05 ஏப்ரல் 2012

இமாம்களுக்கு மானியம் – மம்தா அறிவிப்பு

கொல்கத்தா:எதிர்வரும் பஞ்சாயத் தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் மமதாவின் அரசு முஸ்லிம் வாக்கு வங்கியை கவர பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இமாம்களுக்கு மாதம்தோறும் ரூபாய் 2500 மாநில வக்ப் போர்டின் மூலம் மானியமாக வழங்க முடிவு செய்துள்ளது.

இது குறித்து மமதா முஸ்லிம் தலைவர்களிடம் தெரிவிக்கையில்; இதற்கென்று அரசு அதிகாரிகள் மற்றும் இமாம்களைக் கொண்டு தனிக்குழு உருவாக்கப்படும் என்றும் அவர்கள் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த உரிய வழிகாட்டுதல்களை அளிப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது; நிலம் மற்றும் வீடு இல்லாத இமாம்களுக்கு “நிஜோ பூமி ,நிஜோ க்ரிஹா” என்ற திட்டத்தின் கீழ் நிலம் மற்றும் வீடுகள் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் மேற்கு வங்காளத்தில் 30,000 திற்கும் மேற்பட்ட இமாம்கள் உள்ளனர் என்றும் அவர்களில் பெரும்பாலானோர் வீடுகள் இல்லாமல் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் விரும்பினால் “நிஜோ பூமி ,நிஜோ க்ரிஹா” என்ற திட்டத்தின் மூலம் 3 கோட்டாக்கள் நிலம் வழங்கப்படும் என்றும் மேலும் வீடு கட்டிக்கொள்ள அரசு உதவி செய்யும் என்றும் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்; தனது அரசு முஸ்லிம் சமூகத்திற்கு இடஒதுக்கீடு வழங்கும் என்பதையும் கூறினார். முன்னர் இருந்த வலதுசாரி அரசு மற்ற சிறுபான்மை சமூகத்திற்கு அளித்துள்ள இடஒதுக்கீடு குறித்து தெரிவிக்கையில் முன்னர் இருந்த அரசு சட்ட விதிமுறைகளை மீறியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தனது அரசு 10,000 மதரசாக்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது என்று தெரிவித்துள்ள அவர் தனது அரசு அந்த மதரசாக்களுக்கு நிதி அளிக்காது என்றும் எனினும் அங்கீகாரம் கிடைப்பதன் மூலம் அவை மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களின் மூலம் பயன் அடைய முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.


நன்றி (செய்தி ) :- தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக