அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

05 ஏப்ரல் 2012

இந்தியாவில் புரட்சிக்கு ராணுவம் முயற்சி: நாடு அதிர்ந்தது!

புதுடெல்லி:மத்திய அரசுக்கும், பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் தெரியாமல் தரைப்படையின் 2 யூனிட்டுகள் டெல்லியை நோக்கி முன்னேறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியான செய்தி தேசிய அரசியலை மிகவும் உலுக்கியுள்ளது பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், ராணுவம் ஆகியோர் செய்தி ஆதாரமற்றது, பொய்யானது என விளக்கமளித்தாலும் மர்மம் இதுவரை விலகவில்லை.

பாதுகாப்பு செயலாளரையும், ராணுவ துணைத் தலைவரையும் பாராளுமன்ற நிலைக்குழு விசாரித்தது. பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி பதவி விலகவேண்டும் என்று பா.ஜ.க கோரிக்கை விடுத்துள்ளது.

பிறந்த நாள் தேதி குறித்த சர்ச்சையில் தரைப்படை தலைமை தளபதி வி.கே.சிங் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தை அணுகியதற்கு அடுத்த நாள் ஜனவரி மாதம் 16-ஆம் தேதிக்கும், 17-ஆம் தேதிக்கும் இடையில் ராணுவத்தின் 2 யூனிட்டுகள் டெல்லியை நோக்கி முன்னேறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டது.

ஹரியானாவின் ஹிசார் பகுதியில் இருந்த mechanised infantry படையும், ஆக்ராவிலிருந்து Para Brigade படையும் டெல்லிக்கு அருகே கொண்டு வரப்பட்டன.
<--!more-->
அதே போல ஆக்ராவை தலைமையிடமாகக் கொண்ட 50 Para Brigade என்ற படைப் பிரிவும் பல்வேறு ராணுவ விமானங்களில் டெல்லிக்கு வந்திறங்கியது. அந்தப் படைகளை டெல்லிக்குக் கொண்டு வருவது குறித்து மத்திய அரசிடமோ, பாதுகாப்பு அமைச்சகத்திடமோ ராணுவம் தெரிவிக்கவில்லை. இந்தத் தகவல்களை மத்திய உளவுப் பிரிவான ஐபி தான் இரவோடு இரவாக மத்திய அரசின் பார்வைக்குக் கொண்டு சென்றுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் ஆண்டனிக்கும் பிரதமருக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட உடனடியாக ராணுவ பிரிவுகளின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

ராணுவப் புரட்சி குறித்த செய்தியை பிரதமர் மன்மோகன்சிங் திட்டவட்டமாக மறுத்துள்ளார். குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருதுகளை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவரிடம் ராணுவத்தின் புரட்சிக்கான முயற்சி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு அவர் பதிலளிக்கையில், “இந்த செய்தி பீதியைக் கிளப்புவதற்கென்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த செய்தியை அப்படியே உண்மையென்று கருதத் தேவையில்லை. தளபதி பதவி என்பது மிகவும் போற்றுதலுக்கு உரியது. அந்தப் பதவிக்கு இழுக்கு ஏற்படும் வகையில் எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.” என்றார்.

ராணுவப் புரட்சி நடத்த முயற்சி என்ற செய்தி ஆதாரமற்றது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி கூறினார்.

விசாகப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த அவரிடம் செய்தியாளர்கள் இது பற்றி கேள்வி எழுப்பியபோது அவர் கூறியது:

இந்த வித அணிவகுப்பு வாடிக்கையானதுதான். அன்று அசாதாரணமாக எதுவுமே நடக்கவில்லை. நமது ராணுவத்தின் தேசப்பற்று குறித்து எங்களுக்குப் பூரண நம்பிக்கை இருக்கிறது. இந்திய ஜனநாயகத்துக்கு ஊறு விளைவிக்கும் எந்த செயலையும் அவர்கள் செய்ய மாட்டார்கள். அவர்கள் உண்மையான தேசப் பற்று உள்ளவர்கள். எல்லைப் பகுதியில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து நம் நாட்டைப் பாதுகாக்கிறார்கள். நமது ராணுவம், கடற்படை, விமானப் படை, கடலோரக் காவல் படை ஆகியவற்றை நினைத்தால் எனக்குப் பெருமையாக இருக்கிறது. அவர்களுடைய நாட்டுப்பற்று குறித்து எந்த சந்தேகமோ கேள்வியோ யாருக்கும் எழத் தேவையில்லை. ராணுவப் புரட்சிக்கு முயற்சி நடந்தது என்பது போன்ற செய்தி தவறானது. அதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் நமது பாதுகாப்புப் படைகளின் கௌரவத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் பத்திரிகைகள் நடந்து கொள்ளக் கூடாது என்றார்.

பாதுகாப்புத் துறை இணையமைச்சர் பல்லம் ராஜு கூறுகையில், இது போன்ற செய்தி வெளியிடுவது பொறுப்பற்ற செயல் என்றும் தேச நலனுக்கு விரோதமானது என்றும் கூறினார்.

இச்செய்தி குறித்து ராணுவம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது:

அடிப்படையற்ற தகவல். ராணுவப் படையினரின் வழக்கமான இடப்பெயர்வு நடவடிக்கை தான் அன்றும் நடந்துள்ளது. அதை பெரிதுபடுத்தி திரித்து செய்தி வெளியாகியுள்ளது. இந்திய ராணுவம் என்பது பெருமைக்கும், கண்ணியத்துக்கும் உரியது. அரசாங்கத்தின் நிர்வாக விஷயங்களில் எக்காலத்திலும் குறுக்கிடவோ, தலையிடவோ ராணுவத்துக்கு துளி கூட விருப்பம் இருந்ததில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இச்செய்தி குறித்து பாரதீய ஜனதா கட்சி கருத்து தெரிவிக்கையில், ‘இந்த செய்தி குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்திட வேண்டும். ராணுவத்துக்கும், அரசுக்கும் இடையில் இடைவெளி அதிகரிக்க காரணமே அந்தோணி தான். அவர் பதவி விலக வேண்டும். அதை அவர் செய்யாவிட்டால், பிரதமர் அவரை பதவி நீக்கம் செய்யவேண்டும்’ என்று கூறியுள்ளது.

நாட்டின் பாதுகாப்பை பாதிக்கும் வகையில் செய்தி வெளியிட்டதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியை சிக்கலில் மாட்டவைத்துள்ள 3-வது சம்பவம் இதுவாகும். முன்னர் பிறந்த தேதி சர்ச்சையில் நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக தரைப்படை தலைமை தளபதி பாதுகாப்பு அமைச்சகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தை அணுகினார். தாத்ரா ட்ரக்குகள் வாங்க 14 கோடி ரூபாய் லஞ்சம் அளிக்க முயன்றது குறித்து வி.கே.சிங் செய்தி வெளியிட்டது 2-வது சம்பவமாகும்.

நன்றி (செய்தி ) :- தூது ஆன்லைன்

பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 1654 ஏக்கர் நிலம் வக்ப் வாரியத்திற்கு சொந்தமானது – ஆந்திர உயர்நீதிமன்றம்

ஹைதராபாத்:ஆந்திர அரசால் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட 1654 ஏக்கர் நிலம் அனைத்தும் வக்ப் வாரியத்திற்குச் சொந்தமானது என்று ஆந்திர உயர்நீதிமன்றம் கடந்த செவ்வாய் அன்று தீர்ப்பு ஒன்றைக் கூறியுள்ளது.

வக்ப் நிலம் தொடர்பாக அந்நிலத்தை வாங்கிய லான்கோ ஹில்ஸ் நிறுவனமும் மற்றும் இதர பன்னாட்டு நிறுவனங்களும் மனிகொண்டா கிராமத்தில் உள்ள 32,000 கோடி மதிப்பிலான வக்ப் நிலங்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரின அந்த மனுவை உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

வி.வி.எஸ்.ராவ் மற்றும் ஆர்.கண்டா ராவ் அடங்கிய டிவிசன் பெஞ்ச் 1654 ஏக்கர் நிலத்தை தர்கா ஹஜரத் ஹுசைன் ஷா வலி என்கிற வக்ப் வாரியத்திற்கு சொந்தமானது என்றும் அது அரசிற்கு சொந்தமான நிலமல்ல என்றும் தெரிவித்துள்ளது. வக்ப் வாரியத்தின் சார்பாக இந்த வழக்கை நடத்திய மசூத் கான் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் நீதிமன்றம் இதனை தெரிவித்தார்.

முன்னால் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசு ஆந்திர உள்கட்டமைப்பு வாரியத்தின் கீழ் துபாய் நிறுவனமான ஈமாருக்கு 400 ஏக்கரும், மென்பொருள் நிறுவனங்களான மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு 54.79 ஏக்கரும், விப்ரோ நிறுவனத்திற்கு 30 ஏக்கரும், போலாரிஸ் நிறுவனத்திற்கு 7.89 ஏக்கரும் அளித்தது. பின்னர் காங்கிரஸ் தலைமையிலான ராஜசேகர ரெட்டியின் அரசு காங்கிரஸ் எம்.பி ஒருவரின் நிறுவனமான லான்கோ ஹில்ஸ் நிறுவனத்திற்கு 108.10 ஏக்கர் நிலத்தை அளித்தது.

16 அக்டோபர் 2011

கேரளா:நகரங்​களை மக்கள் வெள்ளமாக்கி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய அமைதிப் பேரணிகள்

fb4திருவனந்தபுரம்/பெரும்பாவூர்/கோழிக்கோடு: போலீஸ்-ஆட்சியாளர்களின் உரிமை மறுப்புக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்து கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மண்டல அளவிலான பேரணிகள் மூன்று நகரங்களை மக்கள் வெள்ளத்தால் திணறடித்தது.



பேரணிக்கு முன்னோட்டமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கேடர்கள் சீருடை அணிந்து நடத்திய வாலண்டியர் அணிவகுப்பு சுதந்திர தினத்தில் அணிவகுப்பு நடத்த மறுக்கும் ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் படைத்த இறைவனை தவிர வேறு எவருக்கும் அஞ்சமாட்டோம் என்ற துணிச்சலை பதிலாக அளிப்பதாக அமைந்தது.

‘சுதந்திரம் பிறப்புரிமை’ என்ற முழக்கத்துடன் திருவனந்தபுரம், பெரும்பாவூர், கோழிக்கோடு ஆகிய நகரங்களில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

திருவனந்தபுரம் ப்ரஸ் க்ளப்பிற்கு அருகே துவங்கிய பேரணியும், வாலண்டியர் அணிவகுப்பும் கிழக்கே கோட்டை காந்தி பூங்காவில் முடிவடைந்தது.

பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் மெளலவி அஷ்ரஃப், மாநில தலைவர் அப்துல் ஹமீது, நூருல் அமீன், ஹாரிஸ் மற்றும் திருவனந்தபுரம், கொல்லம், பத்தணம் திட்டா மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் தலைமை வகித்தனர்.

கோழிக்கோட்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொருளாளர் வழக்கறிஞர் கெ.பி.முஹம்மது ஷெரீஃப் பொதுக்கூட்டத்தை துவக்கி வைத்தார். வழக்கறிஞர் ரஃபீக் சிறப்புரை நிகழ்த்தினார்.

15 அக்டோபர் 2011

கஷ்மீர் குறித்த பிரஷாந்த் பூஷணின் கருத்து சரியல்ல: அன்னா ஹசாரே

ராலேகான்சித்தி:கஷ்மீர் விவகாரம் தொடர்பாக மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் கூறியிருப்பது தங்களது குழுவின் கருத்து அல்ல என்றும், அவ்வாறு அவர் கூறியது சரியான கருத்தல்ல என்று அன்னா ஹசாரே விளக்கம் அளித்தார்.

அதேவேளையில், தங்கள் கமிட்டியில் இருந்து பிரசாந்த் பூஷணை நீக்க வேண்டும் என்று அன்னா ஹசாரே ஒருபோதும் சொல்லவில்லை என்று என்று அவரது குழு தெரிவித்துள்ளது.

பிரஷாந்த் பூஷணின் கஷ்மீர் கருத்தும், அதையொட்டிய நிகழ்வுகள் குறித்தும் அன்னா ஹசாரே அளித்துள்ள விளக்கத்தில், “காஷ்மீர் குறித்து பூஷணின் கருத்து எங்களது குழுவின் ஒட்டுமொத்த கருத்து அல்ல. அவர் குழுவைக் கேட்டு கருத்து கூறவில்லை. அந்தக் கருத்துகள் எல்லாம் அவருடைய தனிப்பட்ட கருத்துகளாகும். அந்த கருத்துகளுக்கு குழு பொறுப்பாகாது. அவரது கருத்து சரியானதுமல்ல.” என்றார் அன்னா ஹசாரே.

மேலும், “இதுபோன்று நாங்கள் கருத்து தெரிவிக்க மாட்டோம். அது எங்களுடைய கண்ணோட்டம் அல்ல. கஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. தொடர்ந்தும் இந்தியாவி்ல்தான் இருக்கும். எதைச் செய்தாலும் அதை உறுதிப்படுத்தும் வகையில்தான் இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தேவையற்ற இந்த வாதத்தை நிறுத்த வேண்டும்.” என்றார் அன்னா ஹசாரே.

29 செப்டம்பர் 2011

தமிழக உள்ளாட்சித் தேர்தல்:எஸ்.டி.பி.ஐ, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட 14 இஸ்லாமிய கட்சிகள் அடங்கிய கூட்டணி

சென்னை:தமிழக உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாடு இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, கிறிஸ்தவ அமைப்புகள் இணைந்து தனி அணியாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன.

இந்தக் கூட்டணியில்
1. தமிழ் நாடு ஜமாத்துல் உலமா சபை
2. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
3. சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா
4. இந்தியன் நேஷனல் லீக்
5. சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை
6. தேசிய லீக் கட்சி
7. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
8. ஜம்மியதுல் உலமாயே ஹிந்த்
9. ஆல் இந்தியா மில்லி கவுன்சில்
10. மறுமலர்ச்சி முஸ்லிம் லீக்
11. ஷரிஅத் பாதுகாப்பு பேரவை
12. வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா
13. இஸ்லாமிய விழிப்புணர்வு கழகம்
14. இஸ்லாமிய இலக்கிய கழகம் ஆகிய அமைப்புகளும், 6 கிறிஸ்துவ அமைப்புகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை உள்ளன.

மொத்தமுள்ள 9 மாநகராட்சி மேயர் பதவிகளில்,

26 செப்டம்பர் 2011

‘பிற நாட்டின் உள்நாட்டுப் புரட்சியில் அன்னியத் தலையீடு கூடாது’: ஐ.நா.வில் மன்மோகன்சிங் வலியுறுத்த​ல்

ஐ.நா.சபை:சட்டப்படியான ஆட்சி என்பது நாடுகளுக்கு உள்ளே மட்டும் அல்ல, சர்வதேச அரங்கிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். தங்களுடைய எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும், தங்களுக்கு எப்படிப்பட்ட அரசு வேண்டும் என்பதை அந்தந்த நாடுகளின் மக்களே தீர்மானிக்குமாறு விட்டுவிட வேண்டும். வெளியிலிருந்து ராணுவத் தாக்குதல் மூலம் ஒரு நாட்டைக் கைப்பற்றி அங்கே புதிய ஆட்சியை நிறுவும் போக்கு கூடவே கூடாது’ என்று ஐக்கிய நாடுகள் சபையின் 66-வது ஆண்டு பொதுச் சபை கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார்.

ஒரு நாட்டில் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தால் அங்கு சுமுகமான ஆட்சி மாற்றம் ஏற்படவும் ஜனநாயக அமைப்புகள் வலுப்படவும் உதவ வேண்டிய கடமை சர்வதேசச் சமூகத்துக்கு இருக்கிறது. ஆனால் ஒரு நாட்டின் பிரச்னைக்குத் தீர்வு என்ன என்று வெளியிலிருந்து பரிந்துரைப்பதும் அதை அமல்படுத்த ராணுவ ரீதியாகத் தலையிடுவதும் மிகவும் ஆபத்தானது.

ஒரு நாட்டின் ஒற்றுமை, பிரதேச ஒருமைப்பாடு, இறையாண்மை, சுதந்திரத் தன்மையையும் மதிக்கும் வகையிலும் காப்பாற்றும் வகையிலும்தான் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகள் அமைய வேண்டும்.

வளர்ச்சிக்கு உற்ற சூழலை மக்கள் உருவாக்க உதவ வேண்டிய கடமை ஒவ்வொரு அரசுக்கும் இருக்கிறது. இதுதான் ஜனநாயகத்தின் அடிநாதமாகவும் அடிப்படை மனித சுதந்திரத்தின் சாரமாகவும் இருக்கிறது. உலக நாடுகளின் பிரச்னைகளைத் தீர்க்க நம்மிடையே ஒத்துழைப்பு அவசியம்; முரண்பட்டு மோதலில் இறங்கினால் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியாது.

24 செப்டம்பர் 2011

அப்சல் குருவின் தூக்கு தண்டனைக்கு தடை கோரும் சட்டசபை தீர்மானத்திற்கு பி.டி.பி ஆதரவு அளிக்கும் – மெஹ்பூபா முப்தி

ஸ்ரீநகர்:பாருளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கபட்ட அப்சல் குருவிற்கு மன்னிப்பு அளிக்க வேண்டும் என்று கோரும் கஷ்மீர் மாநில சட்டசபை தீர்மானத்திற்கு பி.டி.பி ஆதரவு அளிக்குமென்று அதன் தலைவர் மெஹ்பூபா முப்தி அறிவித்துள்ளார்.

அக்கட்சியின் சட்டசபை கட்சி கூட்டத்திற்கு பின்பு இதை அவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

அப்சல் குருவிற்கு மன்னிப்பு அளிக்க வேண்டும் என்று குடியரசு தலைவரிடம் கோரும் தீர்மானத்தால் வானம் ஒன்றும் இடிந்து விழாது என்றும் அவர் கூறினார்.

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு பின்பு அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதே வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கபட்ட மூன்று குற்றவாளிகளின் தண்டனையையும் ரத்து செய்ய தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருப்பதையும் அவர் சுட்டி காட்டினார்.

இந்த மாதம் செப்டம்பர் 28-ல் கஷ்மீர் சட்டசபையில் இத்தீர்மானம் விவாதத்திற்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

20 செப்டம்பர் 2011

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட SDPI முழு ஆதரவு

திருநெல்வேலி :கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனே மூட கோரி சுமார் 127 பேர் கூடங்குளம் அருகில் இடிந்த கரையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஊர் பொது மக்கள் 5000 பேர் ஆதரவு தெரிவித்து அவர்களுடன் இருந்து வருகின்றனர் அவர்களை ஆதரித்து SDPI மாநில தலைவர் தெஹ்லான் பாக்கவி தலைமையில் நிர்வாக குழு சென்றது. இந்த குழுவை அங்குள்ள மக்கள் மிகுந்த உற்சாகத்தோடு வரவேற்றனர்.

பிறகு அங்கு கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதிப்பு குறித்தும் , அதனால் ஏற்பட கூடிய விளைவுகள் பற்றியும்,மற்ற நாடுகள் எந்த அளவிற்கு அதை எதிர்கின்றனர் என்பதை பற்றியும் தெளிவாக விளக்கவுரை ஆற்றினர். இந்த நிகழ்ச்சியின் போது SDPI மாவட்ட தலைவர் சாகுல் ஹமீத் உஸ்மானி. மாவட்ட பொது செயலாளர் ஹயாத் முஹம்மத், நான்குநேரி தொகுதி தலைவர் தாஜுதீன்,தொகுதி செயலாளர் ஜாகிர் ஹுசைன் ,நகர தலைவர் அய்யூப் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நன்றி (செய்தி ) :- தூது ஆன்லைன்

19 செப்டம்பர் 2011

மோடிக்கு எதிரான வாஜ்பாயின் கடிதத்தால் பரபரப்பு!

புதுடெல்லி: கடந்த 2002-ம் ஆண்டில் குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது நடைபெற்ற மதக்கலவரத்தில் இந்துத்வாவினரால் 3000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள் அப்போது மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்றது.

குஜராத் கலவரத்தையும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற துயரமான சம்பவங்களையும் நினைத்து மனம் வருந்திய பிரதமர் வாஜ்பாய், குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதினார். 9 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அந்த கடிதம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி கோரப்பட்டு, சமூக ஆர்வலர் ஒருவரால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் குஜராத்தில் நடைபெற்ற கலவரமும், அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களும் என்னை கடுமையான வேதனைக்கு ஆளாக்கியுள்ளது. கலவரத்தை தடுக்கவும், கலவரம் பாதித்த பகுதிகளை முறையாக பராமரிக்கவும், அங்குள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் மாநில அரசு ஆர்வம் காட்டவில்லையோ என்ற சந்தேகம் ஏற்படுவதாக வாஜ்பாய் குற்றம் சாட்டியுள்ளார்.

அமைதி சமூக நல்லிணக்கம் போன்றவற்றுக்காக நரேந்திர மோடி உண்ணாவிரதம் இருக்கும் நிலையில் வெளியான இந்த கடிதம் மோடி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோடியின் உண்ணாவிரத நாடகத்தால் 100 கோடி விரயம்!

"மோடி நடத்தும் உண்ணாவிரத நாடகத்தால் 100 கோடி ரூபாய் விரயமாக்கப்பட்டுள்ளது" என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வலியுறுத்தி குஜராத் முதல்வர் மோடி இன்று இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இந்நிலையில், அவர் நடத்தும் உண்ணாவிரதம் ஒரு நாடகம் என்றும் அதனால் 100 கோடி ரூபாய் விரயமாக்கப்பட்டுள்ளது என்றும் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக குஜராத் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் மோகன் பிரகாஷ் கூறும்போது, "மோடியின் தற்போதைய நாடகத்தால் குஜராத்தியர்களின் 100 கோடி ரூபாய் விரயமாக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் அமைதி, நல்லிணக்கத்தையும் பாதிக்கச் செய்துள்ளது" என்று தெரிவித்தார்.

நரேந்திர மோடியின் உண்ணாவிரதம் குறித்து பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அமைப்பாளரும் ஐக்கிய ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத்யாதவ் கூறும்போது, "70 முதல் 80 சதவீத மக்கள் தினமும் ரூ.20 மட்டுமே கொண்டு வாழ்கிறார்கள். 80 சதவீத மக்கள் தினமும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் தினமும் அரை நாளோ அல்லது முழு நாளோ உண்ண முடியாமல் உள்ளனர். இவர்களைப் பற்றி யாரும் பேசுவதில்லை. ஆனால் தனிநபரின் உண்ணாவிரதங்கள் விவாதிக்கப்படுகின்றன" என்று தெரிவித்திருந்தார்.

மோடிக்கு எதிராக போராட்டம் - மல்லிகா சாராபாய் கைது

நரேந்திரமோடியின் உண்ணாவிரதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, குஜராத் கலவரத்தின்போது அதிகம் பாதிப்புக்கு உள்ளான நரோடா பகுதியில் ஞாயிற்றுக் கிழமையன்று சில அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்த முயன்றனர். இந்த போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், தடையை மீறி அங்கு செல்ல முயன்ற சமூக ஆர்வலர் மல்லிகா சாராபாய் உள்ளிட்ட 25 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

"2002ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்துக்கு தார்மீக பொறுப்பு ஏற்றுக்கொள்கிறீர்களா?" என்று உண்ணாவிரதம் இருந்த நரேந்திர மோடியிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு கோபத்துடன் பதில் அளித்த நரேந்திரமோடி, "ஏற்கனவே இது குறித்து நான் விளக்கமாக கூறிவிட்டேன். அது உண்மை என்பதால் நீங்கள் வசதியாக மறந்துவிட்டீர்கள். நீங்கள் (ஊடகங்கள்) பொய்யை மட்டும் விரும்பினால், அதை எவ்வளவு நீளத்துக்கு சொல்ல முடியுமோ, அப்படி சொல்லிக்கொள்ளுங்கள்'' என்றார்.

அப்சல் குருவுக்கு தூக்கை ரத்து செய்யக் கோரி இன்று காஷ்மீர் சட்டசபையில் தீர்மானம்

ஸ்ரீநகர்:தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அப்சல் குருவுக்கு தண்டனையை ரத்து செய்து கருணை காட்ட வேண்டும் என்று கோரி இன்று ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையில் சுயேச்சை உறுப்பினராக உள்ள ரஷீத் ஷேக் என்பவர் அப்சல் குருவின் தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று நோட்டீஸ் கொடுத்தார்.

இதையடுத்து இது இன்று விவாதத்திற்கு வருகிறது. விவாதத்திற்குப் பின்னர் குருவின் தண்டனையைக் குறைக்கக் கோரி தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

அப்சல் குருவுக்கு ஆதரவாகி இன்று தீர்மானம் நிறைவேற்ற காஷ்மீர் சட்டசபை தயாராகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மத நல்லிணக்கம் குறித்த மோடியின் கருத்து உடன்பாடானது தான், ஆனால் கடந்தகால செயல்பாடுகளை மறக்க முடியாது

சென்னை: மத நல்லிணக்கத்தைப் பற்றிய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் கருத்து எனக்கு உடன்பாடானது தான். அதே நேரத்தில் மோடியின் கடந்தகால செயல்பாடுகளை மறந்துவிடவும் முடியாது என்று கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று செய்தியாளர்கள், திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கேட்ட கேள்விகளும், கருணாநிதி அளித்த பதில்களும்:

கேள்வி: திருச்சி இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா?

பதில்: திருச்சியில் அந்த தொகுதியில் வெற்றிபெற்று, அமைச்சராக பதவியேற்க வருகின்ற நேரத்தில் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த அந்த நண்பர் விபத்துக்கு ஆளான காரணத்தால் நடைபெறுகின்ற இடைத்தேர்தல் அது. அந்த அனுதாபத்தின் காரணமாக இந்த இடைத்தேர்தலில் திமுக போட்டியிட வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றி யோசித்து முடிவு செய்யப்படும்.

கேள்வி: இதுபோன்ற இடைத்தேர்தல்களில், அந்த தொகுதிகளில் ஏற்கனவே நின்று வெற்றி பெற்ற கட்சிக்கே அந்த தொகுதிகளை விட்டுக்கொடுக்க வேண்டுமென்று ஏற்கனவே ஒரு முறை நீங்கள் சொல்லியிருக்கிறீர்களே?

17 செப்டம்பர் 2011

உள்ளாட்சித் தேர்தல்: கூட்டணிக் கட்சிகளைக் கேட்காமல் திமுக தனித்து முடிவு: காதர் முகைதீன்

குற்றாலம்: கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசிக்காமலேயே உள்ளாட்சித் தேர்தலி்ல் திமுக தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில தலைவர் காதர் முகைதீன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் குற்றாலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது,

கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த முஸ்லிம் லீக் பொதுக்குழு கூட்டத்தில் திமுக கூட்டணியில் நீடிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றினோம். இந்த நிலையில் கூட்டணி கட்சிகளை ஆலோசிக்காமல் திமுக தனித்து போட்டியிடும் என்று அறிவித்துள்ளனர். இதையடுத்து கட்சியின் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்ட அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் உள்ளாட்சி தேர்தலில் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. அந்தந்த நகர, மாநகர, மாவட்ட நிர்வாகிகளுக்கு அந்தந்த பகுதியில் யாருடன் கூட்டணி அமைத்துக் கொள்வது என்பது குறித்து முடிவு எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பிற கட்சிகளுடன் பேசி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோம். இன்னும் ஒரு சில தினங்களில் மாநில நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் மீண்டும் நடைபெற உள்ளது என்றார்.

13 செப்டம்பர் 2011

பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்க வேண்டும்: SDPI கோரிக்கை

சென்னை இராமநாதபுரத்தில் தியாகி இமானுவேல் சேகரனின் குரு பூஜையை முன்னிட்டு நடந்த கலவரமும் அதனால் ஏற்பட்ட உயிர் இழப்புகளும் வேதனைக்குரியது, கண்டிக்கத்தக்கது என SDPI மாநில தலைவர் KKSM தெஹ்லான் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்; “தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியனுக்கு குரு பூஜையில் கலந்து கொள்ள தடைவிதித்ததாலேயே போராட்டங்கள் நடந்து அதனால் கலவரமும் ஏற்பட்டள்ளது.

ஜான் பாண்டியனை உரிய பாதுகாப்புடன் குரு பூஜையில் பங்கேற்க அனுமதித்திருந்தால் போராட்டங்களையும், அதனால் ஏற்பட்ட கலவரங்களையும் தடுத்திருக்கலாம்.

கலவரங்களை கட்டுப்படுத்த நடந்த முயற்சியில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்திருப்பது கண்டிக்கத்தக்கது.

துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்படும் போது காவல் துறையினர் அதற்கான உரிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி உரிய முறையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் நிவாரணத் தொகை என ஜெயலலிதா அறிவித்துள்ளதை தலா 10 லட்சமாக உயர்த்தவேண்டும் என SDPI சார்பாக கேட்டுக் கொள்கிறேன்” எனவும் அவ்வறிக்கையில் அவர் தெரிவித்தார்.




நன்றி (செய்தி ) :- தூது ஆன்லைன் ,.

கறுப்புப் பண மீட்பில் இந்திய அரசு ஆர்வம் காட்டவில்லை!- ருடால்ப் எல்மர்

டெல்லி: சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள பல லட்சம் கோடி கறுப்புப் பணத்தை மீட்பதில் இந்திய அரசு போதிய ஆர்வம் காட்டவில்லை என்கிறார், இதுகுறித்த விவரங்களை அதிக அளவில் வெளியிட்டு வரும் ருடால்ப் எல்மர்.

சுவிஸ் வங்கியின் முன்னாள் பணியாளரான இந்த எல்மர்தான், அந்த வங்கியில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் பற்றிய முழு விவரங்களை விக்கிலீக்ஸுக்கு தந்தவர். இதற்காக இருமுறை கைதானவரும்கூட. வரி ஏய்ப்பை சர்வ தேச அளவில் ஒழிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகிறார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், "சுவிஸ் வங்கி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வங்கிகளில் இந்தியர்களின் கறுப்புப் பணம் ஏராளமாக உள்ளது.

இந்தியாவின் முன்னணி நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் பெரும் வரி ஏய்ப்பு செய்து, கேமேன் ஐலேண்ட் போன்ற தீவுகளில் பணத்தைக் குவித்து வைத்துள்ளனர்.

இந்தியா பெரிய நாடு. எந்த உலக நாட்டிடமும் பேசி தகவலை வாங்கும் திறன் மிக்க நாடு. ஆனாலும் ஏனோ அந்நாட்டு அரசு எந்த ஆர்வமும் இதில் காட்டவில்லை.

உண்மையில் வரி ஏய்ப்பை கடுமையாக ஒழிக்க போராடும் நாடு அமெரிக்காதான். சமீபத்தில் தங்கள் வங்கியில் கறுப்புப் பண கணக்கு வைத்துள்ள அமெரிக்கர்களின் பட்டியலை சுவிஸ் வங்கி அமெரிக்க அரசுக்கு கொடுத்துவிட்டது.

11 செப்டம்பர் 2011

''கட்சி மாறுவது இல்லை... திராவிட இயக்கத்தில் இருக்கிறேன்!'' அப்துல்லாஹ் .....

பேச்சு கேசட்டுகளில் பெரியார் தாசன் கேசட் பல ஆண்டுகளுக்கு முன்பே பிரசித்தம். இரண்டு மணிநேரம் பேசிவிட்டு அரைமணி நேரம் இன்டர்வெல் விட்டுவிட்டு மீண்டும் இரண்டு மணிநேரம் பேசுவார். அப்படிப்பட்ட பேராசிரியர் பெரியார்தாசன், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலையில் 'தாயகம்’ வளாகத்துக்கு வந்து தன்னை ம.தி.மு.க-வில் இணைத்துக் கொண்டுவிட்டார்!
பரவசத்தில் இருந்த வைகோ, ''எனக்கு அதிக மகிழ்ச்சியாக இருந்தால் சரியாகப் பேச வராது. மூன்று நாட்களாக நான் அதிகமாகவே மகிழ்ச்சியாக இருக்கிறேன். திராவிட இயக்கத்தின் கருத்துக் களஞ்சியமாக இருக்கும் பேராசிரியர் வந்திருப்பது, நமக்கு 1,000 யானை பலம் கிடைத்ததைப்போல. இங்கே அவர் பேசியது ட்ரெய்லர்தான். மீதியை நெல்லை மாநாட்டில் கேட்கலாம்...'' என்று சுருக்கமாக முடித்ததும் கைதட்டல்களால் அதிர்ந்தது தாயகம்.
முன்னதாக தனது ஏற்புரையில், நையாண்டிகளுக்கு இடையில் பெரியார்தாசன் பேசப் பேச, சிரிப்பும் கைதட்டல்களுமாக அரங்கம் அமர்க்களப்பட்டது. அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...
''திடீரென ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்தது ஏன்?''
''கட்சி அரசியலில் இதுவரை நான் பார்வையாளனாகத்தான் இருந்தேன். நீண்டகாலமாக தி.மு.க-வின் அனுதாபி. பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் விவகாரத்தில்... தூக்குப் போடப் போறான், பயிற்சி நடக்குது, இப்படித்தான் தூக்கு போடப் போறான்னு ஒரு பக்கம் செய்திகள்... '9-ம் தேதி தூக்கு, அதுக்கு யார் யாரை நியமிச்சு இருக்காங்க?’னு செய்திகள் வந்தபோது, பதைபதைப்பு. அந்த இறுக்கத்தைத் தளர்த்தினது, சட்டரீதியான முயற்சிகள்தான். வாழ்நாள் முழுதும் போராளியா இருந்த பாபா சாகேப் அம்பேத்கர், 'சட்டரீதியாக முறையாக செயல்பட்டால்தான் உரிமைகளை வென்றெடுக்க முடியும்’னு சொல்வார். சரியான அரசியல் நகர்வு இதுதான்னு நினைக்கிறேன். நீண்டகால நாடாளுமன்றவாதியான வைகோ இதைச் சாதிச்சுக் காட்டியிருக்கார். இதுதான் என்னை ம.தி.மு.க-வில் கொண்டுவந்து சேர்த்தது!

15 ஆகஸ்ட் 2011

தமிழகம்:சுதந்திர தினத்தை கொண்டாட அனுமதி மறுப்பு – பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்

நெல்லை:நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் இந்திய சுதந்திர தினமான இன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நடைபெறவிருந்த சுதந்திர தின அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ள தமிழக காவல்துறைக்கு அவ்வியக்கத்தின் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நெல்லை ப்ரஸ் க்ளப்பில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: “வருகின்ற 65-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சுதந்திர தின அணிவகுப்பை நெல்லையில் நடத்த திட்டமிட்டிருந்தது. சுதந்திர போராட்ட தியாகிகளின் தியாகங்களை நினைவு கூர்ந்திடவும், பெற்ற சுதந்திரத்தை பேணி பாதுகாத்திடவும் சுதந்திர அணிவகுப்பு மற்றும் சுதந்திர தின கொண்டாட்டங்களை பல ஆண்டுகளாக தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தி வருகின்றது. ஆனால் இவ்வருடம் வேண்டுமென்றே காலதாமதம் செய்து, நீதிமன்றத்தை அணுகக்கூட வாய்ப்பு கொடுக்காமல் அனுமதி மறுத்துள்ளது காவல்துறை.

அனைத்து இயக்கங்கள் மற்றும் கட்சிகள் சுதந்திர தினத்தை பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக கொண்டாடி வருகின்றார்கள். இந்திய சுதந்திர போராட்டத்தை துவக்கி வைத்தும், தங்களின் சதவீதத்திற்கு அதிகமான அளவில் சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்றும் இந்திய சுதந்திர வரலாற்றில் நீங்கா இடம் பிடித்துள்ளனர் முஸ்லிம்கள். ஆனால்,

21 ஏப்ரல் 2011

உண்மையான மக்கள் போராட்டமே ஊழலை ஒழிக்கும்!!

ஆதர்ஸ் ஊழல், அலைக்கற்றை ஊழல், இராணுவ நிலபேர ஊழல், எஸ் பேண்ட் ஊழல், காமன்வெல்த் ஊழல் என்று அடுக்கடுக்காக தினம் ஒரு ஊழலாக வெளிவந்து மக்களிடம் அம்பலப்பட்டு நிற்கிறது.

தீர்க்கமான விழிப்புணர்வு இல்லாவிடினும் மக்கள் ஊழலுக்கெதிரான மனோநிலையில் இருக்கிறார்கள்.

இதை இப்படியே விட்டால், மக்கள் கிளர்ந்தெழுந்து ஊழலுக்கெதிரான போராட்டங்களை கட்டியமைத்து விட்டால்அது தமக்கும் தம் எஜமானர்களுக்கும் பேராபத்தை விளைவிக்கும் என்பதை உணர்ந்தே இருக்கிறார்கள்.

அதை தணித்தேயாகவேண்டிய தேவையுடன் இருக்கிறார்கள். அதனால்தான் உண்ணாவிரதம், மெழுகுதிரி ஏந்துதல் போன்ற உப்புமா போராட்டங்களை ஆதரித்து ஊடகங்கள் வழியே ஊழல்களுக்கு எதிராக மாபெரும் மக்கள் இயக்கம் நடைபெறுவதைப் போல சித்தரிக்கிறார்கள்.

20 ஏப்ரல் 2011

ஜெய்தாப்பூர்:முழு அடைப்பில் வன்முறை; பேருந்துகள் எரிப்பு

மும்பை:ஜெய்தாப்பூர் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டை கண்டித்து ரத்னகிரி மாவட்டத்தில் சிவசேனா அழைப்பு விடுத்திருந்த முழு அடைப்பு வன்முறையாக மாறியது.

முழு அடைப்புக்கு ஆதரவாளர்கள் மருத்துவமனைமீது தாக்குதல் நடத்தினர். ஏராளமான பேருந்துகள் தீக்கிரையாயின. திங்கள் கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணித்திருந்தார். போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டைக் குறித்து நீதிவிசாரணை நடத்தவேண்டுமென மஹாராஷ்ட்ரா சட்டசபையில் எதிர்கட்சி தலைவர் ஏக்நாத் கத்ஸே வலியுறுத்தினார். துப்பாக்கிச்சூட்டிற்கு அரசு பெரிய விலை கொடுக்கவேண்டிவரும் என சிவசேனா செயல் தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டோர் போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியது.

ஆறு அணு உலைகள் அடங்கும் ஜெய்தாப்பூர் அணுமின் நிலையம் உலகின் மிகப்பெரிய அணுசக்தித் திட்டங்களில் ஒன்றாகும். முழு அடைப்பு வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து ரத்னகிரி மாவட்டத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு குறித்து மாஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு மஹாராஷ்ட்ரா அரசு உத்தரவிட்டுள்ளது.