திரிபோலி:அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படைகள் விமானத் தாக்குதல் நடத்திவரவே, முஅம்மர் கத்தாஃபியின் எதிர்ப்பாளர்கள் மேலும் பல நகரங்களின் கட்டுப்பாட்டை தம் வசம் கொண்டுவந்துள்ளனர்.
தற்பொழுது கத்தாஃபியின் ஆதிக்கத்திலுள்ள நகரங்களை நோக்கி எதிர்ப்பாளர்கள் நகர்ந்துக் கொண்டிருக்கின்றார்கள். உகைலா, ப்ரீகா ஆகிய எண்ணெய் நகரங்களை எதிர்ப்பாளர்கள் கத்தாஃபியின் ராணுவத்திடமிருந்து நேற்று மீட்டனர்.
முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான அஜ்தாபியா ஏற்கனவே கத்தாஃபியின் ராணுவம் இழந்திருந்தது. கூட்டணி படைகளின் விமானத் தாக்குதலை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு எதிர்ப்பாளர்கள் லிபியாவின் மேற்கு பகுதியை நோக்கி முன்னேறுகிறார்கள்.
எண்ணெய் வளமிக்க ராஸ்லனூஃப் நகரத்தையும் எதிர்ப்பாளர்கள் கைப்பற்றியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முக்கியத்துவம் வாய்ந்த எண்ணெய் ஏற்றுமதி நகரங்களை கைப்பற்றியதை எதிர்ப்பாளர்கள் சாதனையாக கருதுகிறார்கள்.
கத்தாஃபியின் ஆதரவாளர்களுடைய கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் எதிர்ப்பாளர்களுக்கு பெரிய அளவிலான எதிர்ப்பை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படவில்லை என அல்ஜஸீரா தெரிவிக்கிறது.
அதேவேளையில், பிரான்சு, பிரிட்டன் படையினரின் தலைமையில் பலத்த குண்டுவீச்சு தொடர்கிறது. தாக்குதலில் ராணுவத்தினரும், பொதுமக்களும் கொல்லப்பட்டதாகவும், மக்கள் வசிக்கும் இடங்களிலும் கூட்டணி படையினர் குண்டு வீசுவதாகவும் அரசு செய்தித் தொடர்பாளர் மூஸா இப்ராஹீம் அறிவித்துள்ளார்.
இப்பிரச்சனையில் தலையிட ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் உடனடியாக கூட்டத்தை கூட்டவேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். லிபியாவின் ஐந்து விமானங்களையும், இரண்டு ஹெலிகாப்டர்களையும் கூட்டணி படை தகர்த்துள்ளது.

நன்றி (செய்தி ) :- தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக