நீடூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீடூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25 பிப்ரவரி 2012

ஹஜ் மற்றும் உம்ரா விற்கு முறையான முழுமையான வழிகாட்டுதல்(நமதூர் ராஜா தெரு அன்சாரி அவர்கள் )


எல்லாம் வல்லா அல்லாஹ்வின் நல்லாருள் மற்றும் ஹாஜிகளின் நல் ஆதரவினாலும் 7ஆம் ஆண்டு பூர்த்திசெய்து 8 ஆம் ஆண்டில் நுழைகிறேன்


ஹஜ் மற்றும் உம்ரா விற்கு முறையான முழுமையான வழிகாட்டுதல்

மக்கா மற்றும் மதீனாவில் மிக அருகில் தாங்கும் இட வசதி

புனித குரான் ஹதீஸ் அடிப்படையில் வழிகாட்டுதல்

சைவம் மற்றும்  அசைவம் தமிழக உணவு நம் தமிழ்நாடுசமையல்காரர் ஏற்பாடு 


மேலும் விபரம் அணுக

அன்சாரி ( நீடூர் ராஜா தெரு )
மக்காஹ் ,
அலைபேசி : : +966 564008897 

24 டிசம்பர் 2011

சாதிக் பாட்சாவை விடுதலை செய்யாத காவல்துறைக்கு சமுதாய இயக்கத்தினர் கடும் கண்டனம்!விடுதலைக்கு தொடர்ந்து முயற்சி!

நீடூர்-நெய்வாசலைச் சார்ந்த சாதிக் பாட்சா சந்தேகத்தின் பேரின் கைது செய்யப்பட்டு டிசம்பர் 6-க்குப் பின் விடுதலை செய்யப்படுவார் என்பதாகக் காவல்துறை கூறி வந்தது. ஆனால் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை.  இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து சமுதாய இயக்கத்தினர் தங்களின் சென்னைப் பொதுக் கூட்டத்தில் கடுமையாகப் பேசியுள்ளனர். சட்டரீதியான தொடர் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. சாதிக் பாட்சா விரைவில் விடுதலையாக சமுதாய மக்கள் தொடர்ந்து துஆ செய்ய வேண்டுகிறோம்.


நன்றி (செய்தி ) :http://niduronline.com/?p=7885

நீடூர் ஜாமியா மஸ்ஜித் வருடாந்திர கூட்டம்



நீடூர் ஜாமியா மஸ்ஜித் வருடாந்திர கூட்டம்

நீடூர் ஜாமியா மஸ்ஜித் வருடாந்திர ஜமாஅத் கூட்டம் நேற்று (23-12-2011) இரவு 9.00 மணி அளவில் நடைப்பெற்றது . இதில் கூட்ட தலைவராக TSA ரபியுதீன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் , பைத்துல் மால் ,வருடாந்தர வரவு செலவு பற்றி பேசப்பட்டது .

மஸ்ஜித் சொத்து கும்பகோணம் ,மயிலாடுதுறை , நீடூர் (6 இடம் ) ஆகிய இடங்களில் உள்ள சொத்துக்களை பராமரிப்பது பற்றியும் கும்பகோணம் சொத்தை விற்ப்பது பற்றியும் ஆலோசனை செய்யப்பட்டது .
மஸ்ஜித் மாத செலவு 20,000 ருபாய் ஆக உள்ளது ,வரவு 10,000 ஆக உள்ளது மேற்ப்படி மாத வருவாய் உயர்த்துவது பற்றி ஆலோசனை செய்யப்பட்டது ,

பள்ளிக்கு ஜெனரேட்டர் புதிதாக வாங்க வசூல் செய்யப்பட்டது .

நிஸ்வான் பெண்கள் மதரச வருதந்திர சாந்த கணக்கை விவரித்து வரும் ஆண்டிற்கான சந்தா செலுத்த வேண்டி அறிவுறுத்த பட்டது ....


தாருல் இஸ்லாம் நிஸ்வான் பெண்கள் மதரசாவில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு கிழமை மாலை 4 .00 மணியளவில் பெண்களுக்கான சிறப்பு பயான் நடைபெறுகிறது . அதில் அணைத்து தாய் மார்களும் சகோதிரிகளும் கலந்துக்கொள்ள அறிவுறுத்த பட்டது ....

06 நவம்பர் 2011

நமதூர் முஸ்லிம் கலாபிமானி சங்கம் ( MKS சங்கம் ) மற்றும் நூருல் ஈமான் படிப்பகம் மீள் திறப்பு .

                        இன்று ( 06-11-2011 ) காலை பஜர் தொழுகைக்கு பின் . 55 ஆண்டுகள் வயதை கொண்ட சங்கம்  மற்றும் ௨௧ ஆண்டுகள் வயதை கொண்ட நூருல் ஈமான் நூலகம் இவ்விரண்டும் இன்று அல்லாஹ்வின் நல்லருளால் மறு  திறப்பு






 
 புதிய வளாகத்தில் திறக்கப்பட்டது .
        
                           நமதூர் சங்கம் 15-05-1955 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு  சிறப்பாக செயல் பட்டு வருகிறது .
                        
                        நூருல் ஈமான் படிப்பகம் 01-01-1990 முதல் செயல் பட்டு வருகிறது .
இந்நுலகம் இஸ்லாமிய அறிவு மற்றும் வாழ்க்கைக்கு தேவையான புத்தகம் கிடைக்கும் இடமாக செயல்படுகிறது .
                       
                     இந்நிலை இல்   கடந்த நான்கு வருடங்கள் சில நிலைகளில் பள்ளி அருகே உள்ள கட்டிடத்தின் மேல் தளத்தில் செயல்பட்டது .அந்நிலையில் பெரியோர்களால் நுலகத்தை பயன்படுத்த முடியாத நிலை உருவாகி 3  ஆண்டுகள்   முடங்கி போனது .அந்த நுலகத்தை தற்பொழுது ஊர் ஜமாத்தார்கள் கட்டிடத்தின் கிழதளத்திர்க்கு இடமாற்றம் செய்து தந்துள்ளார்கள் .

(அல்லாஹ் நுலகம்  மென்மேலும் வளர நல்லருள் செய்வானாக  ............ஆமீன் .)
இந்நிகழ்ச்சி சங்கத்து தலைவர் VM பஜ்ருதீன் வரவேற்க துணை தலைவர் சதாம் ஹுசைன் மற்றும் செயலாளர் பார்ஹான் மற்றும் ஜமாத்தார்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது .

      ஜாமிய மஸ்ஜித் இமாம் பக்ருதீன் ஹஜ்ரத் அவர்கள் துவா செய்து நபிகள் காலத்தில் சங்கத்தின் நிலை பற்றி சிறு உரை நிகழ்த்தினார் .



அல்ஹாஜ் TSR நஜிமுதீன் அவர்கள் சங்கம் நடைபெற வேண்டிய  முறைகளை பற்றியும் வேண்டுகோளையும் சுட்டி கட்டி சிறு உரை நிகழ்த்தினார்கள் .

இடம்மாற்றம் தந்ததற்கு சங்க தலைவர் VM பஜ்ருதீன் நன்றி தெரிவிக்க நிகழ்ச்சி இனிதே முடயுற்றது .


நமதூர் நூருல் ஈமான் படிப்பகம் மற்றும் MKS சங்கம் மென்மேலும் வளர துவா செய்தவனாக NAMNIDUR குழுமம்                            
                                                                                                         வஸ்ஸலாம்  




11 செப்டம்பர் 2011

மரண அறிவிப்பு ...........

நீடூர் மெயின் ரோடு IOB பேங்க் எதிர்புறம் வசித்து வந்த [ஹாங்காங்] முஹம்மது மூஸா நேற்று (10-09-2011) காலை காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


செய்தி : ஹாரிஸ்

22 ஆகஸ்ட் 2011

மரண அறிவிப்பு

நீடூர் வடக்கு மெயின் ரோடு முன்னால் முத்தவல்லி மர்ஹூம் ஹலீல் ரஹ்மான் அவர்களின் மனைவி ஜுபைதா பீவி இன்று(22-08-2011) நள்ளிரவு 12:00 மணிக்கு காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

தகவல்: சபீர் அஹ்மது, நீடூர் 

13 ஆகஸ்ட் 2011

மரணச் செய்தி

   
நீடூர் தெற்கு மெயின் ரோடு உருதுபாய் வீடு ஜெமில் அகமது அவர்களின் மனைவியும் நமது நண்பர் J ரபிக் அகமது அவர்களின் தாயாருமான சாபிரா பிவி இன்று காலை ( 05.08.2011 ) பிரான்சில் காலமானார் ( இன்னா லில்லாஹி வ இன்னா இலிஹி ராஜிவுன் ). அவர்களின் மறுமை வாழ்வுக்காகவும், மக்பிரத்துக்காகவும் துஆ செய்வோமாக ஆமின்.


தகவல்:- ஹாஜி முஹம்மது 

05 ஜூலை 2011

நமதூர் முத்தவல்லி நாட்டாண்மை பஞ்ஜய்தர்கள் தேர்வு

அஸ்ஸலாமு அலைக்கும் (வர்ஹ )


நமதூர் முத்தவல்லி நாட்டாண்மை பஞ்ஜய்தர்கள் தேர்வு இன்று (05/07/2011) காலை 9 மணியளவில் நடைபெற்றது .இவ்கூட்டதில் நமதுரை சார்ந்த அனைவரும் கலந்து கொண்டனர் .அல்ஹம்துல்லாஹ் ..........

இதுவரை நிர்வாகிகளாக .அகமது தம்பி , முஹம்மத் மூஸா ,நஜிமுதீன் ,தாஜுதீன் .ஆகியோர் பதவி வகித்து வந்தனர் . இவர்களின் பதவி காலம் முடிவடைந்ததால் .புதிய நிவகிகள் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர் ..
பழைய நிர்வாகிகளின் சேவைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது ....




புதிய நிர்வாகிகள் .........

1.அஹமத் தம்பி             (தலைவர் )

2.முகம்மது மூஸா           (துணை தலைவர் )

3.T.S.R. அப்துல் மஜீத்       (பொருளாளர் )

(உறுப்பினர்கள் )

4.நஜிமுதீன் 

5.நஜீர் அஹமத் 

6.அப்துல் சலாம் 

7.அப்துல் ஹக்கீம் 


ஆகிய 7 நிர்வாகிகள் தேர்தேடுக்கப்பட்டனர் .


இத்துடன் நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நிறைவு பெற்றது ..

மேலும் பொது கூட்டம் வரும் ஞாயிறு (10-07-2011)மாலை மகரிப் நேரம் நடை பெரும் .




புதிய நிர்வாகிகளின் பனி சிறக்க எல்லாம் வல்ல அல்லா நல் அருள் புரிவா னாக ............ ஆமீன் .


என்றும் வூர் நலன் காக்க ..............................நம்நீடுர் .bolgspot.com  


                                             

10 ஜூன் 2011

மரண அறிவிப்பு

நீடூர்
வடக்கு தெரு வண்ணக்குடியார் வீடு சிக்கந்தர்,ஜாகிர் இவர்களின் தகப்பனார் S.ஹபிப் முஹம்மது அவர்கள் இன்று காலை(10/06/2011) 4.00 மணியளவில் காலமானார் .

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் நல்லடக்கம் நாளை மாலை 3.00 மணியளவில் நடைபெறும் .

தகவல் :- வசீம்

30 ஏப்ரல் 2011

மரண அறிவிப்பு ........

நீடூர் தெற்குமெயின்ரோடு பட்டனத்தங்க வீடு( ஹாஜி முகமது ,முகமது ஹாரிஸ் இவர்களின்   தகப்பனார் ) ஹபிப் ரஹ்மான்  அவர்கள் இன்று மாலை (30-04-2011) 3.00 மணியளவில் காலமானார் .

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் நல்லடக்கம் நாளை காலை 10.00 மணியளவில் நடைபெறும் .

தகவல் :-  வசீம்  

16 மார்ச் 2011

வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்


சிந்திக்க சில நிமிடம் ........வழி  தவறில் இருந்து வல்ல இறைவன் நம்மை கப்பற்றுவனஹா ......ஆமீன் . 

ஆஹா! இதோ பார்! சூப்பர் ஃபிகர்! ஸ்டில் போடப்பா என்று ஒருவர் சொல்கின்றார். மற்றொருவர் ரீவைண்ட் பண்ணப்பா! தூள் பரத்துகிறது என்கிறார். ஏ இது யாரப்பா? இவர் சம்சுகனி சம்சாரம். அது யாரப்பா? ஆள் அசத்தலா இருக்கே? இது நம்ம காதர் தங்கச்சி!

தங்களுக்கு முன்னால் ஓடிக் கொண்டிருக்கும் வீடியோ காட்சிகளுடன் மேற்கண்ட வீடியோ கமென்டரி உரையாடல்களும் கலகலப்பாக ஓடிக் கொண்டிருக்கும். இவை எல்லாம் எங்கு நடக்கின்றன என்கிறீர்களா? சாதி சமய பேதமற்று எம்மதமும் சம்மதம் என்ற கோட்பாட்டின்படி சர்வ சமயத்தவரும் சங்கமமாகி தங்கியிருக்கும் அரபு நாட்டின் அறைகளில் தான்.

(அரபு நாடு என்றவுடன் அங்கு பணிபுரியும் எல்லோருமே இப்படித் தான் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. மார்க்கப் பணிகளுக்காகவும், மார்க்கப் பிரச்சாரத்தைக் கேட்பதற்காகவும் மட்டுமே தங்கள் விடுமுறை நாட்களை அர்ப்பணிக்கும் சகோதரர்களும் அரபகத்தில் இருக்கின்றார்கள். இங்கு நாம் குறிப்பிடும் சங்கதிகளும் அரபகத்தில் நடக்காமல் இல்லை. வீடியோவில் பெண்கள் போஸ் கொடுப்பதால் ஏற்படும் விளைவுகளைச் சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்)

02 மார்ச் 2011

யுஏஇ-யில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்குவதற்காண அடையாள அட்டை வழங்கும் பணி துவக்கம்

துபை,மார்ச்.2:வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்குவதற்கு அவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் பணி துவங்கி உள்ளது.
இதன் ஒரு கட்டமாக அமீரகத்தில் வாழும் இந்திய மக்கள் அங்குள்ள தூதரக இணையதளத்தில் விண்ணபித்து கொள்ள வேண்டும். அதில் அவர்களது விசா எண், முடிவடையும் காலம், பாஸ்போர்ட் எண் மற்றும் முடிவடையும் தேதி, முகவரி, செல்பேசி எண், இந்திய முகவரி போன்ற சில தகவல்கள் கொடுக்க வேண்டும். பின்னர் மின்னஞ்சலுக்கு மற்ற விவரங்கள் வரும். அடையாள அட்டை இந்திய முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இதுவரை இதில் பதிவு செய்யாதவர்கள் உடனே இதை பயன்படுத்தி கொள்ளவும்.

http://uaeindians.org/registration.aspx

செய்தி நன்றி:-
பாலைவனத் தூது

01 மார்ச் 2011

மரண அறிவிப்பு


நீடூர் மாத கோவில் தெரு (பக்ரிஷா பாய் ) சம்சுதீன் மாமனார்  S. பாசுதீன் இன்று காலை (01/03/11)காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் நல்லடக்கம் இன்று மாலை 4 மணி அளவில் நடைபெறும் .

செய்தி :- ஹாரிஸ் , வசீம்

19 பிப்ரவரி 2011

நம் நீடூர் பைத்துல் மால்


அஸ்ஸலாமு அலைக்கும் (வாராஹ்....)
U.A.E வாழ் நம் நீடூர் அன்பர்கள் சார்பாக நேற்று(18/02/2011) மாலை துபாயில் ஆலோசனை கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது .அல்ஹம்து லில்லாஹ்...
இந்த முதல் கூட்டத்தில் இனி வரும் கலாம் நம் நீடூர் மக்கள் செய்ய வேண்டிய நற்காரியம் பற்றியும் பேசப்பட்டது .மற்றும் நம் முலம்
பைத்துல் மால் ஒன்றை உருவாக்கி அதன் முலம் நமதூர் மக்களுக்கு உதஊவது மேலும் பல செய்திகள் கலந்து ஆலோசனை செய்யப்பட்டது.

பைத்துல் மால் நிதி மாத சந்தாவாக பெறப்பட்டு வட்டி இல்லா கடன் ,ஏழை மாணவர்களுக்கு தவணை காலம் கூடிய கடன் போன்றவற்றை செயல் படுத்த
உறுதி செய்யப்பட்டுள்ளது .


பைத்துல் மால் நிர்வகிக்க ஆசாத் ,புருஹான் ,ஹபிப்ரஹ்மான் ஆகியோர் கொண்ட குழு ஒன்று நிர்ணயம் செய்யப்பட்டது .
மாத சந்தாவாக 25 திராஹம்  நிர்ணயம் செய்யப்பட்டது .
உங்கள் மாத சந்தா வை அருகில் உள்ள நமது பொருப்பளர்களிடம் கொடுக்கலாம் .

நமது பொறுப்பாளர்கள்
துபாய் -            ஆசாத்                     050 9940261
                        ஹபிப்ரஹ்மான்       050 5184228
                             சபான்                      050 8403421


அபுதாபி -           நௌசாத்          050 2204767
                                 முபாரக்           050 6829065

மேலும் விபர்களுக்கு ,         namnidur@gmail.com

ஆசாத்                                  050 9940261
ஹபிப்ரஹ்மான்             050 5184228
புருஹான்                           055 7207503



மரண அறிவிப்பு


நீடூர் ராஜதெரு இதயத்துல்லாஹ் அவர்களின் மகள்  நீடூர்-நெய்வாசல் அஜீஸ் நகர் தென்னைமரத்தாங்கள் வீடு சபீயுத்தீன் அவர்களின் மனைவி நபீஸா பீவி நேற்று மாலை (18-02-2011)  காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.




தகவல் :- வசிம் 

18 பிப்ரவரி 2011

மரண அறிவிப்பு



நீடூர் தெற்கு  மெயின் ரோடு மர்ஹூம் ப்ராட் போர்ட் அப்துல் அஜீஸ் அவர்களின் மனைவியும் முஹம்மது ரபீக் அவர்களின் தாயார்  தாஜுல்ஹுதா இன்று(18-02-2011) காலை காலமானார்.
இன்னா லில்லாஹி இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் நல்லடக்கம் இன்று மாலை4  மணி அளவில் நடைபெற்றது .

தகவல் :-வசிம்


02 டிசம்பர் 2010

நம்நீடுரில் மருத்துவ கல்லுரி


நம்நீடுரில் மருத்துவ கல்லுரி துவக்க வக்புவரியம் விருப்பம் J.M.H அரபி கல்லுரி உடன் ஆலோசனை

26 செப்டம்பர் 2010

மிஸ்பாஹுல்ஹுதா டாட் காம் உதயமாகிறது!

misbahulhudha.com
இன்ஷா அல்லாஹ் விரைவில் மிஸ்பாஹுல்ஹுதா டாட் காம் உதயமாகிறது! ஜாமிஆ மிஸ்பாஹுல்ஹுதாவிற்கான அதிகாரபூர்வ இணையதளம் misbahulhudha.com என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டு தளம் கட்டுமானத்தில் உள்ளது. கட்டுமானப் பணிகளை J.M.H. ரோடு உவைஸ் தலைமயிலானக் குழு கவனித்து வருகிறது. வரலாற்று சிறப்புமிக்க மிஸ்பாஹுல்ஹுதா.காம் இணையதளத்தை இன்ஷா அல்லாஹ் விரைவில் காணலாம்.

செய்தி : http://niduronline.com/

14 செப்டம்பர் 2010

அன்பார்த நீடூர் அன்பர்களே

அன்பார்த நீடூர் அன்பர்களே இத் வலைத்தளம் பற்றிய  உங்கள் கருத்துக்களை நங்கள் எதிர்பார்கிறோம்  .உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை எங்களுக்கு அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி namnidur@gmail.com 
மேலும் 
உங்களது பயனுள்ள தகவல்கள், ஆக்கங்கள், இஸ்லாமிய செய்திகள், நமதூரைப்பற்றிய தகவல்கள் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி namnidur@gmail.com