தர்மபுரி: தமிழகத்தை மட்டுமல்லாமல் இந்தியாவையே உலுக்கிய வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கில்19 ஆண்டுகளுக்குப் பின்னர் வருகிற 29ம் தேதி தர்மபுரி செஷன்ஸ் கோர்ட் தீர்ப்பளிக்கவுள்ளது.
தமிழகத்தின் கடைக் கோடி மாவட்டமான தர்மபுரியில், அரூர் அருகே உள்ள குக்கிராமம்தான் வாச்சாத்தி. ஆதிவாசி பழங்குடியினர் வசிக்கும் வறுமையான கிராமம். கடந்த 1992ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை இந்தக் கிராமத்தில் காவல்துறையினர், வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து நடத்திய வெறியாட்டம் அராஜகத்தின் உச்சகட்டத்தை எட்டி்யது.
ஜூன் 20ம் தேதி அங்கு 155 வனத்துறையினர், 108 போலீஸார், 6 வருவாய்த்துறையினர் கொண்ட பெரும் படையே புகுந்தது. கிராமத்திற்குள் சந்தனக் கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக கூறி சோதனையிட வேண்டும் என்று கூறி வீடு வீடாக புகுந்து துவம்சம் செய்தனர். பின்னர் வீட்டில்இருந்த பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைவரையும் இழுத்து வந்து ஊரின் மையத்தில் இருந்த பெரிய ஆலமரத்தின் கீழே நிறுத்தினர். பின்னர் மிருகத்தை விடவும் கொடுமையாக அவர்களை நடத்தி சரமாரியாக அடித்தனர்.
பின்னர் 18 பெண்களை அருகே இருந்த வனத்துறை ரேஞ்சர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று பாலியல் வன்முறையில் ஈடுபட்டனர்.
போலீஸார், வனத்துறையினல், வருவாய்த்துறையினரின் இந்த அராஜக அட்டூழியச் செயலுக்கு 34 பேர் உயிரிழந்தார். 18 பெண்கள் கற்பிழந்தார்கள். 28 சிறார்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்தக் கொடூர வன்செயல் தொடர்பாக
269 பேர் மீது போலீஸார் வழக்குத் தொடர்ந்தனர். இவர்களில் 155 பேர் வனத்துறையினர், இவர்களில் 4 பேர் ஐஎப்எஸ் அதிகாரிகள். 108 பேர் போலீஸார்.இவர்களில் ஒரு எஸ்பியும் அடக்கம். வருவாய்த்துறையினர் 6 பேர்.
வாச்சாத்தி சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 107 பேர். இவர்களில் நால்வர் மட்டுமே ஆண்கள் ஆவர். வழக்கு விசாரணையில் இருந்தபோது மொத்தம் 53 பேர் உயிரிழந்து விட்டனர்.
கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட காவல்துறை, வனத்துறை மற்றும் வனத்துறையினர் மீது இன்று தீர்ப்பு அளிப்படதாக இருந்தார் மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிபதி குமரகுரு. இதையடுத்து இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்க வேண்டும் என்று வாச்சாத்தியில் உள்ள மாரியம்மன் கோவில் முன்பு கிராம மக்கள் பல்வேறு சிறப்பு வழிபாடுகளை நடத்தி வேண்டி வந்தனர். பெரும் திரளானோர் மாவட்ட கோர்ட்டில் வந்து குவி்ந்தவண்ணம் இருந்தனர்.
இன்று பிற்பகல் 12 மணியளவில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தீர்ப்பு வருகிற 29ம் தேதி அறிவிக்கப்படும் என கோர்ட் அறிவித்துள்ளது. இதனால் கோர்ட்டில் கூடியிருந்தவர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.

நன்றி (செய்தி ) :- தட்ஸ்தமிழ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக