அஸதாபாத்:ஆப்கானிஸ்தானில் 50 போலீஸ்காரர்களை தாலிபான் போராளிகள் கடத்திச் சென்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குனார் மாகாணத்திலுள்ள சபாதாராவிலிருந்து சம்பளம் வாங்கிவிட்டு திரும்பிய போலீசாரை தாலிபான் போராளிகள் வழியில் தடுத்து நிறுத்தி கடத்திச் சென்றுள்ளனர்.
நூரிஸ்தான் மாகாணத்தைச்சார்ந்த போலீஸார் அண்மையில்தான் பயிற்சியை முடித்துவிட்டு ஆப்கான் தேசிய போலீஸ் படையில் சேர்ந்துள்ளனர்.
பாகிஸ்தானின் எல்லையொட்டிய மாகாணங்களான குனாரும், நூரிஸ்தானும் தாலிபான் ஆதிக்கத்தில் உள்ளன. ஏழு முக்கிய பிரதேசங்களுக்கான பாதுகாப்பு பொறுப்பை நேட்டோ, ஆப்கானிஸ்தான் ராணுவத்தினரிடம் ஒப்படைக்கவிருக்கும் வேளையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
2014-ஆம் ஆண்டில் அனைத்து வெளிநாட்டு ராணுவத்தினரும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுவார்கள் என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.
போலீஸ்காரர்களை கடத்திச் சென்ற தகவலை தாலிபான் போராளிகளின் செய்தித் தொடர்பாளர் ஸபீயுல்லாஹ் முஜாஹித் ஊடகங்களுக்கு தெரிவித்தார். போலீஸ் செய்தித் தொடர்பாளரும் இச்சம்பவத்தை உறுதிச் செய்துள்ளார்.

நன்றி (செய்தி ) :- தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக