26 மார்ச் 2011

முஅம்மர் கத்தாஃபி இப்பொழுதும் வீரர்தான் – வாஷிங்டன் போஸ்ட்

வாஷிங்டன்:அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படையினர் கடந்த ஏழுதினங்களாக லிபியா மண்ணில் தாக்குதல் நடத்திவந்த பொழுதிலும் முஅம்மர் கத்தாஃபியின் மக்கள் ஆதரவில் பெரியதொரு மாற்றம் ஒன்றும் ஏற்படவில்லை என வாஷிங்டன் போஸ் கூறுகிறது.

லிபியா குடிமக்களில் பலரும் கத்தாஃபியை தற்பொழுதும் வீரத் திருமகனாகத்தான் பார்க்கிறார்கள்.

நகரங்களில் பெரும்பாலோர் கத்தாஃபிக்கு எதிராக அணி திரண்டுள்ளனர். ஆனால், கிராமப்புறங்களில் வாழும் பழங்குடியின மக்கள் கத்தாஃபியை தங்களது வீரத் திருமகனாகவே காண்கின்றனர்.

எகிப்தில் ஹுஸ்னி முபாரக் அரசைப்போல அரசுக் கருவூலத்தை கொள்ளையடிக்காத லிபியா அரசு கிராம மக்களுக்காக ஏராளமான நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாக பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.
இத்தகைய திட்டங்களைக் கண்டு பத்திரிகையாளர்கள் ஆச்சரியப்படுவதாக வாஷிங்டன் போஸ்டின் திரிபோலி செய்தியாளர் தெரிவிக்கிறார்.

நன்றி (செய்தி ) :- தூது ஆன்லைன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக