திருச்சி, மார்ச் : அ.தி.மு.க. ஆட்சி அமைந்தால் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு விகிதம் உயர்த்தப்படும் என்றார் அக் கட்சியின் பொதுச் செயலர் ஜெ.ஜெயலலிதா.
திருச்சியில் இரண்டாம் நாளாக வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அவர் மேலும் பேசியதாவது:
கடந்த 5 ஆண்டுகளில் தமிழக மக்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, விலைவாசி உயர்வு, கடுமையான மின் வெட்டு, சட்டம்- ஒழுங்கு சீர்குலைவு உள்பட பல்வேறு பிரச்னைகளால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, இந்தத் தேர்தல் இத்தகைய பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் அமைய வேண்டும். அது, மக்கள் கையில்தான் உள்ளது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கருணாநிதிக்கு இல்லை. கபட நாடகங்கள் மூலம் மக்களை ஏமாற்ற நினைக்கிறார் கருணாநிதி. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கருணாநிதி மக்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை.
சிறுபான்மையினருக்குத் தனி இட ஒதுக்கீடு கிடைக்கும் வகையில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மூலம் எனது ஆட்சிக் காலத்தில்தான் சட்டம் திருத்தி அமைக்கப்பட்டது.
ஆனால், 2006-ம் ஆண்டில் கருணாநிதி முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, இஸ்லாமியர்கள் இடம் பெறாத வகையில் இந்தச் சட்டம் திருத்தப்பட்டது. மேலும், கருணாநிதி தன்னிச்சையாக இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை அறிவித்தார். என்றாலும், இதுவும் முறையாக அமல்படுத்தப்படவில்லை. அ.தி.மு.க. ஆட்சி அமைந்தால் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு விகிதம் உயர்த்தி அறிவிக்கப்படும். மேலும், அது முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பதும் கண்காணிக்கப்படும். இஸ்லாமியர்களின் இதரக் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும்.
தவிர, அனைத்துக் கிராமங்களுக்கும் சாலை வசதி, பேருந்து வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தித் தரப்படும்.
ஒரு வாக்குக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகக் கொடுக்கக் கூடிய அளவுக்கு உங்களது பணத்தை சுரண்டியிருக்கின்றனர். அதில் ஒரு சில நூறுகளை வாக்காளர்களுக்கு கொடுத்து வாக்குகளைப் பெற வருவார்கள்.
அதைத் தயங்காமல் வாங்கிக் கொள்ளுங்கள். ஏனெனில், அது உங்களுடைய பணம்தான். எனவே, பணத்தை வாங்கிக் கொண்டு எம்.ஜி.ஆர். ஆட்சி மலர அ.தி.மு.க.வுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் வாக்களியுங்கள் என்றார் ஜெயலலிதா.

நன்றி (செய்தி ) :- தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக