிகேடியர் ஸாலிஹ் அமைதியாக போராட்டம் நடத்தும் மக்களை ராணுவம் அடக்கி ஒடுக்குவதாக சுட்டிக்காட்டினார்.
ராணுவ கமாண்டர்கள் புரட்சியாளர்களுடன் இணைந்ததற்கு எதிர் கட்சியினர் வரவேற்றுள்ளனர்.
சிரியாவில் யெமன் நாட்டின் தூதர் அப்துல் வஹ்ஹாப் தவாஃப் திங்கள் கிழமை ராஜினாமாச் செய்தார். ஜப்பானில் யெமன் தூதரும் ராஜினாமாச் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மக்கள் எழுச்சிப் போராட்டமும், ராணுவ அடக்குமுறையும் வலுவடைந்துள்ள யெமனில் ஞாயிற்றுக்கிழமை அமைச்சரவை கலைக்கப்பட்டிருந்தது. புதிய அமைச்சரவை உடனடியாக உருவாக்கப்படுமென அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
32 ஆண்டுகாலமாக அதிகாரத்தில் தொடரும் அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் மக்கள் எதிர்ப்பு போராட்டத்தை கொடூரமாக அடக்கி ஒடுக்குவதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

நன்றி (செய்தி ) :- தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக