10 ஏப்ரல் 2011

திருநாவுக்கரசர் பிரச்சாரத்தில் கலவரம்

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுபவர் முன்னாள் அமைச்சர் எஸ். திருநாவுக்கரசர்.
அவர் இன்று மாலை 6.30 மணிக்கு கடறகரை கிராமமான மணமேல்குடி அருகே உள்ள நல்லூர் கிராமத்திற்கு தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக தனது ஆதரவாளர்களுடன் சென்றபோது, அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு சிலர், திருநாவுக்கரசின் பிரச்சார வாகனத்தை தடுத்து நிறுத்தி ஊருக்குள் ஓட்டு கேட்க செல்லவேண்டாம் என்று தடுத்து நிறுத்தி உள்ளனர்.
மேலும் நேற்று அதிமுக வேட்பாளர் ஓட்டு கேட்க வந்தபோதும் ஊருக்குள் நுழையவிடவில்லை. அதனால் நீங்களும் செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளனர்.
அப்போது பிரச்சாரத்திற்கு வந்த சிலர், நாங்கள் பிரச்சாரம் செய்வதை தடுக்க வேண்டாம். நாங்கள் பிரச்சாரம் செய்துவிட்டு செல்கிறோம் என்று சொன்னபோது, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கலவரம் நடந்தது.

இதில் கிராமத்தைசேர்ந்த செந்தில் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதனால் அந்த கிராமத்தினர் ஒன்று சேர்ந்து வேட்பாளர் திருநாவுக்கரசு வந்த வாகனங்களை முற்றுகையிட்டனர்.
மேலும், மணமேல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.

நன்றி (செய்தி ) :- நக்கீரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக