தமிழ் நாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் நாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29 செப்டம்பர் 2011

தமிழக உள்ளாட்சித் தேர்தல்:எஸ்.டி.பி.ஐ, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட 14 இஸ்லாமிய கட்சிகள் அடங்கிய கூட்டணி

சென்னை:தமிழக உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாடு இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, கிறிஸ்தவ அமைப்புகள் இணைந்து தனி அணியாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன.

இந்தக் கூட்டணியில்
1. தமிழ் நாடு ஜமாத்துல் உலமா சபை
2. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
3. சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா
4. இந்தியன் நேஷனல் லீக்
5. சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை
6. தேசிய லீக் கட்சி
7. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
8. ஜம்மியதுல் உலமாயே ஹிந்த்
9. ஆல் இந்தியா மில்லி கவுன்சில்
10. மறுமலர்ச்சி முஸ்லிம் லீக்
11. ஷரிஅத் பாதுகாப்பு பேரவை
12. வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா
13. இஸ்லாமிய விழிப்புணர்வு கழகம்
14. இஸ்லாமிய இலக்கிய கழகம் ஆகிய அமைப்புகளும், 6 கிறிஸ்துவ அமைப்புகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை உள்ளன.

மொத்தமுள்ள 9 மாநகராட்சி மேயர் பதவிகளில்,

இணைந்தது எங்கள் சமுதாயம் !




கூத்தாநல்லூர் இளைஞர் இயக்கம் நடத்திய சமுதாய ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று கூத்தாநல்லூர் செல்வி மஹால்-ல் நடைபெற்றது. கூத்தாநல்லூர் ஜமாதார்களும், சமூக ஆர்வலர்களும், இளைஞர்களும், சமுதாய இயக்கத்தை சேர்ந்த மாநில நிர்வாகிகளும், மாவட்ட நிர்வாகிகளும், நகர நிர்வாகிகளும், கூத்தாநல்லூர்-ஐ சேர்ந்த அனைத்து கட்சி மற்றும் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


நிகழ்ச்சியின் துவக்கமாக A.A. அர்ஷத் அலி கிராத் ஓதி துவக்கி வைத்தார். செய்யத் நாசர் அவர்கள் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். JMR. ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் இவ்விழா-வை தலைமை ஏற்று தந்து சிறப்பித்தார்கள். கல்வி மற்றும் மருத்துவம் பற்றி Dr. M. சர்வத் கான் MBBS அவர்கள் சிறப்புரை ஆற்றினார். சமுதாயத்தில் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பில் SDPI மாநில செயலாளர் A.அபுபக்கர் சித்திக் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். சமுதாய ஒற்றுமை என்ற தலைப்பில் மனித நேய மக்கள் கட்சியின் மாநில துணை செயலாளர் M. தமிமுன் அன்சாரி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். தலைமை ஏற்றி தந்து சிறப்பித்த JMR. ரஹ்மத்துல்லாஹ் அவர்களுக்கு தக்பீர் ஹஜ் சர்வீஸ் நிறுவனர் Lion. N.S. சிராஜி தீன் அவர்கள் பொன்னாடை போற்றினார். நிகழ்ச்சியின் இறுதியாக கூத்தாநல்லூர் இளைஞர் இயக்க தலைவர் K.J. செய்யது யூசுப் தீன் அவர்கள் கொள்கை விளக்க உரை மற்றும் நன்றி உரை ஆற்றினார்.

26 செப்டம்பர் 2011

19 ஆண்டுக்குப் பின்னர் பரபரப்பான வாச்சாத்தி பாலியல் கொடுமை வழக்கில் 29ம் தேதி தீர்ப்பு

தர்மபுரி: தமிழகத்தை மட்டுமல்லாமல் இந்தியாவையே உலுக்கிய வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கில்19 ஆண்டுகளுக்குப் பின்னர் வருகிற 29ம் தேதி தர்மபுரி செஷன்ஸ் கோர்ட் தீர்ப்பளிக்கவுள்ளது.

தமிழகத்தின் கடைக் கோடி மாவட்டமான தர்மபுரியில், அரூர் அருகே உள்ள குக்கிராமம்தான் வாச்சாத்தி. ஆதிவாசி பழங்குடியினர் வசிக்கும் வறுமையான கிராமம். கடந்த 1992ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை இந்தக் கிராமத்தில் காவல்துறையினர், வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து நடத்திய வெறியாட்டம் அராஜகத்தின் உச்சகட்டத்தை எட்டி்யது.

ஜூன் 20ம் தேதி அங்கு 155 வனத்துறையினர், 108 போலீஸார், 6 வருவாய்த்துறையினர் கொண்ட பெரும் படையே புகுந்தது. கிராமத்திற்குள் சந்தனக் கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக கூறி சோதனையிட வேண்டும் என்று கூறி வீடு வீடாக புகுந்து துவம்சம் செய்தனர். பின்னர் வீட்டில்இருந்த பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைவரையும் இழுத்து வந்து ஊரின் மையத்தில் இருந்த பெரிய ஆலமரத்தின் கீழே நிறுத்தினர். பின்னர் மிருகத்தை விடவும் கொடுமையாக அவர்களை நடத்தி சரமாரியாக அடித்தனர்.

பின்னர் 18 பெண்களை அருகே இருந்த வனத்துறை ரேஞ்சர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று பாலியல் வன்முறையில் ஈடுபட்டனர்.

போலீஸார், வனத்துறையினல், வருவாய்த்துறையினரின் இந்த அராஜக அட்டூழியச் செயலுக்கு 34 பேர் உயிரிழந்தார். 18 பெண்கள் கற்பிழந்தார்கள். 28 சிறார்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்தக் கொடூர வன்செயல் தொடர்பாக

20 செப்டம்பர் 2011

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட SDPI முழு ஆதரவு

திருநெல்வேலி :கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனே மூட கோரி சுமார் 127 பேர் கூடங்குளம் அருகில் இடிந்த கரையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஊர் பொது மக்கள் 5000 பேர் ஆதரவு தெரிவித்து அவர்களுடன் இருந்து வருகின்றனர் அவர்களை ஆதரித்து SDPI மாநில தலைவர் தெஹ்லான் பாக்கவி தலைமையில் நிர்வாக குழு சென்றது. இந்த குழுவை அங்குள்ள மக்கள் மிகுந்த உற்சாகத்தோடு வரவேற்றனர்.

பிறகு அங்கு கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதிப்பு குறித்தும் , அதனால் ஏற்பட கூடிய விளைவுகள் பற்றியும்,மற்ற நாடுகள் எந்த அளவிற்கு அதை எதிர்கின்றனர் என்பதை பற்றியும் தெளிவாக விளக்கவுரை ஆற்றினர். இந்த நிகழ்ச்சியின் போது SDPI மாவட்ட தலைவர் சாகுல் ஹமீத் உஸ்மானி. மாவட்ட பொது செயலாளர் ஹயாத் முஹம்மத், நான்குநேரி தொகுதி தலைவர் தாஜுதீன்,தொகுதி செயலாளர் ஜாகிர் ஹுசைன் ,நகர தலைவர் அய்யூப் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நன்றி (செய்தி ) :- தூது ஆன்லைன்

கூடங்ளம் விவகாரம்: இன்று முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கும் மேதா பட்கர்

கூடங்குளம்: கூடங்குளம் பிரச்சனைக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் மேதா பட்கர் தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனை தொடர்பாக அவர் இன்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசவிருக்கிறார்.

நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இடிந்தகரையில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோரிக்கைகளை வலியுறுத்தி 101 பேர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். கூட்டப்புளி, பெருமணல், கூடன்குளம், இடிந்தகரை, கூத்தக்குளி போன்ற பல்வேறு கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று 9-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை.

உவரி, கூடுதாழை, கூட்டபானை, கூத்தன்குழி உள்ளிட்ட மீனவ கிராமங்களில் கஞ்சி தொட்டி திறக்கப்பட்டன. கூடன்குளம் மற்றும் இடிந்தகரையை சுற்றியுள்ள குக்கிராமங்களில் பல்வேறு இடங்களில் கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டம் நேற்று நடத்தப்பட்டது. நேற்று நடந்த போராட்டத்தில் சமூக ஆர்வலரும், மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு தலைவருமான மேதா பட்கர், மதுரை மறை மாவட்ட பேராயர் பீட்டர் பெர்னான்டோ மற்றும் கேரளாவைச் சேர்ந்த பல்வேறு இளைஞர், மகளிர் அமைப்புகள் போராட்டத்தில் பங்கேற்றன.

17 செப்டம்பர் 2011

உள்ளாட்சித் தேர்தல்: கூட்டணிக் கட்சிகளைக் கேட்காமல் திமுக தனித்து முடிவு: காதர் முகைதீன்

குற்றாலம்: கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசிக்காமலேயே உள்ளாட்சித் தேர்தலி்ல் திமுக தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில தலைவர் காதர் முகைதீன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் குற்றாலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது,

கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த முஸ்லிம் லீக் பொதுக்குழு கூட்டத்தில் திமுக கூட்டணியில் நீடிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றினோம். இந்த நிலையில் கூட்டணி கட்சிகளை ஆலோசிக்காமல் திமுக தனித்து போட்டியிடும் என்று அறிவித்துள்ளனர். இதையடுத்து கட்சியின் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்ட அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் உள்ளாட்சி தேர்தலில் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. அந்தந்த நகர, மாநகர, மாவட்ட நிர்வாகிகளுக்கு அந்தந்த பகுதியில் யாருடன் கூட்டணி அமைத்துக் கொள்வது என்பது குறித்து முடிவு எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பிற கட்சிகளுடன் பேசி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோம். இன்னும் ஒரு சில தினங்களில் மாநில நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் மீண்டும் நடைபெற உள்ளது என்றார்.

17 ஏப்ரல் 2011

பெட்ரோலுக்கு குட்பை காற்றில் ஓடும் கார் கண்டுபிடிப்பு கோவை கல்லூரி மாணவர்கள் அசத்தல்

பொள்ளாச்சி-: சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் காற்றில் இயங்கும் காரை, கோவை கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். பெட்ரோல் விலை உயர்வு, காரின் விலை அதிகம், சுற்றுச்சூழல் மாசுபடுதல் உள்ளிட்ட பிரச்னை களுக்கு கோவை கருமத்தம்பட்டி தமிழ்நாடு பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இறுதியாண்டு படிக்கும் 4 மாணவர்கள் தீர்வு கண்டுள்ளனர். இதுகுறித்து பொள் ளாச்சி பாலக்காடு ரோட்டை சேர்ந்த சந்திரசேகரன் என்பவரின் மகன் மதன்குமார்(21) கூறியதாவது: நானும், என்னுடன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இறுதியாண்டு படிக்கும் நசியனூரை சேர்ந்த பூர்ணசந்திரன், பேரூரை சேர்ந்த ஆனந்தன், கோவை சிங்காநல்லூரை சேர்ந்த சுரேந்தர் ஆகிய 4 பேரும் படிப்பால் நமது வாழ்க்கை தரம் உயருவது மட்டுமின்றி, இந்த சமுதாயத்துக்காக எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தோம்.

இன்று உலகம் முழுவதிலும் மக்களை பெரிதும் பாதித்து வருவது சுற்றுச்சூழல் மாசுபடுவதுதான். மாசுபாட்டை குறைக்க நமது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். இதற்காக

14 ஏப்ரல் 2011

தமிழகத்தில் 76% வாக்குப் பதிவு

சென்னை, ஏப். 14: தமிழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் 76 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவானதாகத் தெரிகிறது.

அமைதியாகவும், விறுவிறுப்பாகவும் நடந்த வாக்குப் பதிவில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் பெரிதாக நடைபெறவில்லை. இளைஞர்களும், பெண்களும் ஆர்வத்துடன் நீண்ட வரிசைகளில் காத்திருந்து வாக்களித்தனர்.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு புதன்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கியது. ஆனால், வாக்காளர்கள் 8 மணிக்கு முன்னதாகவே வாக்குச் சாவடிகளில் வரிசைகளில் நிற்கத் தொடங்கினர்.

இளைஞர்களும், முதன் முறையாக வாக்களிக்கும் உரிமை பெற்றவர்களும் ஆர்வத்துடன் வாக்களிக்க வந்திருந்தனர்.

சென்னை கோபாலபுரத்தில் சாரதா பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் முதல்வர் கருணாநிதியும், ஸ்டெல்லா மேரி கல்லூரி வாக்குச் சாவடியில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் வாக்களித்தனர்.

10 ஏப்ரல் 2011

திருநாவுக்கரசர் பிரச்சாரத்தில் கலவரம்

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுபவர் முன்னாள் அமைச்சர் எஸ். திருநாவுக்கரசர்.
அவர் இன்று மாலை 6.30 மணிக்கு கடறகரை கிராமமான மணமேல்குடி அருகே உள்ள நல்லூர் கிராமத்திற்கு தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக தனது ஆதரவாளர்களுடன் சென்றபோது, அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு சிலர், திருநாவுக்கரசின் பிரச்சார வாகனத்தை தடுத்து நிறுத்தி ஊருக்குள் ஓட்டு கேட்க செல்லவேண்டாம் என்று தடுத்து நிறுத்தி உள்ளனர்.
மேலும் நேற்று அதிமுக வேட்பாளர் ஓட்டு கேட்க வந்தபோதும் ஊருக்குள் நுழையவிடவில்லை. அதனால் நீங்களும் செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளனர்.
அப்போது பிரச்சாரத்திற்கு வந்த சிலர், நாங்கள் பிரச்சாரம் செய்வதை தடுக்க வேண்டாம். நாங்கள் பிரச்சாரம் செய்துவிட்டு செல்கிறோம் என்று சொன்னபோது, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கலவரம் நடந்தது.

அண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்!!

கரூர்: இயக்குநர் சீமானின் அனல் பறக்கும் பிரச்சாரத்தை எதிர்கொள்ளப் பயந்த காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, "அண்ணே தயவு செய்து என்னுடைய தொகுதிக்கு மட்டும் பிரச்சாரத்துக்கு வந்துடாதீங்க" என்று வேண்டி கடிதம் எழுதியுள்ளார்.

நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸை எதிர்த்து பிரச்சாரத்தில் குதித்துள்ளார் நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான்.

தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளில் மட்டும் அவர் அக்கட்சியைத் தோற்கடிக்குமாறு வாக்காளர்களிடம் வேண்டுகோள் வைத்து வருகிறார். அவர் செல்லுமிடங்களிலெல்லாம் பெண்களும் ஆண்களும் ஆயிரக்கணக்கில் திரண்டு வருகிறார்கள்.

அவரது பிரச்சாரத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பல ஊர்களில் சீமான் அடுத்து எந்த இடத்தில் பேசப்போகிறார் என்று கேட்டு, அவர் செல்லும் முன்பே போய் மக்கள் காத்திருக்கின்றனர்.

07 ஏப்ரல் 2011

பாரம்பரிய கட்சிகளை புறக்கணிப்போம்!! SDPI

கேரளா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல்களில் நேர்மையான ஊழலற்ற ஆட்சி அமையவும், அடிதட்டு ஏழை எளிய மக்களின் வாழ்க்கை முன்னேற்றம் அடையும் வகையிலும் ஒரு நல்ல அரசியல் மாற்றம் ஏற்பட மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இதியாவின் தேசிய செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

மேலும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கேரளா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் மேற்கு வங்காளத்தில் நிறுத்தியுள்ள வேட்பாளர்களுக்கு முழு ஆதரவு வழங்குவது என முடிவு செய்துள்ளது.

அனைத்து மாநிலங்களிலும் தேசிய கட்சிகளான இந்திய தேசிய காங்கிரஸ், பாஜக, சிபிஐ (எம்) மற்றும் மாநில அளவிலான கட்சிகளான இந்தியா யூனியன் முஸ்லிம் லீக், கேரளா காங்கிரஸ், திமுக, அதிமுக, TMC, அஸ்ஸாம் கன பரிஷத் ஆகிய அனைத்து கட்சிகளுமே ஊழல், குடும்ப ஆட்சி, சமூக விரோத செயல்கள் மற்றும் அடாவடித்தனம் போன்ற விஷயங்களில் ஒத்த கொள்கையுடையவர்களாக உள்ளனர்.

தமிழக தேர்தல் களத்தில் கிரிமினல் பின்னணியுடன் 125 வேட்பாளர்கள்

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் கிரிமினல் பினனணியுடன் கூடிய 125 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

கிட்டத்தட்ட அத்தனை கட்சிகளிலுமே கிரிமினல் வேட்பாளர்கள் உள்ளனர். அதிகபட்சமாக அதிமுக சார்பில் 43 பேர் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

திமுகவில் 24 பேரும், பாஜகவில் 19 பேரும், பாமகவில் 14 பேரும் நிறுத்தப்பட்டுள்ளனர். திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் மற்றும் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக சார்பில் தலா 6 கிரிமினல் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இவர்களில் அதிக அளவிலான கேஸ்களுடன் கூடியவராக திகழ்பவர் திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான என்.கே.கே.பி. ராஜாதான். இவர் மீது ஆள் கடத்தல், நில அபகரிப்பு, திருட்டு என 6 வழக்குகள் உள்ளன. ஆபாசமாக நடந்து கொள்ளுதல், ஆயுதங்களை வைத்து தாக்குதல், மிரட்டுதல் என இவர் மீது வழக்குகள் உள்ளன. இவர் அந்தியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

06 ஏப்ரல் 2011

தேர்தல் கமிஷன் எச்சரிக்கை கள்ளஓட்டு போட்டால் 1 ஆண்டு சிறை

சென்னை : தேர்தலில் கள்ள ஓட்டுப்போட்டால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியுள்ளார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கோட்டையில் நேற்று அளித்த பேட்டி: தமிழகம் முழுவதும் தேர்தல் சம்பந்தமாக துணை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய ‘பூத் சிலிப்’‘ வழங்கும் பணி இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மீதியுள்ளவர்களுக்கு 2 நாட்கள் கழித்து பூத் சிலிப் வழங்கப்படும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்துவதற்கான, ஓட்டு சீட்டுகள் மாவட்டங்கள் தோறும் அனுப்பப்பட்டு வருகிறது. அரசியல் கட்சிகள் முன்னிலையில் இந்த சீட்டுகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்படும். தேர்தலுக்கு ஒரு நாளுக்கு முன்னர், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குசாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இதுவரை 66,231 தபால் ஓட்டுகள் பதிவாகியுள்ளன. தேர்தலில் கள்ள ஓட்டுப்போட்டால் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும். தங்கள் பெயரில் கள்ள ஓட்டு போடப்பட்டிருந்தால், வாக்காளர்கள் மீண்டும் வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

03 ஏப்ரல் 2011

தமிழகத்தின் மக்கள் தொகை 7.21 கோடி

சென்னை: 2011ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் நாட்டின் மக்கள் தொகை 15.6 சதவீதம் அதிகரித்து 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 858 ஆகியுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பின் முடிவுகளை மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் கோபாலகிருஷ்ணன் நேற்று சென்னையில் வெளியிட்டார். அதன் விவரம் பின் வருமாறு,

இந்தியாவின் உத்தேச மக்கள் தொகை 1,21,01,93,422. இதில் 62 கோடியே 37 லட்சத்து 24 ஆயிரத்து 248 ஆண்களும், 58 கோடியே 64 லட்சத்து 69 லட்சத்து 174 பெண்களும் அடக்கம். தமிழ்நாட்டின் உத்தேச மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958 பேர். இதில் 3 கோடியே 61 லட்சத்து 58 ஆயிரத்து 871 ஆண்களும், 3 கோடியே 59 லட்சத்து 80 ஆயிரத்து 87 பெண்களும் அடக்கம்.

6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை குறைவு

இந்திய மக்கள் தொகையில் 5.96 சதவீதம் தமிழக மக்கள் தொகை. இதியாவில் மக்கள் தொகை அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 7வது இடத்தை தக்கவைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் மக்கள் தொகை 15.6 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது தமிழ்நாட்டின் மக்கள் தொகை எண்ணிக்கை 97 லட்சம் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் எஸ்.டி.பி.ஐக்கு கிடைக்கும் வாக்குகள் வெற்றித்தோல்வியை நிர்ணயிக்கும்

சென்னை:தமிழ்நாடு சட்டமன்றத்தேர்தலில் எட்டு தொகுதிகளில் முதன்முதலாக தேர்தல் களத்தில் தடம் பதித்துள்ள சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவுக்கு கிடைக்கும் வாக்குகள் அத்தொகுதியில் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்குமென அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

தி.மு.க, அ.இ.அ.தி.மு.க கூட்டணிகளில் சேராமல் தனித்து பலப்பரீட்சைக்கு களமிறங்கியுள்ளது எஸ்.டி.பி.ஐ.

கடந்த பெப்ருவரி மாதம் சென்னையில் நடந்த கட்சியின் சென்னை மண்டல மாநாட்டில் திரண்டிருந்த மக்கள் வெள்ளம் அரசியல் தலைவர்களின் கவனத்தை ஈர்த்தது.

தமிழக சட்டசபைத்தேர்தலில் 28 முஸ்லிம் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.தி.மு.க, அ.இ.அ.தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மொத்தம் ஒன்பது முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தால் உருவாக்கப்பட்ட மனித நேய மக்கள் கட்சி அ.இ.அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்துள்ளது.இக்கூட்டணியில் அக்கட்சிக்கு மூன்று இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.முஸ்லீம் லீக் தி.மு.க கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் 3 இடங்களில் போட்டியிடுகிறது.

30 மார்ச் 2011

சென்னையில் மஸ்ஜிதைத் தகர்க்க தேசவிரோத குண்டர்கள் முயற்சி! முஸ்லிம்கள் முறியடிப்பு!!

சென்னை:சென்னையில் உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள 7 வருட பாரம்பரியமுள்ள ஒரு மஸ்ஜிதை தேசவிரோத குண்டர்கள் சிலர் நேற்று தகர்க்க முயற்சி செய்தனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைச் சார்ந்தவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று குண்டர்களைத் தடுத்து நிறுத்தி, காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

7 வருடங்களுக்கு முன்பு பெங்களூரைச் சேர்ந்த உமர் என்ற தொழிலதிபர் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள தனது கட்டடத்தின் முதல் மாடியில் ஒரு பகுதியை முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்காக அன்பளிப்பாக அளித்தார். அன்றிலிருந்து அந்தப் பகுதியிலுள்ள முஸ்லிம்கள் அங்கே தொழுது வந்தனர்.

இதற்கிடையில் அந்தக் கட்டடத்தின் அடித்தளமும், இரண்டாவது மாடியும், மூன்றாவது மாடியும் சி.ஓ.எஸ். என்ற அறக்கட்டளைக்கு விற்கப்பட்டுள்ளன.

26 மார்ச் 2011

சென்னையில் நடைபெற்ற மாநிலப் பொதுக்குழு – TNTJ வின் தேர்தல் நிலைபாடு என்ன ?

வரும் சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் இன்று காலை ( 26.03.11 ) சென்னை எழும்பூர் சிராஜ் மஹாலில் மாநில மேலாண்மைக்குழுத் தலைவர் ஷம்சுல்லுஹா தலைமையில் நடைபெற்றது.

முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரித்துத் தருவதாக தேர்தல் அறிக்கையில் அதிமுக வாக்களித்தால் அதிமுக கூட்டணியை ஆதரிப்பது என்று சேலத்தில் நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன் பின்னர் அதிமுக சார்பில் அதன் மூத்த தலைவர்கள் ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன், பொன்னையன், அன்வர் ராஜா, பொள்ளாச்சி ஜெயராமன் ஆகிய முக்கிய தலைவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைமை அலுவலகத்திற்கு மூன்று தடவை நேரில் வந்து ஆதரவு கேட்டனர். தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரிக்க உறுதியளிப்போம் என்று சொன்னால் தவிர நாங்கள் ஆதரிக்க முடியாது என்று நாம் திட்டவட்டமாகச் சொன்னோம்.

தமிழர்களை கோமாளிகளாக்கும் பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கை

சென்னை:தமிழகத்தில் வருகிற ஏப்ரல்-13-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி பல்வேறு கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றன.

தமிழகத்தின் முக்கிய இரு கட்சிகளான தி.மு.கவும்,அ.இ.அ.தி.மு.கவும் இலவசங்களை அள்ளி வீசி தங்களது தேர்தல் அறிக்கையினை வெளியிட்டன. தமிழர்களை சோம்பேறிகளாக்கும் அதேவேளையில் வேலை வாய்ப்பிற்கோ, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கோ எவ்வித அறிவிப்புகளும் இக்கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் தமிழ்நாட்டின் புறம்போக்கு கட்சியான பா.ஜ.க ஏதோ அடுத்து தாங்கள்தாம் ஆட்சிக்கு வருவதைப் போல கனவு கண்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. புறம்போக்கு கட்சி எனக் கூறக் காரணம், தமிழகத்தின் பிரபலமான எந்த சிறுகட்சியும் கூட இவர்களுடன் கூட்டணி வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் கூட்டுச் சேர்ந்தால் இருக்கிற மானமும் போய்விடும் என்ற பயம்தான் காரணம். இத்தகையதொரு கட்சியின் வெற்று தேர்தல் அறிக்கைக் குறித்து விமர்சிப்பதே நேரத்தை வீணடிப்பது என்றாலும், ஏதோ தாங்கள் பரிசுத்தவான்கள் என வேடமிட்டு சில அறிக்கைகளை வெளியிடுவதால் எவரேனும் இவர்களை நம்பிவிடக் கூடாது என்பதற்காக இவர்களது தேர்தல் அறிக்கையின் கோமாளித் தனத்தைக் குறித்து சிறிது அலசுவோம்.

தலைமைக்கு எதிராக மாற்றுக் கருத்து: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிலிருந்து ஃபாத்திமா முஸஃபர் நீக்கம்

சென்னை:இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் பெண்கள் பிரிவின் தலைவியும், அக்கட்சியின் அவை உறுப்பினருமான சகோதரி ஃபாத்திமா முஸஃபர் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் தலைமைக்கு எதிராக மாற்றுக் கருத்து தெரிவித்து பிரச்சாரம் செய்ததால் அவர்மீது இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது. தொகுதிக்கான பங்கீடு நடந்தபொழுது ஆரம்பத்தில் 3 தொகுதிகளை முஸ்லிம் லீக்கிற்காக ஒதுக்கிய கலைஞர் கருணாநிதி பின்னர் தங்கள் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தொகுதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட பிரச்சனைகளை அடிப்படையாக வைத்து முஸ்லிம் லீக்கிற்கு வழங்கப்பட்ட 3 சீட்களில் ஒன்றை திரும்பப் பெற்று கொண்டது. தி.மு.க வின் இந்த செயல்பாட்டை சிறிதும் கண்டிக்காத முஸ்லிம் லீக் தலைவர்கள் அதை அப்படியே ஏற்றுக்கொண்டது. இதனால் பலருக்கும் அக்கட்சியின் மீது அதிருப்தியும் ஆத்திரமும் ஏற்பட்டது.

இந்நிலையில்

போலீஸ் அராஜகம்:மதுரை முஸ்லிம்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு

மதுரை:போலியான வாக்குமூலம் பெற்று அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை சித்திரவதை செய்து சிறையில் அடைத்த காவல்துறையின் அராஜகத்தை கண்டித்து மதுரை நகரின் அனைத்து முஸ்லிம் ஜமாத் ஜமாத்தார்கள் மற்றும் அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் ஒட்டுமொத்த தேர்தல் புறக்கணிப்பு செய்யவுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் விடுத்துள்ள பத்திரிக்கை செய்தி

“கடந்த 1.03.2011 அன்று மதுரை ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் மாட்டுத் தலை வீசப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் கடந்த 08.03.2011 முதல் அப்பாவி முஸ்லிம்களை சட்டவிரோத காவலில் வைத்து 4 நாட்கள் கடுமையான சித்திரவதை செய்து மாட்டுத் தலையை போட்டது நாங்கள்தான் என்று ஒத்துக்கொள்ளுமாறு அடித்து துன்புறுத்தி வாக்குமூலங்களை பொய்யாக தாங்களே எழுதி, கத்திகளை சந்தையில் வாங்கி, ஆதாரங்களை போலியாக தயாரித்து பொய் வழக்கு புனைந்து அப்பாவி முஸ்லிம்கள் 5 நபர்களை சிறையிலடைத்தனர்.

மேற்படி அத்துமீற‌ல் சம்மந்தமாகவும், மததுவேசமாகவும், நடந்து கொண்ட காவல்துறையினர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க கோரியும், போடப்பட்டுள்ள பொய் வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்ற ஆவண செய்யக்கோரியும் கடந்த 15.03.2011 அன்று மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரை மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத்தினரும், மதுரையில் உள்ள 90 பள்ளிவாசல்களின் நிர்வாகிகளுடனும் மற்றும் அனைத்து முஸ்லிம் இயக்கத்தினரும் நேரில் சந்தித்து மனு கொடுத்தோம்.