05 ஏப்ரல் 2012

ஷைமா படுகொலை:10 லட்சம் முஸ்லிம் அல்லாத அமெரிக்க பெண்மணிகள் ஹிஜாப் அணிகின்றார்கள்!


வாஷிங்டன்:ஹிஜாப் அணிந்ததற்காக அமெரிக்காவில் கொடூரமாக கொலைச் செய்யப்பட்ட ஈராக் முஸ்லிம் பெண்மணி ஷைமா அல்வாதிக்கு ஆதரவையும், ஒற்றுமை உணர்வையும் வெளிப்படுத்தும் விதமாக 10 லட்சம் முஸ்லிம் அல்லாத அமெரிக்க பெண்மணிகள் ஹிஜாப் அணிகின்றார்கள்.
ஃபேஸ் புக்கில் ஆரம்பித்த பக்கத்தின் மூலமாக இந்த ஆதரவையும், ஒற்றுமை உணர்வையும் அமெரிக்க பெண்மணிகள் வெளிப்படுத்தியுள்ளார்கள். ஃபேஸ் புக்கில் இது தொடர்பான பக்கத்தை(pages) துவக்கிய ஏப்ரல் 2-ஆம் தேதியே 10 ஆயிரம் பேர் ஆதரவை தெரிவித்தனர். கடந்த மார்ச் மாதம் 21-ஆம் தேதி ஷைமா அல் வாதி தனது சொந்த வீட்டில் வைத்து இஸ்லாத்தின் விரோதிகளால் கொடூரமாக கொலைச் செய்யப்பட்டார். “நீ பயங்கரவாதி! உனது நாட்டிற்கு திரும்பிச்செல்!” என்று எழுதப்பட்ட குறிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்டது.

நன்றி (செய்தி ) :- தூது ஆன்லைன் 

ஸ்லீப் ஆப்னியா(sleep apnea)



Sleep apnea.
‘ஸ்லீப் ஆப்னியா(sleep apnea)’ இந்த பாதிப்பு இருப்பவர்களுக்கு கூடவே இரத்த அழுத்தம், சர்க்கரைப் பாதிப்புகளும் இருந்தால், அவர்கள் முதலில் ஸ்லீப் ஆப்னியா நோயைக் கட்டுப்படுத்த சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகே அவர்களால் ரத்த அழுத்தத்தையும் சர்க்கரையையும் கட்டுப்படுத்த முடியும்!
அது என்ன ஸ்லீப் ஆப்னியா(sleep apnea)?
தூக்கத்தின்போது மூச்சு நின்றுவிடுவது ஸ்லீப் ஆப்னியா(sleep apnea). ஸ்லீப் ஆப்னியா நோயின் முக்கிய அறிகுறி குறட்டை. ஆனால், குறட்டை பிரச்னை இருக்கும் எல்லோருக்கும் ‘ஸ்லீப் ஆப்னியா’ நோய் இருக்கிறது என்று சொல்ல முடியாது.
அப்படி என்றால் இது சாதாரணக் குறட்டையா அல்லது நோய் ஆபத்தைக் குறிக்கும் குறட்டையா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?

டெல்லியை நோக்கி முன்னேறிய ராணுவ பிரிவுகள்:செய்தியில் உறுதியாக உள்ளோம் – இந்தியன் எக்ஸ்பிரஸ்!

புதுடெல்லி:கடந்த ஜனவரி மாதம் தரைப்படையின் இரண்டு யூனிட்டுகள் டெல்லியை நோக்கி ராணுவத்தின் 2 பிரிவுகள் வந்ததாக வெளியிட்ட செய்தியில் உறுதியாக உள்ளோம் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை கூறியுள்ளது.

ஆறுவாரம் நீண்ட புலனாய்வுக்கு பிறகே இச்செய்தியை வெளியிட்டோம் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் நிர்வாகிகள் பத்திரிகைச் செய்தியில் கூறியுள்ளனர்.

ஜனவரி 16-ஆம் தேதி நள்ளிரவில் நடந்த ராணுவ பிரிவுகளின் நகர்வு அரசுக்கு தெரிவிக்காமலேயே நடந்துள்ளது. நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலமாக இச்செய்தி தங்களுக்கு கிடைத்ததாகவும், ஆனால், அவர்களை பாதுகாப்பதற்கான பொறுப்பு உள்ளதால் அவர்களது பெயரை வெளியிட இயலாது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் எடிட்டர் இன் சீஃப் சேகர் குப்தாவின் தலைமையிலான குழு இச்சம்பவம் குறித்து செய்தியை தயாராக்கியது.

நன்றி (செய்தி ) :- தூது ஆன்லைன் , தட்ஸ்தமிழ்

இந்தியாவில் புரட்சிக்கு ராணுவம் முயற்சி: நாடு அதிர்ந்தது!

புதுடெல்லி:மத்திய அரசுக்கும், பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் தெரியாமல் தரைப்படையின் 2 யூனிட்டுகள் டெல்லியை நோக்கி முன்னேறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியான செய்தி தேசிய அரசியலை மிகவும் உலுக்கியுள்ளது பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், ராணுவம் ஆகியோர் செய்தி ஆதாரமற்றது, பொய்யானது என விளக்கமளித்தாலும் மர்மம் இதுவரை விலகவில்லை.

பாதுகாப்பு செயலாளரையும், ராணுவ துணைத் தலைவரையும் பாராளுமன்ற நிலைக்குழு விசாரித்தது. பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி பதவி விலகவேண்டும் என்று பா.ஜ.க கோரிக்கை விடுத்துள்ளது.

பிறந்த நாள் தேதி குறித்த சர்ச்சையில் தரைப்படை தலைமை தளபதி வி.கே.சிங் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தை அணுகியதற்கு அடுத்த நாள் ஜனவரி மாதம் 16-ஆம் தேதிக்கும், 17-ஆம் தேதிக்கும் இடையில் ராணுவத்தின் 2 யூனிட்டுகள் டெல்லியை நோக்கி முன்னேறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டது.

ஹரியானாவின் ஹிசார் பகுதியில் இருந்த mechanised infantry படையும், ஆக்ராவிலிருந்து Para Brigade படையும் டெல்லிக்கு அருகே கொண்டு வரப்பட்டன.
<--!more-->
அதே போல ஆக்ராவை தலைமையிடமாகக் கொண்ட 50 Para Brigade என்ற படைப் பிரிவும் பல்வேறு ராணுவ விமானங்களில் டெல்லிக்கு வந்திறங்கியது. அந்தப் படைகளை டெல்லிக்குக் கொண்டு வருவது குறித்து மத்திய அரசிடமோ, பாதுகாப்பு அமைச்சகத்திடமோ ராணுவம் தெரிவிக்கவில்லை. இந்தத் தகவல்களை மத்திய உளவுப் பிரிவான ஐபி தான் இரவோடு இரவாக மத்திய அரசின் பார்வைக்குக் கொண்டு சென்றுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் ஆண்டனிக்கும் பிரதமருக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட உடனடியாக ராணுவ பிரிவுகளின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

ராணுவப் புரட்சி குறித்த செய்தியை பிரதமர் மன்மோகன்சிங் திட்டவட்டமாக மறுத்துள்ளார். குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருதுகளை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவரிடம் ராணுவத்தின் புரட்சிக்கான முயற்சி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு அவர் பதிலளிக்கையில், “இந்த செய்தி பீதியைக் கிளப்புவதற்கென்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த செய்தியை அப்படியே உண்மையென்று கருதத் தேவையில்லை. தளபதி பதவி என்பது மிகவும் போற்றுதலுக்கு உரியது. அந்தப் பதவிக்கு இழுக்கு ஏற்படும் வகையில் எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.” என்றார்.

ராணுவப் புரட்சி நடத்த முயற்சி என்ற செய்தி ஆதாரமற்றது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி கூறினார்.

விசாகப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த அவரிடம் செய்தியாளர்கள் இது பற்றி கேள்வி எழுப்பியபோது அவர் கூறியது:

இந்த வித அணிவகுப்பு வாடிக்கையானதுதான். அன்று அசாதாரணமாக எதுவுமே நடக்கவில்லை. நமது ராணுவத்தின் தேசப்பற்று குறித்து எங்களுக்குப் பூரண நம்பிக்கை இருக்கிறது. இந்திய ஜனநாயகத்துக்கு ஊறு விளைவிக்கும் எந்த செயலையும் அவர்கள் செய்ய மாட்டார்கள். அவர்கள் உண்மையான தேசப் பற்று உள்ளவர்கள். எல்லைப் பகுதியில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து நம் நாட்டைப் பாதுகாக்கிறார்கள். நமது ராணுவம், கடற்படை, விமானப் படை, கடலோரக் காவல் படை ஆகியவற்றை நினைத்தால் எனக்குப் பெருமையாக இருக்கிறது. அவர்களுடைய நாட்டுப்பற்று குறித்து எந்த சந்தேகமோ கேள்வியோ யாருக்கும் எழத் தேவையில்லை. ராணுவப் புரட்சிக்கு முயற்சி நடந்தது என்பது போன்ற செய்தி தவறானது. அதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் நமது பாதுகாப்புப் படைகளின் கௌரவத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் பத்திரிகைகள் நடந்து கொள்ளக் கூடாது என்றார்.

பாதுகாப்புத் துறை இணையமைச்சர் பல்லம் ராஜு கூறுகையில், இது போன்ற செய்தி வெளியிடுவது பொறுப்பற்ற செயல் என்றும் தேச நலனுக்கு விரோதமானது என்றும் கூறினார்.

இச்செய்தி குறித்து ராணுவம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது:

அடிப்படையற்ற தகவல். ராணுவப் படையினரின் வழக்கமான இடப்பெயர்வு நடவடிக்கை தான் அன்றும் நடந்துள்ளது. அதை பெரிதுபடுத்தி திரித்து செய்தி வெளியாகியுள்ளது. இந்திய ராணுவம் என்பது பெருமைக்கும், கண்ணியத்துக்கும் உரியது. அரசாங்கத்தின் நிர்வாக விஷயங்களில் எக்காலத்திலும் குறுக்கிடவோ, தலையிடவோ ராணுவத்துக்கு துளி கூட விருப்பம் இருந்ததில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இச்செய்தி குறித்து பாரதீய ஜனதா கட்சி கருத்து தெரிவிக்கையில், ‘இந்த செய்தி குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்திட வேண்டும். ராணுவத்துக்கும், அரசுக்கும் இடையில் இடைவெளி அதிகரிக்க காரணமே அந்தோணி தான். அவர் பதவி விலக வேண்டும். அதை அவர் செய்யாவிட்டால், பிரதமர் அவரை பதவி நீக்கம் செய்யவேண்டும்’ என்று கூறியுள்ளது.

நாட்டின் பாதுகாப்பை பாதிக்கும் வகையில் செய்தி வெளியிட்டதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியை சிக்கலில் மாட்டவைத்துள்ள 3-வது சம்பவம் இதுவாகும். முன்னர் பிறந்த தேதி சர்ச்சையில் நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக தரைப்படை தலைமை தளபதி பாதுகாப்பு அமைச்சகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தை அணுகினார். தாத்ரா ட்ரக்குகள் வாங்க 14 கோடி ரூபாய் லஞ்சம் அளிக்க முயன்றது குறித்து வி.கே.சிங் செய்தி வெளியிட்டது 2-வது சம்பவமாகும்.

நன்றி (செய்தி ) :- தூது ஆன்லைன்

பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 1654 ஏக்கர் நிலம் வக்ப் வாரியத்திற்கு சொந்தமானது – ஆந்திர உயர்நீதிமன்றம்

ஹைதராபாத்:ஆந்திர அரசால் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட 1654 ஏக்கர் நிலம் அனைத்தும் வக்ப் வாரியத்திற்குச் சொந்தமானது என்று ஆந்திர உயர்நீதிமன்றம் கடந்த செவ்வாய் அன்று தீர்ப்பு ஒன்றைக் கூறியுள்ளது.

வக்ப் நிலம் தொடர்பாக அந்நிலத்தை வாங்கிய லான்கோ ஹில்ஸ் நிறுவனமும் மற்றும் இதர பன்னாட்டு நிறுவனங்களும் மனிகொண்டா கிராமத்தில் உள்ள 32,000 கோடி மதிப்பிலான வக்ப் நிலங்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரின அந்த மனுவை உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

வி.வி.எஸ்.ராவ் மற்றும் ஆர்.கண்டா ராவ் அடங்கிய டிவிசன் பெஞ்ச் 1654 ஏக்கர் நிலத்தை தர்கா ஹஜரத் ஹுசைன் ஷா வலி என்கிற வக்ப் வாரியத்திற்கு சொந்தமானது என்றும் அது அரசிற்கு சொந்தமான நிலமல்ல என்றும் தெரிவித்துள்ளது. வக்ப் வாரியத்தின் சார்பாக இந்த வழக்கை நடத்திய மசூத் கான் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் நீதிமன்றம் இதனை தெரிவித்தார்.

முன்னால் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசு ஆந்திர உள்கட்டமைப்பு வாரியத்தின் கீழ் துபாய் நிறுவனமான ஈமாருக்கு 400 ஏக்கரும், மென்பொருள் நிறுவனங்களான மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு 54.79 ஏக்கரும், விப்ரோ நிறுவனத்திற்கு 30 ஏக்கரும், போலாரிஸ் நிறுவனத்திற்கு 7.89 ஏக்கரும் அளித்தது. பின்னர் காங்கிரஸ் தலைமையிலான ராஜசேகர ரெட்டியின் அரசு காங்கிரஸ் எம்.பி ஒருவரின் நிறுவனமான லான்கோ ஹில்ஸ் நிறுவனத்திற்கு 108.10 ஏக்கர் நிலத்தை அளித்தது.

இமாம்களுக்கு மானியம் – மம்தா அறிவிப்பு

கொல்கத்தா:எதிர்வரும் பஞ்சாயத் தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் மமதாவின் அரசு முஸ்லிம் வாக்கு வங்கியை கவர பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இமாம்களுக்கு மாதம்தோறும் ரூபாய் 2500 மாநில வக்ப் போர்டின் மூலம் மானியமாக வழங்க முடிவு செய்துள்ளது.

இது குறித்து மமதா முஸ்லிம் தலைவர்களிடம் தெரிவிக்கையில்; இதற்கென்று அரசு அதிகாரிகள் மற்றும் இமாம்களைக் கொண்டு தனிக்குழு உருவாக்கப்படும் என்றும் அவர்கள் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த உரிய வழிகாட்டுதல்களை அளிப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது; நிலம் மற்றும் வீடு இல்லாத இமாம்களுக்கு “நிஜோ பூமி ,நிஜோ க்ரிஹா” என்ற திட்டத்தின் கீழ் நிலம் மற்றும் வீடுகள் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் மேற்கு வங்காளத்தில் 30,000 திற்கும் மேற்பட்ட இமாம்கள் உள்ளனர் என்றும் அவர்களில் பெரும்பாலானோர் வீடுகள் இல்லாமல் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் விரும்பினால் “நிஜோ பூமி ,நிஜோ க்ரிஹா” என்ற திட்டத்தின் மூலம் 3 கோட்டாக்கள் நிலம் வழங்கப்படும் என்றும் மேலும் வீடு கட்டிக்கொள்ள அரசு உதவி செய்யும் என்றும் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்; தனது அரசு முஸ்லிம் சமூகத்திற்கு இடஒதுக்கீடு வழங்கும் என்பதையும் கூறினார். முன்னர் இருந்த வலதுசாரி அரசு மற்ற சிறுபான்மை சமூகத்திற்கு அளித்துள்ள இடஒதுக்கீடு குறித்து தெரிவிக்கையில் முன்னர் இருந்த அரசு சட்ட விதிமுறைகளை மீறியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தனது அரசு 10,000 மதரசாக்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது என்று தெரிவித்துள்ள அவர் தனது அரசு அந்த மதரசாக்களுக்கு நிதி அளிக்காது என்றும் எனினும் அங்கீகாரம் கிடைப்பதன் மூலம் அவை மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களின் மூலம் பயன் அடைய முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.


நன்றி (செய்தி ) :- தூது ஆன்லைன்

ராணுவம் ஆட்சியை கவிழ்க்க முயன்றதா? – அடிப்படையற்ற தகவல் என்று மத்திய அரசு!

புதுடெல்லி:அரசுக்கு தெரிவிக்காமல் தரைப்படையின் இரண்டு ராணுவ யூனிட்டுகளை டெல்லியை நோக்கி அனுப்பியதாக கூறப்படும் செய்தி தவறானது, அடிப்படையற்றது என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. இதுத்தொடர்பாக த இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தி தவறானது, திரிக்கப்பட்டது என்று பாதுகாப்புத்துறைச் செயலாளர் சசிகாந்த் ஷர்மா கூறியுள்ளார். ராணுவ‌ம் வ‌ழ‌க்க‌மாக‌ ந‌ட‌த்தும் ப‌யிற்சி என்று த‌ரைப்ப‌டையும் ம‌றுப்பு தெரிவித்துள்ள‌து.

ஹரியானாவின் ஹிசார் பகுதியில் இருந்த மெக்கனைஸ்டு இன்பான்ட்ரி படையும், ஆக்ராவிலிருந்து பாரா பிரிகேட் படையும் டெல்லிக்கு அருகே கொண்டு வரப்பட்டன.

இதில் mechanised infantry படை என்பது டேங்குகள், கவச வாகனங்களை உள்ளடக்கியது. லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே. சிங் தலைமையிலான இந்தப் படை ராணுவத்தின் மிக முக்கியமான 1 Corps தாக்குதல் படைப் பிரிவாகும். மதுராவை தலைமையகமாகக் கொண்ட இந்தப் படையின் ஹிசார் பிரிவு படை டெல்லிக்கு 150 கி.மீ. தொலைவில் நிலை நிறுத்தப்பட்டது ஏன் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. டேங்குகளை கொண்டு செல்லும் 48 வாகனங்கள், ரஷ்ய தயாரிப்பான கவச வாகனங்கள் ஆகியவையும் டெல்லிக்கு அருகே நிலை நிறுத்தப்பட்டன.

அதே போல ஆக்ராவை தலைமையிடமாகக் கொண்ட 50 Para Brigade என்ற பாராடுசூட் படைப் பிரிவும் பல்வேறு ராணுவ விமானங்களில் டெல்லியில் வந்திறங்கியது.

25 பிப்ரவரி 2012

ஹஜ் மற்றும் உம்ரா விற்கு முறையான முழுமையான வழிகாட்டுதல்(நமதூர் ராஜா தெரு அன்சாரி அவர்கள் )


எல்லாம் வல்லா அல்லாஹ்வின் நல்லாருள் மற்றும் ஹாஜிகளின் நல் ஆதரவினாலும் 7ஆம் ஆண்டு பூர்த்திசெய்து 8 ஆம் ஆண்டில் நுழைகிறேன்


ஹஜ் மற்றும் உம்ரா விற்கு முறையான முழுமையான வழிகாட்டுதல்

மக்கா மற்றும் மதீனாவில் மிக அருகில் தாங்கும் இட வசதி

புனித குரான் ஹதீஸ் அடிப்படையில் வழிகாட்டுதல்

சைவம் மற்றும்  அசைவம் தமிழக உணவு நம் தமிழ்நாடுசமையல்காரர் ஏற்பாடு 


மேலும் விபரம் அணுக

அன்சாரி ( நீடூர் ராஜா தெரு )
மக்காஹ் ,
அலைபேசி : : +966 564008897 

20 பிப்ரவரி 2012

தொழுகையை விட்டவன்

புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக.

தொழுகையை விட்ட என் சோதரனே! தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவதில் அலட்சியமாக இருக்கும் என் நன்பனே! நீ உன் மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கின்றாய்.. உன்னைப் படைத்து உணவளித்து இரட்சித்துக் கொண்டிருக்கும் உன் றப்புக்கு ஸுஜூது செய்யும் அவசியம் கூட இல்லாதளவுக்கு – அவனது அருளே தேவையில்லாத அளவுக்கு நீ உன் விடயத்தில் தன்னிறைவு கண்டு விட்டாயோ! உனக்கு ஏற்படும் இன்னல்களில் துன்பங்களில் அவனது உதவியே தேவைப்படாதளவுக்கு நீ அவ்வளவு ஆற்றல் பெற்று விட்டாயோ!.

அல்லது உன்னைப் பிடித்திருக்கின்ற கர்வமும் ஆணவமும் படைத்தவனுக்கு சிரம் சாய்க்கத் தடையாக இருக்கின்றதோ! நீ பெற்ற பதவியும் சொத்து செல்வங்களும் படைத்தவனை நினைத்துப் பார்க்க அவகாசம் தராதிருக்கின்றனவோ!

அல்லது உன்னிடம் இருக்கின்ற ஷைத்தான் உன்னை ஆக்கிரமித்து இறைவனை மறக்கச் செய்து விட்டானோ! உனது மனச் சாட்சியை சாகடித்து விட்டு உன் உள்ளத்தில் குடியேறி உன்னை வழிகெடுத்து நரகில் தள்ளத் திட்டமிட்டிருக்கின்றானோ!

உனக்காக எப்போது நீ அழப் போகிறாய் ?

மனோயிச்சைகளுக்கு முன்னால் மண்டியிட்டு - நீ 
பாவங்களுக்கு முன்னால் பலவீனப்பட்டு நிற்கும்போதா ?

தவறை கண்ணெதிரே கண்டும்
தட்டிக் கேட்க தைரியம் இல்லாதபோதா ?

நல்லறங்களின் நன்மை அறியாமல் - அவற்றை
நகைப்புக்குரியதாய் நீ பார்க்கும்போதா ?

குர்ஆன் ஓதக்கேட்டும் அழுகை வராமல் - கேளிக்கையின்
கிளைமாக்ஸ் காட்சிகளுக்காக கண்ணீர் விடும்போதா ?

அறச்செயல்களில் ஆர்வம் கொள்ளாமல் - அழியப்போகும்
அற்ப இன்பத்தை நாடி நீ ஒடும்போதா ?

வணக்கமாகத் தெரிந்த வழிபாடுகள் எல்லாம் - உனக்கு
வழக்கமான சடங்குகளாக மாறும்போதா ?

சுகம் தந்த வழிபாடுகள் யாவும் - உனக்கு
சுமையாகத் தெரியும்போதா ?

இன்னல்கள் நீங்க இரவின் பின்னேரம் (தஹஜ்ஜுத் நேரம் ) இருந்தும்
பகல் முழுவதும் நீ துக்கத்தால் துடிக்கும்போதா ?

பொன்னான பொழுதுகள் வீனாகிப்போனதே என்று - நீ
வருந்தாமல் வாளாவிருக்கும்போதா?

ஆயுளின் விளிம்பில் நீ அசைந்து கொண்டிரும்போது
பாதை மாறி விட்டதை எண்ணி வருந்தும்போதா ?

அழு ! மீழு !! உன் அழுகையும் புலம்பலும் - அல்லாஹ்வின்
அர்ஷை தட்டும் வரை அழு !!!

இன்னமும் தௌபாவின் வாசல் திறந்தே இருக்கிறது - உன்
உயிர் உனது தொண்டை வாசலை அடையாதவரை !

உனக்காக எப்போது நீ அழப் போகிறாய் ?

- அரபி கவிதை ஒன்றின் தமிழாக்கம்

முன்மாதிரி முஸ்லிம் பெண்கள்

மௌலவி அலி அக்பர் உமரி
அக்ரபியா தஃவா நிலையம், சவூதி அரேபியா
இன்றைய கால கட்டத்தில் பெண்கள், நாகரீகம் என்ற பெயரில் பலவாறு வழிகெட்டுப் போய் உள்ளனர். பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று இஸ்லாம் மிக அழகாக கூறியுள்ளது. அதைப் பற்றிக் காண்போம்.
கணவனிடம் நடந்து கொள்ளும் முறை:
1.கணவனுக்கு கட்டுப்படுதல்:
எந்தப் பெண் தன் கணவன் இல்லாத சமயத்தில் எதையெல்லாம் பாதுகாக்க வேண்டுமோ அதையெல்லாம் பாதுகாத்து, கணவனுக்கு கட்டுப்பட்டு இருக்கின்றாளோ அவளே ‘ஸாலிஹான பெண்’ என்று அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன் 4:34)
ஒரு நபித்தோழர் நபி (ஸல்) அவர்களிடம் எந்த பெண் சிறந்த பெண்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அவன் பார்க்கும் போது அவனை சந்தோஷப்படுத்துகிறாளோ அவளே சிறந்தவள் என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: நஸயீ)
2.கஷ்டத்திலும் கணவனுக்கு உதவி செய்தல்:
நபி (ஸல்) அவர்கள் ஹிரா குகையில் ஜிப்ரீல் (அலை) அவர்களை 600 இறக்கைகளை கொண்டவர்களாக வானத்தையும் பூமியையும் நிரப்பியவர்களாக கண்ட பொழுது மிகவும் பயந்தவராய் தன் மனைவி கதீஜா (ரலி) அவர்களிடம் ஓடி வந்து ‘என்னை போர்த்துங்கள், என்னை போர்த்துங்கள்’ என்று கூறினார்கள். உடனே கதீஜா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை போர்த்தி ஆசுவாசப்படுத்திய பின் நடந்ததை விபரமாக கேட்டு பின்னர் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள்.
‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ் உங்களை ஒரு போதும் கேவலப்படுத்த மாட்டான். ஏனென்றால் நீங்கள் சொந்தங்களை அனுசரித்து, மக்களின் கஷ்டங்களை சுமந்து, ஏழை எளியோருக்கு உதவி செய்து விருந்தாளிகளை கண்ணியப்படுத்துகிறீர்கள்’ என்று ஆறுதல் கூறினார்கள். (நூல்: புகாரி)