ஸன்ஆ:பதவியிலிருந்து விலக தயார் என யெமன் அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் அறிவித்துள்ளார். பொறுப்பானவர்களிடம் மட்டுமே அதிகாரத்தை ஒப்படைப்பேன் என தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரை நிகழ்த்தவே ஸாலிஹ் குறிப்பிட்டார்.
எதிர்ப்பாளர்களின் கோரிக்கையை அங்கீகரிக்க தயார். சுதந்திர தேசத்தை கோரும் ஹூத்திகளின் நிர்பந்தம் காரணமாகவே மக்கள் என்னிடம் ராஜினாமாச் செய்ய கோருகின்றனர்.
அதிகாரம் நமக்கு தேவையில்லை. ஆனால், நாட்டில் வலுவான ஆட்சி தேவை. இரத்தக் களரியை அனுமதிக்க முடியாது என ஸாலிஹ் தெரிவித்தார்.
இந்த ஆண்டு கடைசியில் தேர்தலுக்குப் பிறகு பதவியிலிருந்து விலகுவதாக ஸாலிஹ் அறிவித்திருந்தார். இதனை கடந்த வியாழக்கிழமை எதிர்ப்பாளர்கள் நிராகரித்திருந்தனர்.
பொருளற்ற வார்த்தைகளை அதிபர் உபயோகிப்பதாகவும், அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயாரில்லை எனவும் எதிர்கட்சி தலைவர் முஹம்மது அல் ஸப்ரி தெரிவித்தார்.
ஸாலிஹின் ராஜினாமாவைக்கோரி பல்லாயிரக்கணக்கான மக்கள் நேற்று ஸன்ஆவில் நடந்த பேரணியில் பங்கேற்றனர்.

நன்றி (செய்தி ) :- தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக