படித்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படித்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20 பிப்ரவரி 2012

தொழுகையை விட்டவன்

புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக.

தொழுகையை விட்ட என் சோதரனே! தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவதில் அலட்சியமாக இருக்கும் என் நன்பனே! நீ உன் மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கின்றாய்.. உன்னைப் படைத்து உணவளித்து இரட்சித்துக் கொண்டிருக்கும் உன் றப்புக்கு ஸுஜூது செய்யும் அவசியம் கூட இல்லாதளவுக்கு – அவனது அருளே தேவையில்லாத அளவுக்கு நீ உன் விடயத்தில் தன்னிறைவு கண்டு விட்டாயோ! உனக்கு ஏற்படும் இன்னல்களில் துன்பங்களில் அவனது உதவியே தேவைப்படாதளவுக்கு நீ அவ்வளவு ஆற்றல் பெற்று விட்டாயோ!.

அல்லது உன்னைப் பிடித்திருக்கின்ற கர்வமும் ஆணவமும் படைத்தவனுக்கு சிரம் சாய்க்கத் தடையாக இருக்கின்றதோ! நீ பெற்ற பதவியும் சொத்து செல்வங்களும் படைத்தவனை நினைத்துப் பார்க்க அவகாசம் தராதிருக்கின்றனவோ!

அல்லது உன்னிடம் இருக்கின்ற ஷைத்தான் உன்னை ஆக்கிரமித்து இறைவனை மறக்கச் செய்து விட்டானோ! உனது மனச் சாட்சியை சாகடித்து விட்டு உன் உள்ளத்தில் குடியேறி உன்னை வழிகெடுத்து நரகில் தள்ளத் திட்டமிட்டிருக்கின்றானோ!

15 அக்டோபர் 2011

காய்கறிகள்,பழங்கள் விஷத்தன்மை கொண்டதாக மாறி வருகிறது

இந்தியாவில் உள்ள விவசாய நிலங்களில், அதிகளவில் ரசாயன உரங்கள் பயன்படுத்தப்படுவதால், காய்கறிகள் மற்றும் பழங்கள் விஷத்தன்மை கொண்டதாக மாறி வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் உள்ள விவசாய நிலங்களில், தடை செய்யப்பட்ட ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லி மருந்துகளையும் விவசாயிகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இதுகுறித்து, டில்லியில் உள்ள "நுகர்வோர் குரல்' என்ற தன்னார்வ அமைப்பு டில்லி, பெங்களூரு மற்றும் கோல்கட்டா ஆகிய நகரங்களில் உள்ள சில்லறை மற்றும் மொத்த காய்கறி கடைகளில் விற்கப்படும் காய்கறிகளை ஆய்வு செய்தது.இதில், ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் அதிகளவில் பயன்படுத்தப்படுவதால், இந்தியாவில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிக விஷத்தன்மை கொண்டதாக மாறிவருவது தெரியவந்துள்ளது

. ஐரோப்பிய நாடுகளில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ள விஷத்தன்மையை விட, 750 மடங்கு அதிகமாக இந்திய காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ளது.இந்த நச்சுத்தன்மை கொண்ட காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்ளும் போது, நரம்பு தொடர்பான நோய்கள், தோல் நோய்கள் உள்ளிட்டவை ஏற்படுகின்றன.


இதுகுறித்து, ஆய்வுக் குழுவை சேர்ந்த சிஷர் கோஷ் கூறியதாவது:
சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட ஐந்திற்கும் மேற்பட்ட ரசாயன உரங்களை இந்திய விவசாயிகள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதனால், காய்கறிகள் நச்சுத்தன்மை கொண்டதாக மாறி வருகிறது. தக்காளி, வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, சுரைக்காய், முட்டை கோஸ், பரங்கிக்காய், வெள்ளரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளும், சில வகை பழங்களும் விஷத்தன்மை கொண்டதாக மாறி வருகிறது.இதனால், அதை உண்பவர்களுக்கு பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, இத்தகைய தடை செய்யப்பட்ட உரங்களை பயன்படுத்தை தடுக்க, அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இயற்கை விவசாயம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு சிசர் கோஷ் கூறினார்.

இவரை நினைவிருக்கிறதா? உமர் முஃக்தார்


பத்தொன்பதாம் நூற்றாண்டு காலத்தில் இத்தாலியின் படைகள் லிபியாவை ஆக்கிரமித்து அப்பாவி மக்களை கொன்று குவித்த காலகட்டத்தில் தனது முதுமையான வயதிலும் கூட லிபிய மக்களின் விடுதலைக்காக இத்தாலிய படையை எதிர்த்து போரிட்டு ஷஹீதான உமர் முஃக்தார் அவர்கள் பிறந்த தினம் செப்டம்பர் 16.


உமர் முஃக்தார்
(1862 - செப்டம்பர் 16, 1931) மினிபா எனும் பழங்குடி இனத்தைச்சார்ந்த இவர் லிபியாவில் பார்குவா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். 1912 ஆம் ஆண்டில் இருந்து 20 ஆண்டுகளாக லிபியாவில் இத்தாலியரின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியவர். இவர் இத்தாலியர்களால் கைது செய்யப்பட்டு 1931 இல் தூக்கிலிடப்பட்டார்.

சிறு வயது வாழ்க்கை

16ம் வயதை எட்டுகையில் இவரது தந்தை காலமானார். இவருடைய மாமனார் ஹுசைன் எல் கரியானியின் பராமரிப்பில் வளர்ந்தார். அப்த் அகாதிர் போடியா இவருக்கு குர்ஆன் ஓதிக் கொடுத்தார்.

1912 ல் இத்தாலி லிபியாவை துருக்கியிடமிருந்து கைபற்றியது. அது முதல் இத்தாலி சுமார் சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக இத்தாலியின் காலணி ஆதிக்கத்தின் கீழ் லிபியா இருப்பதை விரும்பாத உமர் முஃக்தார் அவ்வாட்சியை எதிர்க்க எதிர்ப்பு இயக்கம் நடத்தி அதன் தலைவராக களம் கண்டவர். ஒமர் தன் எதிர்ப்பு இயக்கத்தை ஒழுங்கு படுத்தப்பட்ட, தீரமிக்க மற்றும் சீர்மிக்க இயக்கமாக வழிநடத்தி இத்தாலியை எதிர்த்தார்.

முகத்தை காட்டி, குரலை உயர்த்தும் முஸ்லிம் பெண்ணே!

(முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள் என்ற நூலிலிருந்து)
ஆசிரியர் : ஷேக் டாக்டர் ஸாலிஹ் பின் ஃபவ்ஸான் அல் ஃபவ்ஸான்
(ஹைஅதுல் கிபார் அல்உலமா ரியாத்-சவூதிஅரபியா)


image.pngimage.pngimage.pngimage.pngimage.pngimage.png

     




பர்தாவின் பலன்கள்

........ஒரு பெண் பிற ஆடவர்களின் பார்வையிலிருந்து தன் உடலை மறைத்துக் கொள்ளும் விதமாக அணியும் ஆடை பர்தா எனப்படும்.அல்லாஹ் கூறுகிறான்: தானாக வெளிப்படு வதைத் தவிர வேறு எதையும் அப்பெண்கள் தங்கள் அழகை வெளிப்படுத்த வேண்டாம். இன்னும் தங்கள் முன்றானைகளில் அவர்கள் தங்கள் மார்பகங்களை மறைக்க வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்: ”(இறைநம்பிக்கையுள்ள பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள், அல்லது தம் புதல்வர்கள், அல்லது தன் கணவர்களின் புதல்வர்கள் அல்லது தம் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தம் பெண்கள், அல்லது தம் வலக் கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் (அடிமைகள்), அல்லது ஆடவர்களில் தம்மை அண்டிவாழும் (இச்சை யோடு பெண்களை விரும்ப முடியாத (அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப்பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர வேறு ஆண்களுக்கு தங்களின் அழகலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம்.” (அல்குர்ஆன்: 24:31)

”அப்பெண்களிடம் ஏதாவது ஒருபொருளை நீங்கள் கேட்பதாக இருந்தால் திரைக்கு அப்பால் இருந்தே அவர்களிடம் கேளுங்கள்.” (அல்குர்ஆன்:33:53)

இந்த வசனத்தில் திரைக்குப் பின்னால் எனச் சொல் வது ஒரு சுவர் அல்லது வாசல் அல்லது ஆடை போன்ற வற்றை திரையாக்கி தன் உடலை மறைப்பதைக் குறிக்கும்.மேற்கண்ட வசனத்தில் நபி(ஸல்)அவர்களின் மனைவியருக்காகச் சொல்லப்பட்டாலும் இந்தச் சட்டம் எல்லா முஸ்லிம் பெண்களுக்கும் பொதுவானதாகும். ஏனெனில் அதற்கான ஆடை அணிவதற் குண்டான காரணத்தை அல்லாஹ் சொல்லும் போது,

”அதுவே உங்களின் இதயங்களுக்கும், அவர்களின் இதயங்களுக்கும் தூய்மையானதாகும்.” (அல்குர்ஆன்:33:53) என்று குறிப்பிடுகிறான்.

இன்னும், அல்லாஹ் கூறுகிறான்: ”நபியே! நீர் உம் மனைவிகளுக்கும்,உம் பெண்மக்களுக்கும், இறைநம்பிக்கை யாளர்களின் மனைவியர்களுக்கும் அவர்கள் தங்கள் தலை முன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறும்!” (அல்குர்ஆன்: 33:59)

ஷேகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா தம் ஃபத்வா தொகுப்பின்22/110 ல் சொல்கிறார்கள். மேற்கண்ட வசனத்தில் ‘ஜில்பாப்’ என அல்லாஹ் குறிப்பிடுவது ஒரு பெண் தன் தலை மற்றும் முழு உடலையும் மறைத்துக் கொள்ளும் விதத்தில் அணியும் ஆடை என இப்னுமஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு போன்றவர்கள் கூறியுள்ளார்கள். அவள் தன் கண்களைத் தவிர முழு உடலையும் மறைத்துக் கொள்ளும் விதத்திலான ஆடையை அணிவது என அபூஉபைதா போன்றோர் கூறுகின்றனர். ஒரு பெண் பிற ஆடவர்களிடமிருந்து தன் முகத்தை மறைக்க வேண்டும் என்பதற்கான நபிவழி ஆதாரங்களில் ஒன்று பின் வரும் ஹதீஸாகும்.

”நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இஹ்ராம் அணிந்த நிலையில் இருக்கும்போது வாகனக் கூட்டம் ஒன்று எங்களைக் கடந்து செல்லும். எங்களுக்கு நேரே அவர்கள் வரும்போது எங்களில் உள்ள பெண்கள் தங்கள் தலையில் தொங்கிக் கொண்டிருக்கும் துணியால் முகத்தை மறைத்துக் கொள்வார்கள்.

29 செப்டம்பர் 2011

இணைந்தது எங்கள் சமுதாயம் !




கூத்தாநல்லூர் இளைஞர் இயக்கம் நடத்திய சமுதாய ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று கூத்தாநல்லூர் செல்வி மஹால்-ல் நடைபெற்றது. கூத்தாநல்லூர் ஜமாதார்களும், சமூக ஆர்வலர்களும், இளைஞர்களும், சமுதாய இயக்கத்தை சேர்ந்த மாநில நிர்வாகிகளும், மாவட்ட நிர்வாகிகளும், நகர நிர்வாகிகளும், கூத்தாநல்லூர்-ஐ சேர்ந்த அனைத்து கட்சி மற்றும் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


நிகழ்ச்சியின் துவக்கமாக A.A. அர்ஷத் அலி கிராத் ஓதி துவக்கி வைத்தார். செய்யத் நாசர் அவர்கள் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். JMR. ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் இவ்விழா-வை தலைமை ஏற்று தந்து சிறப்பித்தார்கள். கல்வி மற்றும் மருத்துவம் பற்றி Dr. M. சர்வத் கான் MBBS அவர்கள் சிறப்புரை ஆற்றினார். சமுதாயத்தில் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பில் SDPI மாநில செயலாளர் A.அபுபக்கர் சித்திக் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். சமுதாய ஒற்றுமை என்ற தலைப்பில் மனித நேய மக்கள் கட்சியின் மாநில துணை செயலாளர் M. தமிமுன் அன்சாரி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். தலைமை ஏற்றி தந்து சிறப்பித்த JMR. ரஹ்மத்துல்லாஹ் அவர்களுக்கு தக்பீர் ஹஜ் சர்வீஸ் நிறுவனர் Lion. N.S. சிராஜி தீன் அவர்கள் பொன்னாடை போற்றினார். நிகழ்ச்சியின் இறுதியாக கூத்தாநல்லூர் இளைஞர் இயக்க தலைவர் K.J. செய்யது யூசுப் தீன் அவர்கள் கொள்கை விளக்க உரை மற்றும் நன்றி உரை ஆற்றினார்.

11 செப்டம்பர் 2011

கடையநல்லூரில் குழப்பம் விழைவிக்க முயற்சி…(ஏனைய முஸ்லிம்கள் வாழும் பகுதில் உஷாராக இருக்க வேண்டும் .)

கடையநல்லூரில் கடந்த சில தினங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு என்ற பெயரில் சில பெண்கள் முஸ்லீம்கள் இருக்கும் பகுதிகளான பேட்டையில் வீடுதோறும் சென்று எத்தனை பேர் வீட்டில் இருக்கிறார்கள் அதில் எத்தனை பேர் வெளிநாட்டில் வசிக்கிறார்கள் என்று கணக்கெடுத்து வந்துள்ளனர்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு சில மதங்களுக்கு முன்னர் முடிவடைந்த நிலையில் இப்படியொரு சம்பவம் கடையநல்லூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனை அறிந்த கடையநல்லூர் பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த இளைஜர்கள் சிலர் இது குறித்து கணக்கெடுக்க வந்த ஆண்கள் மற்றும் பெண்களிடம் விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணான தவளை தெவித்தனர்.இதில் சந்தேகம் அடைந்த அந்த பகுதி மக்கள் அவர்கள் கொண்டு வந்த லேப்டாப்பை கைப்பற்றி விசாரித்ததில் அதில் முஸ்லீம் பகுதிகளான மேலப்பாளையம் மற்றும் சில முலீம்கள் அதிகம் வாழும் ஊர்கள் தகவல்கள் இருந்தததை கண்டறிந்து.அவர்களை காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் கடையநல்லூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடையநல்லூர் மக்கள் மற்றும் வெளிநாட்டு வாழ் சகோதரர்கள் தங்களை சார்ந்தவர்களை உஷாராக இருக்க சொல்லவேண்டும்.அதுமட்டுமல்லாது கணக்கெடுக்க வருகிறோம் என்று சொல்லிக்கொண்டு யாரவது உங்களிடம் தேடி வந்தால்,தீர விசாரித்து அவர்களிடம் பேசுங்கள் உங்களுக்கு அவர்களுடைய நடத்தையில் சந்தேகம் ஏற்ப்பட்டால் உடனடியாக நீங்கள் இருக்கும் பகுதி இளைஞ்சர்கள் மற்றும் ஜமாத்தார்களுக்கு தகவலை தெரியப்படுத்துங்கள். 

சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு...

சவூதியில் "ஹுரூப்" "Run away " "هرب" என்ற விதியை இந்தியர்கள் மீது வழுக்கட்டாயமாக திணித்து அவர்கள் பாதிக்கப்படுவதை ரத்துசெய்யும் பணியில், இந்திய வெளியுறவு துறை, இந்திய ஜனாதிபதி, இந்தியாவின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, சவூதி அரேபியா தொழிலாளர் நலத்துறை, சவூதி மன்னரின் தனிப்பிரிவு போன்ற துறைகளின் தனிக்கவனத்திற்கு கொண்டு சென்று ஹுரூப் என்று சொல்லக்கூடிய அந்த கொடிய சட்டம் எந்த காரணமுமின்றி இந்தியர்கள் மீது பாயாமல் தடைசெய்ய, சவூதி அரேபியா மத்திய மண்டல தமுமுக மற்றும் கேரளா அசோகியேசன் இணைந்து கூட்டுநடவடிக்கைகள் மேற்கொள்ளவிருக்கின்றன. அதற்கான அனைத்து சட்டப்பூர்வ ஆலோசனைகளும் பெற்றப்பட்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. அல்ஹம்துலில்லாஹ். இது சம்பந்தமாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி அவர்களிடம் கேரளா அசோசியேசன் நிர்வாகிகள் மூலம் நேரடியாக பேசப்பட்டுள்ளது. சவூதி வாழ் இந்தியர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்திய உச்சநீதி மன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வழக்கின் முக்கிய நோக்கம்:

சவூதியில் செயல்படும் இந்திய தூதரகத்திற்கு போதிய அதிகாரம் இல்லாததால் சவூதி அரேபியாவிற்கு பணிக்கு வரும் பணியாளர்களை அவர்களின் ஸ்பான்சர்கள் கொத்தடிமைபோல் நடத்தும் அவல நிலையும், வேலைக்கு தகுந்த ஊதியமின்மையும், உரிய நேரத்தில் சம்பளம் கொடுக்காததும் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு குறிப்பாக வீட்டு வாகன ஓட்டுனர்களுக்கு அவர்களின் இக்காம, வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன விபத்து காப்பீடு போன்ற அடிப்படை உரிமைகள் கூட வழங்க மறுப்பது விபத்துகள் ஏற்பட்டால் தொழிலாளியின் ஊதியத்தில் பிடித்தம் செய்வது, வீட்டுப் பணிப்பெண்கள் படும் சொல்லென்னாத் துயரங்கள்

''கட்சி மாறுவது இல்லை... திராவிட இயக்கத்தில் இருக்கிறேன்!'' அப்துல்லாஹ் .....

பேச்சு கேசட்டுகளில் பெரியார் தாசன் கேசட் பல ஆண்டுகளுக்கு முன்பே பிரசித்தம். இரண்டு மணிநேரம் பேசிவிட்டு அரைமணி நேரம் இன்டர்வெல் விட்டுவிட்டு மீண்டும் இரண்டு மணிநேரம் பேசுவார். அப்படிப்பட்ட பேராசிரியர் பெரியார்தாசன், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலையில் 'தாயகம்’ வளாகத்துக்கு வந்து தன்னை ம.தி.மு.க-வில் இணைத்துக் கொண்டுவிட்டார்!
பரவசத்தில் இருந்த வைகோ, ''எனக்கு அதிக மகிழ்ச்சியாக இருந்தால் சரியாகப் பேச வராது. மூன்று நாட்களாக நான் அதிகமாகவே மகிழ்ச்சியாக இருக்கிறேன். திராவிட இயக்கத்தின் கருத்துக் களஞ்சியமாக இருக்கும் பேராசிரியர் வந்திருப்பது, நமக்கு 1,000 யானை பலம் கிடைத்ததைப்போல. இங்கே அவர் பேசியது ட்ரெய்லர்தான். மீதியை நெல்லை மாநாட்டில் கேட்கலாம்...'' என்று சுருக்கமாக முடித்ததும் கைதட்டல்களால் அதிர்ந்தது தாயகம்.
முன்னதாக தனது ஏற்புரையில், நையாண்டிகளுக்கு இடையில் பெரியார்தாசன் பேசப் பேச, சிரிப்பும் கைதட்டல்களுமாக அரங்கம் அமர்க்களப்பட்டது. அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...
''திடீரென ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்தது ஏன்?''
''கட்சி அரசியலில் இதுவரை நான் பார்வையாளனாகத்தான் இருந்தேன். நீண்டகாலமாக தி.மு.க-வின் அனுதாபி. பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் விவகாரத்தில்... தூக்குப் போடப் போறான், பயிற்சி நடக்குது, இப்படித்தான் தூக்கு போடப் போறான்னு ஒரு பக்கம் செய்திகள்... '9-ம் தேதி தூக்கு, அதுக்கு யார் யாரை நியமிச்சு இருக்காங்க?’னு செய்திகள் வந்தபோது, பதைபதைப்பு. அந்த இறுக்கத்தைத் தளர்த்தினது, சட்டரீதியான முயற்சிகள்தான். வாழ்நாள் முழுதும் போராளியா இருந்த பாபா சாகேப் அம்பேத்கர், 'சட்டரீதியாக முறையாக செயல்பட்டால்தான் உரிமைகளை வென்றெடுக்க முடியும்’னு சொல்வார். சரியான அரசியல் நகர்வு இதுதான்னு நினைக்கிறேன். நீண்டகால நாடாளுமன்றவாதியான வைகோ இதைச் சாதிச்சுக் காட்டியிருக்கார். இதுதான் என்னை ம.தி.மு.க-வில் கொண்டுவந்து சேர்த்தது!

21 ஆகஸ்ட் 2011

முதல் இரவு

உலகில் பருவ வயதைத் தாண்டிய, சிந்திக்க தெரிந்த எல்லோறும் ஒரு முதல் இரவுக்காக காத்திருக்கிறார்கள்.

திருமணம் செய்து கொள்ளும் ஆணுக்கும் பெண்ணுக்கும் உலக வாழ்க்கையில் ஒரே ஒரு உதலிரவே கிடைக்கின்றன, பலர் அந்த முதலிரவை திருமணத்திற்கு முன்னர் அப்படி, இப்படி என்று கற்பனை பண்ணிக்கொன்று அந்த நாளைக்காக காத்திருக்கின்றார்கள்,

இன்றைய இளைஞர் யுவதிகள் அனைவரும் உடலுரவுக் கலையைப் பற்றி திருமணத்திற்கு முன்னரே மஞ்சள் பத்திரிகைகள்,
ஆபாச திரைப்படங்கள், ஆபாச இணையத்தள பக்கங்கள், ஆபாச கல்வித்திட்டங்கள், மற்றும் நண்பர்கள் மூலம் அறிந்து கொள்வதனால் அந்த விடயத்தில் உசாராக நடைபோட எத்தனிக்கின்றார்கள்,

இந்த விடயத்தில் நகர் புற பெண்கள் உசாராக இருந்தாலும் கிராமத்துப் பெண்கள் மற்றும் அமைதியான ஒழுக்கமான சூழலில் வாழும் இளம் பெண்களும் அவர்களுக்கு அடிப்படையாக இருக்க வேண்டிய அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்ற நான்கு குணங்களையும் முறையே கொண்டவர்களாக இருக்க முனைவதனால் இதில் கொஞ்சம் மந்த கெதிதான்.

எவ்வளவு தான் இத்துரையில் உசாராக இருந்தாலும் அந்த நாள் நெருங்கும் போது எல்லா இளைஞர், யுவதிகளும் டிம்மாகிவிடுகின்றார்கள்.

சிலர் தாங்கள் பல வருடங்களாக காத்திருந்த, கற்பனை பண்ணியவாறு அந்த முதலிரவை ஒரெ முரையில் காம உணர்ச்சிகளையும் காமப் பசியையும் தீர்த்துக்கொள்ளலாம் என நினைக்கின்றனர், இது மிகவும் தவரானதாகும்.

கணவரை மகிழ்விப்பது எப்படி? (அல்குர்ஆன், நபிமொழிகளின் ஒளியில்)

மனைவியின் அழகிய வரவேற்பு

பணியிலிருந்தோ அல்லது பயணத்திலிருந்தோ கணவன் வீட்டிற்கு வரும்போது அவரை நல்ல வார்த்தைகள் கூறி வாழ்த்துக்களுடன் வரவேற்று உபசரியுங்கள்.

முகமலர்ச்சியுடன் கணவரை எதிர்கொள்ளுங்கள்.

உங்களை அழகுபடுத்தி, உங்கள் கணவருக்குப் பிடித்தமான வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொள்ளுங்கள்.

சந்தோஷமான செய்தியை முதலில் தெரிவியுங்கள், கவலையான செய்தி ஏதேனும் இருந்தால் உங்கள் கணவர் அமைதி அடையும்வரை பிற்படுத்தி வையுங்கள்.

அன்பான, அரவணைப்பான வார்த்தைகளை உங்கள் கணவரிடத்தில் பயன்படுத்துங்கள் (வேலையிலோ அல்லது வரும் வழியிலோ ஏதாவது பிரச்சினைகளைச் சந்தித்திருக்கலாம்).

கணவருக்காக அக்கறையுடன் தயாரிக்கப்பட்ட உணவை, சரியான நேரத்திற்குள் பரிமாறுங்கள் (கணவருடன் சேர்ந்து உண்ணும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்).

இனிய குரலும் தேவையான கனிவும்

உங்கள் கணவரிடம் மென்மையான குரலில் அழகாக, அன்பாகப் பேசுங்கள். கணவரைத் தவிர வேறு எந்த ஆணிடமும் - குறிப்பாக - மஹரம் அல்லாத ஆண்களுக்கு முன்னால் குழைந்து பேசக்கூடாது என்பதை மறந்துவிடவேண்டாம். உங்கள் கணவரிடத்தில் "உம்!! இல்லை!!" என்று அரைகுறையாகப் பேசி, அவரின் பேச்சை உதாசீனப்படுத்தாதீர்கள்

நறுமணமும் அலங்கரிப்பும்

18 ஆகஸ்ட் 2011

குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில், ஒவ்வோர் ஆணும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை

அழகிய வரவேற்பு
வேலையிலிருந்தோ, வெளியூர் பயணத்திலிருந்தோ அல்லது எங்கிருந்து வீட்டுக்கு வந்தாலும் நல்ல வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறு வீட்டில் நுழையுங்கள்.

மலர்ந்த முகத்துடன் ஸலாம் சொன்னவாறு மனைவியைச் சந்தியுங்கள். ஸலாம் சொல்வது நபிமொழி மட்டுமல்லாது உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும் பிரார்த்தனையும்கூட.அவளுடைய கைகளைப் பற்றி குலுக்கி 'முஸாபஹா' செய்யலாம்.

வெளியில் சந்தித்த நல்ல செய்திகளைத் தெரிவித்துவிட்டு மற்ற செய்திகளை வேறு சந்தர்ப்பத்திற்காகத் தள்ளி வையுங்கள்.


இனிப்பான சொல்லும் பூரிப்பான கனிவும்
நேர்மறையான நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுங்கள். எதிர்மறையான வார்த்தைகளைத் தவிர்ந்து கொள்ளுங்கள்.

உங்களின் வார்த்தைகளுக்கு மனைவி பதில் கொடுக்கும்பொழுது செவிதாழ்த்துங்கள்.

தெளிவான வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள். அவள் புரிந்து கொள்ளவில்லையெனில் மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்.

மனைவியைச் செல்லமாக அழகிய பெயர்களைக் கொண்டு அழைக்கலாம்.

08 மார்ச் 2011

வெளிநாட்டு மோகம் போயே போச்சு...நாடு திரும்பும் இந்தியர்கள்!

அதென்ன இந்திய அமெரிக்கர், அமெரிக்க இந்தியர்? இரண்டு வகை இந்தியர்கள் உள்ளனர் அங்கே. ஒன்று, அமெரிக்காவில் பல தலைமுறையாகவே வாழ்ந்து வருவோரின் வாரிசுகள்; அவர்கள் முகத்தில், தோற்றத்தில் வேண்டுமானால் இந்திய களை கட்டும்; ஆனால், அவர்கள் முழுக்க முழுக்க அமெரிக்கர்கள். பல தலைமுறைகளுக்கு முன்பே செட்டில் ஆனவர்கள். சில ஆண்டுக்கு முன்பு குடியேறியவர்கள் இந்திய அமெரிக்கர் என்று அழைக்கப்படுகின்றனர். இந்த இரண்டாமவரே இப்போது 25 லட்சம் பேர் வரை உள்ளனர்.

இதுபோல பிரிட்டனிலும் பல தலைமுறைகளுக்கு முன் சென்று செட்டில் ஆனவர்கள் பிரிட்டிஷ் இண்டியன்; சமீப ஆண்டுகளில் போய் செட்டில் ஆனவர்கள் இண்டியன் பிரிட்டிஷ். இவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டும் என்று தகவல் சொல்கிறது.

இந்தியாவுக்கு போயிடலாம்!