பொள்ளாச்சி-: சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் காற்றில் இயங்கும் காரை, கோவை கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். பெட்ரோல் விலை உயர்வு, காரின் விலை அதிகம், சுற்றுச்சூழல் மாசுபடுதல் உள்ளிட்ட பிரச்னை களுக்கு கோவை கருமத்தம்பட்டி தமிழ்நாடு பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இறுதியாண்டு படிக்கும் 4 மாணவர்கள் தீர்வு கண்டுள்ளனர். இதுகுறித்து பொள் ளாச்சி பாலக்காடு ரோட்டை சேர்ந்த சந்திரசேகரன் என்பவரின் மகன் மதன்குமார்(21) கூறியதாவது: நானும், என்னுடன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இறுதியாண்டு படிக்கும் நசியனூரை சேர்ந்த பூர்ணசந்திரன், பேரூரை சேர்ந்த ஆனந்தன், கோவை சிங்காநல்லூரை சேர்ந்த சுரேந்தர் ஆகிய 4 பேரும் படிப்பால் நமது வாழ்க்கை தரம் உயருவது மட்டுமின்றி, இந்த சமுதாயத்துக்காக எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தோம்.
இன்று உலகம் முழுவதிலும் மக்களை பெரிதும் பாதித்து வருவது சுற்றுச்சூழல் மாசுபடுவதுதான். மாசுபாட்டை குறைக்க நமது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். இதற்காக
காற்றில் இயங்கும் மிகக் குறைந்த விலையில் கார் தயாரிப்பதற்கான முயற்சியை கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் தொடங்கினோம். இதற்கு கல்லூரி பேராசிரியர் திருப்பூர் நாகராஜன் மிகவும் உறுதுணையாக இருந்தார். 3 மாதம் இடைவிடாத முயற்சியின் காரணமாக ணீ35,000 செலவில் ஒருவர் மட்டும் அமர்ந்து செல்லும் விதத்தில் ஒரு காரை வடிவமைத்தோம். இந்த காரில் 300 பவுண்ட் காற்று கொள்ளளவு கொண்ட பெரிய டேங்க் ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். அதில் இருந்து அழுத்தத்துடன் வெளியேறும் காற்று இன்ஜினை இயக்குவதன் மூலம் கார் செல்லும்.
வழக்கமான கார்களைப் போன்றே இதில் கியர், கிளட்ச், பிரேக் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன. இதில் இருந்து புகையும் வராது, சுற்றுச் சூழலும் மாசுபடாது. நாம் செல்லும் வழியில் எங்காவது ஒரு சைக்கிள் கடையில் நிறுத்தி காரின் டேங்கில் காற்றை நிரப்பிக் கொண்டு நம் பயணத்தை தொடரலாம்.

நன்றி (செய்தி ) :- , தினகரன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக