தூது ஆன்லைன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தூது ஆன்லைன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

05 ஏப்ரல் 2012

இமாம்களுக்கு மானியம் – மம்தா அறிவிப்பு

கொல்கத்தா:எதிர்வரும் பஞ்சாயத் தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் மமதாவின் அரசு முஸ்லிம் வாக்கு வங்கியை கவர பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இமாம்களுக்கு மாதம்தோறும் ரூபாய் 2500 மாநில வக்ப் போர்டின் மூலம் மானியமாக வழங்க முடிவு செய்துள்ளது.

இது குறித்து மமதா முஸ்லிம் தலைவர்களிடம் தெரிவிக்கையில்; இதற்கென்று அரசு அதிகாரிகள் மற்றும் இமாம்களைக் கொண்டு தனிக்குழு உருவாக்கப்படும் என்றும் அவர்கள் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த உரிய வழிகாட்டுதல்களை அளிப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது; நிலம் மற்றும் வீடு இல்லாத இமாம்களுக்கு “நிஜோ பூமி ,நிஜோ க்ரிஹா” என்ற திட்டத்தின் கீழ் நிலம் மற்றும் வீடுகள் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் மேற்கு வங்காளத்தில் 30,000 திற்கும் மேற்பட்ட இமாம்கள் உள்ளனர் என்றும் அவர்களில் பெரும்பாலானோர் வீடுகள் இல்லாமல் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் விரும்பினால் “நிஜோ பூமி ,நிஜோ க்ரிஹா” என்ற திட்டத்தின் மூலம் 3 கோட்டாக்கள் நிலம் வழங்கப்படும் என்றும் மேலும் வீடு கட்டிக்கொள்ள அரசு உதவி செய்யும் என்றும் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்; தனது அரசு முஸ்லிம் சமூகத்திற்கு இடஒதுக்கீடு வழங்கும் என்பதையும் கூறினார். முன்னர் இருந்த வலதுசாரி அரசு மற்ற சிறுபான்மை சமூகத்திற்கு அளித்துள்ள இடஒதுக்கீடு குறித்து தெரிவிக்கையில் முன்னர் இருந்த அரசு சட்ட விதிமுறைகளை மீறியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தனது அரசு 10,000 மதரசாக்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது என்று தெரிவித்துள்ள அவர் தனது அரசு அந்த மதரசாக்களுக்கு நிதி அளிக்காது என்றும் எனினும் அங்கீகாரம் கிடைப்பதன் மூலம் அவை மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களின் மூலம் பயன் அடைய முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.


நன்றி (செய்தி ) :- தூது ஆன்லைன்

ராணுவம் ஆட்சியை கவிழ்க்க முயன்றதா? – அடிப்படையற்ற தகவல் என்று மத்திய அரசு!

புதுடெல்லி:அரசுக்கு தெரிவிக்காமல் தரைப்படையின் இரண்டு ராணுவ யூனிட்டுகளை டெல்லியை நோக்கி அனுப்பியதாக கூறப்படும் செய்தி தவறானது, அடிப்படையற்றது என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. இதுத்தொடர்பாக த இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தி தவறானது, திரிக்கப்பட்டது என்று பாதுகாப்புத்துறைச் செயலாளர் சசிகாந்த் ஷர்மா கூறியுள்ளார். ராணுவ‌ம் வ‌ழ‌க்க‌மாக‌ ந‌ட‌த்தும் ப‌யிற்சி என்று த‌ரைப்ப‌டையும் ம‌றுப்பு தெரிவித்துள்ள‌து.

ஹரியானாவின் ஹிசார் பகுதியில் இருந்த மெக்கனைஸ்டு இன்பான்ட்ரி படையும், ஆக்ராவிலிருந்து பாரா பிரிகேட் படையும் டெல்லிக்கு அருகே கொண்டு வரப்பட்டன.

இதில் mechanised infantry படை என்பது டேங்குகள், கவச வாகனங்களை உள்ளடக்கியது. லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே. சிங் தலைமையிலான இந்தப் படை ராணுவத்தின் மிக முக்கியமான 1 Corps தாக்குதல் படைப் பிரிவாகும். மதுராவை தலைமையகமாகக் கொண்ட இந்தப் படையின் ஹிசார் பிரிவு படை டெல்லிக்கு 150 கி.மீ. தொலைவில் நிலை நிறுத்தப்பட்டது ஏன் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. டேங்குகளை கொண்டு செல்லும் 48 வாகனங்கள், ரஷ்ய தயாரிப்பான கவச வாகனங்கள் ஆகியவையும் டெல்லிக்கு அருகே நிலை நிறுத்தப்பட்டன.

அதே போல ஆக்ராவை தலைமையிடமாகக் கொண்ட 50 Para Brigade என்ற பாராடுசூட் படைப் பிரிவும் பல்வேறு ராணுவ விமானங்களில் டெல்லியில் வந்திறங்கியது.

16 பிப்ரவரி 2012

ஈரான் அணுவிஞ்ஞானிகளை கொலைச்செய்த பாணியில் நடந்த டெல்லி குண்டுவெடிப்பு

மும்பை:டெல்லியில் இஸ்ரேல் தூதரகத்தின் கார் தீப்பற்றி வெடித்த சம்பவம் ஈரானில் அணு விஞ்ஞானிகள் கொலைச் செய்யப்பட்ட பாணியில் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஜனவரி முதல் தேதி டெஹ்ரானில் ஈரானின் அணு விஞ்ஞானி முஸ்தஃபா அஹ்மதி ரோஷன் டெல்லியில் நடந்த தாக்குதலுக்கு சமமான ஆபரேசன் மூலமாக கொலைச் செய்யப்பட்டார்.

அணுவிஞ்ஞானி பயணித்த காரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்த இரண்டுபேர் காந்த குண்டை(அல்லது ஒட்டுக்குண்டு) காருக்கு பின்புறம் இணைத்துவிட்டு தப்பிவிட்டனர். பின்னர் குண்டுவெடித்து விஞ்ஞானி கொல்லப்பட்டார். இதே பாணியில்தான் டெல்லியிலும் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. மிக தீவிரமான பயிற்சியை பெற்றவர்கள்தாம் இக்குண்டுவெடிப்பின் பின்னணியில் செயல்பட்டுள்ளதாக புலனாய்வு ஏஜன்சிகள் கூறுகின்றன.

ஈரானில் விஞ்ஞானிகளின் கொலைக்கு பின்னணியில் செயல்பட்டுள்ளது அந்நாட்டின் தீவிரவாத அமைப்பான பீப்பிள்ஸ் முஜாஹிதீன் ஆஃப் ஈரான் என்று ஈரானும், அமெரிக்க ஏஜன்சி வட்டாரங்களும் கூறுகின்றன. இந்த அமைப்பிற்கு பயிற்சி மற்றும் உதவி அளிப்பது இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸாத் என்று குற்றம் சாட்டப்படுகிறது.

டெல்லி குண்டுவெடிப்பிலும், ஜார்ஜியா திப்லிஸில் இஸ்ரேல் தூதரகத்தின் காரில் குண்டுவைத்த சம்பவத்திலும் மொஸாதின் கரங்கள் இருப்பதாக ஈரான் குற்றம் சாட்டுகிறது.

16 அக்டோபர் 2011

கேரளா:நகரங்​களை மக்கள் வெள்ளமாக்கி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய அமைதிப் பேரணிகள்

fb4திருவனந்தபுரம்/பெரும்பாவூர்/கோழிக்கோடு: போலீஸ்-ஆட்சியாளர்களின் உரிமை மறுப்புக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்து கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மண்டல அளவிலான பேரணிகள் மூன்று நகரங்களை மக்கள் வெள்ளத்தால் திணறடித்தது.



பேரணிக்கு முன்னோட்டமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கேடர்கள் சீருடை அணிந்து நடத்திய வாலண்டியர் அணிவகுப்பு சுதந்திர தினத்தில் அணிவகுப்பு நடத்த மறுக்கும் ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் படைத்த இறைவனை தவிர வேறு எவருக்கும் அஞ்சமாட்டோம் என்ற துணிச்சலை பதிலாக அளிப்பதாக அமைந்தது.

‘சுதந்திரம் பிறப்புரிமை’ என்ற முழக்கத்துடன் திருவனந்தபுரம், பெரும்பாவூர், கோழிக்கோடு ஆகிய நகரங்களில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

திருவனந்தபுரம் ப்ரஸ் க்ளப்பிற்கு அருகே துவங்கிய பேரணியும், வாலண்டியர் அணிவகுப்பும் கிழக்கே கோட்டை காந்தி பூங்காவில் முடிவடைந்தது.

பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் மெளலவி அஷ்ரஃப், மாநில தலைவர் அப்துல் ஹமீது, நூருல் அமீன், ஹாரிஸ் மற்றும் திருவனந்தபுரம், கொல்லம், பத்தணம் திட்டா மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் தலைமை வகித்தனர்.

கோழிக்கோட்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொருளாளர் வழக்கறிஞர் கெ.பி.முஹம்மது ஷெரீஃப் பொதுக்கூட்டத்தை துவக்கி வைத்தார். வழக்கறிஞர் ரஃபீக் சிறப்புரை நிகழ்த்தினார்.

15 அக்டோபர் 2011

அணுமின் திட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வலுவான வழக்கு!

புதுடெல்லி கூடங்குளம் உள்ளிட்ட புதிய அணு மின் திட்டங்களை ரத்து செய்யக் கோரி, முன்னாள் அதிகாரிகள் உள்பட முக்கிய பிரமுகர்கள் ஒன்றிணைந்து உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளனர்.

கூடங்குளம் அணு மின் நிலையப் பணிகளை நிறுத்தக் கோரி மேற்கொள்ளப்பட்டு வரும் மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுவாகி வருகிறது.

இந்த நிலையில், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி, பிரதமரின் முன்னாள் செயலாளர் கே.ஆர்.வேணுகோபால், மத்திய அமைச்சரவை முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம், கடற்படை முன்னாள் தலைமை தளபதி எல்.ராமதாஸ், அணு விஞ்ஞானி பி.எம்.பார்கவா, பிரபல வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷணின் பொதுநல வழக்குகளுக்கான மையம் உள்பட 14 பேர் தாக்கல் செய்துள்ள மனுவின் விவரம்:

நாட்டில் தற்போது இயங்கிவரும் அணு மின் நிலையங்கள் மற்றும் பணிகள் தொடங்கப்படவுள்ள அணு மின் நிலையங்களை, தன்னிச்சையான அரசு சாராத நிபுணர் குழுவை நியமித்து, அந்தக் குழு மூலமாகவோ அல்லது அந்தக் குழுவின் நேரடி மேற்பார்வையிலோ, அனைத்து அணுமின் நிலையங்கள் உரிய பாதுகாப்பாக உள்ளனவா? என்று முறையாக ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக, அந்தந்தப் பகுதி மக்களிடம் அர்த்தமுள்ள சரியான கருத்து கணிப்புகள் நடத்தி, பின்னர் அவை இயங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.

கஷ்மீர் குறித்த பிரஷாந்த் பூஷணின் கருத்து சரியல்ல: அன்னா ஹசாரே

ராலேகான்சித்தி:கஷ்மீர் விவகாரம் தொடர்பாக மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் கூறியிருப்பது தங்களது குழுவின் கருத்து அல்ல என்றும், அவ்வாறு அவர் கூறியது சரியான கருத்தல்ல என்று அன்னா ஹசாரே விளக்கம் அளித்தார்.

அதேவேளையில், தங்கள் கமிட்டியில் இருந்து பிரசாந்த் பூஷணை நீக்க வேண்டும் என்று அன்னா ஹசாரே ஒருபோதும் சொல்லவில்லை என்று என்று அவரது குழு தெரிவித்துள்ளது.

பிரஷாந்த் பூஷணின் கஷ்மீர் கருத்தும், அதையொட்டிய நிகழ்வுகள் குறித்தும் அன்னா ஹசாரே அளித்துள்ள விளக்கத்தில், “காஷ்மீர் குறித்து பூஷணின் கருத்து எங்களது குழுவின் ஒட்டுமொத்த கருத்து அல்ல. அவர் குழுவைக் கேட்டு கருத்து கூறவில்லை. அந்தக் கருத்துகள் எல்லாம் அவருடைய தனிப்பட்ட கருத்துகளாகும். அந்த கருத்துகளுக்கு குழு பொறுப்பாகாது. அவரது கருத்து சரியானதுமல்ல.” என்றார் அன்னா ஹசாரே.

மேலும், “இதுபோன்று நாங்கள் கருத்து தெரிவிக்க மாட்டோம். அது எங்களுடைய கண்ணோட்டம் அல்ல. கஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. தொடர்ந்தும் இந்தியாவி்ல்தான் இருக்கும். எதைச் செய்தாலும் அதை உறுதிப்படுத்தும் வகையில்தான் இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தேவையற்ற இந்த வாதத்தை நிறுத்த வேண்டும்.” என்றார் அன்னா ஹசாரே.

தீவிரவாதம் என்ற வார்த்தைக்கு புதிய இலக்கணம் வகுக்க மத்திய அரசு முடிவு

புதுடெல்லி:சட்டவிரோத செயல்களின் சட்ட வரம்பில் உள்ள தீவிரவாதம் என்ற வார்த்தைக்கு மத்திய அரசு புதிய இலக்கணம் வகுக்க முடிவு செய்துள்ளது. ஒரு நபர் மட்டும் திட்டம் தீட்டி செய்யும் செயல்களையும் தீவிரவாதம் என்ற வார்த்தையில் உட்படுத்தி புதிய இலக்கணம் வகுக்கப்படுகிறது.

தற்போதைய இலக்கணப்படி ஏதேனும் சட்டவிரோத அமைப்பின் கீழ் செயல்படும் நபர்கள் கூட்டாக திட்டம் தீட்டி நடைமுறைப்படுத்தும் செயல்கள் தீவிரவாதமாக கருதப்பட்டு வருகிறது. புதிய இலக்கணத்தின்படி திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நபருக்கு ஏதேனும் அமைப்புடன் தொடர்பிருக்குமா? இல்லையா? என்பதை ஆராயாது.

2009-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த ஒரு தாக்குதலின் அடிப்படையில்தான் மத்திய அரசு தீவிரவாதம் என்ற வார்த்தைக்கு புதிய இலக்கணம் வகுக்க ஆலோசித்து வருகிறது. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை கண்டித்து உமர் ஃபாரூக் அப்துல் முத்தலிப் என்ற நைஜீரிய நாட்டு இளைஞர் வெடிகுண்டுடன் விமானத்தில் ஏறி அதனை தகர்க்க முயற்சி செய்ததாக கூறி கைது செய்யப்பட்டார். ஆனால் இவருக்கு எந்த அமைப்புடனும் தொடர்பில்லை எனக் கூறப்பட்டது. திட்டத்தை தீட்டியதிலும், திட்டத்தை செயல்படுத்த முயன்றதிலும் அவர் தனிநபராக செயல்பட்டார் என கூறப்படுகிறது. இச்சூழலில்தான் தனிநபர்கள் நடத்தும் தாக்குதல்களையும் தீவிரவாத தாக்குதலின் வரம்பில் கொண்டுவரும் விதமாக தீவிரவாத வார்த்தைக்கு புதிய இலக்கணம் வகுக்க அரசு தீர்மானித்தது.

29 செப்டம்பர் 2011

தமிழக உள்ளாட்சித் தேர்தல்:எஸ்.டி.பி.ஐ, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட 14 இஸ்லாமிய கட்சிகள் அடங்கிய கூட்டணி

சென்னை:தமிழக உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாடு இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, கிறிஸ்தவ அமைப்புகள் இணைந்து தனி அணியாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன.

இந்தக் கூட்டணியில்
1. தமிழ் நாடு ஜமாத்துல் உலமா சபை
2. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
3. சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா
4. இந்தியன் நேஷனல் லீக்
5. சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை
6. தேசிய லீக் கட்சி
7. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
8. ஜம்மியதுல் உலமாயே ஹிந்த்
9. ஆல் இந்தியா மில்லி கவுன்சில்
10. மறுமலர்ச்சி முஸ்லிம் லீக்
11. ஷரிஅத் பாதுகாப்பு பேரவை
12. வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா
13. இஸ்லாமிய விழிப்புணர்வு கழகம்
14. இஸ்லாமிய இலக்கிய கழகம் ஆகிய அமைப்புகளும், 6 கிறிஸ்துவ அமைப்புகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை உள்ளன.

மொத்தமுள்ள 9 மாநகராட்சி மேயர் பதவிகளில்,

26 செப்டம்பர் 2011

‘பிற நாட்டின் உள்நாட்டுப் புரட்சியில் அன்னியத் தலையீடு கூடாது’: ஐ.நா.வில் மன்மோகன்சிங் வலியுறுத்த​ல்

ஐ.நா.சபை:சட்டப்படியான ஆட்சி என்பது நாடுகளுக்கு உள்ளே மட்டும் அல்ல, சர்வதேச அரங்கிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். தங்களுடைய எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும், தங்களுக்கு எப்படிப்பட்ட அரசு வேண்டும் என்பதை அந்தந்த நாடுகளின் மக்களே தீர்மானிக்குமாறு விட்டுவிட வேண்டும். வெளியிலிருந்து ராணுவத் தாக்குதல் மூலம் ஒரு நாட்டைக் கைப்பற்றி அங்கே புதிய ஆட்சியை நிறுவும் போக்கு கூடவே கூடாது’ என்று ஐக்கிய நாடுகள் சபையின் 66-வது ஆண்டு பொதுச் சபை கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார்.

ஒரு நாட்டில் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தால் அங்கு சுமுகமான ஆட்சி மாற்றம் ஏற்படவும் ஜனநாயக அமைப்புகள் வலுப்படவும் உதவ வேண்டிய கடமை சர்வதேசச் சமூகத்துக்கு இருக்கிறது. ஆனால் ஒரு நாட்டின் பிரச்னைக்குத் தீர்வு என்ன என்று வெளியிலிருந்து பரிந்துரைப்பதும் அதை அமல்படுத்த ராணுவ ரீதியாகத் தலையிடுவதும் மிகவும் ஆபத்தானது.

ஒரு நாட்டின் ஒற்றுமை, பிரதேச ஒருமைப்பாடு, இறையாண்மை, சுதந்திரத் தன்மையையும் மதிக்கும் வகையிலும் காப்பாற்றும் வகையிலும்தான் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகள் அமைய வேண்டும்.

வளர்ச்சிக்கு உற்ற சூழலை மக்கள் உருவாக்க உதவ வேண்டிய கடமை ஒவ்வொரு அரசுக்கும் இருக்கிறது. இதுதான் ஜனநாயகத்தின் அடிநாதமாகவும் அடிப்படை மனித சுதந்திரத்தின் சாரமாகவும் இருக்கிறது. உலக நாடுகளின் பிரச்னைகளைத் தீர்க்க நம்மிடையே ஒத்துழைப்பு அவசியம்; முரண்பட்டு மோதலில் இறங்கினால் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியாது.

கோபல்கர் கலவரம் – ராஜஸ்தான் உள்துறை அமைச்சரின் பதவிக்கு ஆபத்து

புதுடெல்லி:ராஜஸ்தான் மாநிலம் பாரத்நகர் மாவட்டத்தில் உள்ள கோபல்கர் பகுதியில் நடந்த மதக் கலவரத்தில் போலீஸாரின் அத்துமீறல் மற்றும் கலவரத்தை தடுப்பதில் மாநிலத்தின் தோல்வி ஆகியவை குறித்து காங்கிரசின் உண்மை கண்டறியும் குழு அளித்துள்ள அறிக்கையின் விளைவாக அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் பெரும் சர்ச்சைக்கு ஆளாகியுள்ளார்.

கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி ஈத்கா பள்ளியின் இடப் பிரச்னை தொடர்பாக குஜ்ஜார்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நடந்த கலவரத்தில் 9 முஸ்லிம்கள் இறந்துள்ளனர் மேலும் 22 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கோபல்கரின் சம்பவத்தை தொடர்ந்து மாநிலத்தில் கடந்த ஒரு ஆண்டிற்குள் மூன்று கலவரங்கள் நடைபெற்றுள்ளதால் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மீது காங்கிரஸ் மேலிடம் அதிர்ப்தியில் உள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் சிறுபான்மை சமூகத்தின் கோபத்தை தணிப்பதற்காக கலவரக் காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாம் எதிர்பார்ப்பதாக முதல்வர் அசோக்கிற்கு செய்தி அனுப்பியுள்ளது.

ராஜஸ்தான் மாநில உள்துறை அமைச்சர் சாந்தி தரிவால் கலவரத்தை தடுப்பதில் தோல்வியை சந்தித்துள்ளதால் பதவி விலகலாம் எனத் தெரிவதாக காங்கிரசின் வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் முஸ்லிம்களின் மியோ மகாசபா, சாந்தி தரிவால் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாகவும்

24 செப்டம்பர் 2011

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமுள்ள மாநிலம் கேரளா

டெல்லி:இந்தியாவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமுள்ள மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் இருக்கிறது. தேசிய அளவில் 2 சதவீதம் பேர் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால் கேரளாவில் 5.86 சதவீதம் பேர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கேரளாவில் 3 அரசு மனநல மருத்துவமனைகளும், 3 அரசு மருத்துவ கல்லூரிகளில் உளவியல் துறைகளும், அவற்றில் 1,800 உளவியல் நோயாளிகளுக்கான படுக்கை வசதிகளும் இருக்கின்றன. இது தவிர 143 தனியார் மனநல மருத்துவமனைகளும் செயல்படுகின்றன. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது மனநல மருத்துவமனைகள் போதிய அளவில் இருந்தும் பிரச்சினைகளும் ஏராளமாகவே இருக்கின்றன.

மாநில மனநல ஆணையத்தின் புள்ளி விவரத்தின் படி கேரள மக்கள் தொகையில் 10 சதவீதம் பேருக்கு உளவியல் பிரச்சினைகள் இருக்கிறது. இதில் 2 சதவீதம் பேருக்கு மனச்சிதைவு மற்றும் மனச்சோர்வு பிரச்சினைகள் உள்ளன. 2-3 சதவீதம் பேருக்கு உடல் பிரச்சினையால் ஏற்படும் கடும் உளவியல் குறைபாடுகள் உள்ளன. 6 வயதுக்குட்பட்டவர்களில் நூற்றில் ஒரு குழந்தை மனநலம் பாதிக்கப்பட்டதாக உள்ளது.

மனநல பாதிப்புகள் அதிகரிப்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. மத்திய அரசிடம் இருந்து பெறப்படும் சுகாதார நிதி முழுமையாக பயன்படுத்தப்படாதது.

ஃபலஸ்தீன் தனி நாடு கோரிக்கை: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடிப்போம் – ஒபாமா

நியூயார்க் ஃபலஸ்தீனுக்கு சுதந்திர நாடு கிடைப்பதற்க்கான எல்லா முயற்சிகளையும் ஐநா சபையில் வீட்டோ அதிகாரம் மூலம் முறியடிப்போம் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா ஃபலஸ்தீன அதிபர் மஹமூத் அப்பாஸிடம் தெரிவித்தார்.

நியூரார்கில் இருவரும் நடத்திய பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை மீண்டும் அவர் அறிவித்தார். (இதன் மூலம் அமெரிக்காவின் சுயரூபமும், குள்ளநரித்தனவும் மீண்டும் வெளிப்பட்டுள்ளது.)

ஆனால் தனி சுதந்திர நாடு என்ற இலட்சியத்தை கைவிடமாட்டோம், அதை அடையும் எல்லா முயற்சிகளோடு முன்னேறிச் செல்வோம் என்று அப்பாஸ் தெரிவித்தார்.

நன்றி (செய்தி ) :- தூது ஆன்லைன் 

தடையை மீறி பர்தா அணிந்த முஸ்லிம் பெண்களுக்கு பிரான்ஸ் நீதிமன்றம் அபராதம்

பாரீஸ்:பிரான்ஸ் நாட்டில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணியும் பர்தா உடைக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடையை மீறி பர்தா அணிந்து வந்த இரண்டு பெண்களுக்கு முதன்முதன்முறையாக பிரான்ஸ் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

இதுவரை தடையை மீறிய பெண்களுக்கு காவல்துறையினர் உடனடியாக அபராதம் விதித்திருந்தாலும் நீதிமன்றம் இவ்வாறான தடைக்கு அபராதம் விதிப்பது இதுவே முதல் முறையாகும்.

நஜாத் நயித் அலி(36), ஹிந்த் அமாஸ்(32) ஆகிய அந்த இரு பெண்களுக்கு முறையே 80 மற்றும் 120 யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் முறையிடப்போவதாக இரு பெண்களும் தெரிவித்துள்ளனர்.

நன்றி (செய்தி ) :- தூது ஆன்லைன்

அப்சல் குருவின் தூக்கு தண்டனைக்கு தடை கோரும் சட்டசபை தீர்மானத்திற்கு பி.டி.பி ஆதரவு அளிக்கும் – மெஹ்பூபா முப்தி

ஸ்ரீநகர்:பாருளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கபட்ட அப்சல் குருவிற்கு மன்னிப்பு அளிக்க வேண்டும் என்று கோரும் கஷ்மீர் மாநில சட்டசபை தீர்மானத்திற்கு பி.டி.பி ஆதரவு அளிக்குமென்று அதன் தலைவர் மெஹ்பூபா முப்தி அறிவித்துள்ளார்.

அக்கட்சியின் சட்டசபை கட்சி கூட்டத்திற்கு பின்பு இதை அவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

அப்சல் குருவிற்கு மன்னிப்பு அளிக்க வேண்டும் என்று குடியரசு தலைவரிடம் கோரும் தீர்மானத்தால் வானம் ஒன்றும் இடிந்து விழாது என்றும் அவர் கூறினார்.

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு பின்பு அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதே வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கபட்ட மூன்று குற்றவாளிகளின் தண்டனையையும் ரத்து செய்ய தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருப்பதையும் அவர் சுட்டி காட்டினார்.

இந்த மாதம் செப்டம்பர் 28-ல் கஷ்மீர் சட்டசபையில் இத்தீர்மானம் விவாதத்திற்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கில் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணம் இஸ்ரேல்- ஐ.நா சபையில் எர்டோகன் பேச்சு

நியூயார்க்:மத்திய கிழக்கில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம் இஸ்ரேல் தான் என்று ஐ.நா சபை கூட்டத்தில் துருக்கி பிரதமர் எர்டோகன் ஆவேசமாக கூறினார்.

இஸ்ரேல்–ஃபலஸ்தீன் பிரச்னையை தீர்ப்பதில் உலக நாடுகளுக்கு அக்கறை இருக்குமானால் இஸ்ரேலின் அடாஅவடிப் போக்கை இனியும் கண்டு கொள்ளாமல் இருக்க கூடாது என்று கூறினார்.

இப்பிரச்னையை தீர்க்க எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல் முறியடிப்பதாகவும் குற்றம் சாட்டினார். ஃபலஸ்தீன் பகுதிகளில் அராஜகம் செய்வது முதல் அணு ஆயுதம் வரை உலகின் விருப்பங்களுக்கு மாற்றமாக இஸ்ரேல் நடப்பதாகவும் குறை கூறினார்.

ஐ.நா சபையின் பல தீர்மானங்களை இஸ்ரேல் மதிக்காமல் மீறியுள்ளதாக குற்றம் சாட்டிய எர்டோகன் தாம் ஒரு பெட்டி தக்காளிகளை பலஸ்தீனத்துக்கு அனுப்ப வேண்டுமென்றால் கூட இஸ்ரேலிடம் ஒப்புதல் வாங்க வேண்டுமென்பது நிச்சயம் மனிதத்தன்மையாக இருக்க முடியாது என்றும் கூறினார்.

20 செப்டம்பர் 2011

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட SDPI முழு ஆதரவு

திருநெல்வேலி :கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனே மூட கோரி சுமார் 127 பேர் கூடங்குளம் அருகில் இடிந்த கரையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஊர் பொது மக்கள் 5000 பேர் ஆதரவு தெரிவித்து அவர்களுடன் இருந்து வருகின்றனர் அவர்களை ஆதரித்து SDPI மாநில தலைவர் தெஹ்லான் பாக்கவி தலைமையில் நிர்வாக குழு சென்றது. இந்த குழுவை அங்குள்ள மக்கள் மிகுந்த உற்சாகத்தோடு வரவேற்றனர்.

பிறகு அங்கு கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதிப்பு குறித்தும் , அதனால் ஏற்பட கூடிய விளைவுகள் பற்றியும்,மற்ற நாடுகள் எந்த அளவிற்கு அதை எதிர்கின்றனர் என்பதை பற்றியும் தெளிவாக விளக்கவுரை ஆற்றினர். இந்த நிகழ்ச்சியின் போது SDPI மாவட்ட தலைவர் சாகுல் ஹமீத் உஸ்மானி. மாவட்ட பொது செயலாளர் ஹயாத் முஹம்மத், நான்குநேரி தொகுதி தலைவர் தாஜுதீன்,தொகுதி செயலாளர் ஜாகிர் ஹுசைன் ,நகர தலைவர் அய்யூப் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நன்றி (செய்தி ) :- தூது ஆன்லைன்

முஸ்லிம்கள் நரேந்திர மோடியை என்றும் மன்னிக்க இயலாது

 லக்னோ:2500-க்கும் மேற்ப்பட்ட மக்கள் உயிர் இழந்தும், ஆயிரக்கணக்கானோர் தங்கள் வாழும் இடத்தை இழந்தும், இன்னும் முஸ்லிம் மக்கள் தங்கள் கிரமாங்களைவிட்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்டும், தங்கள் சொந்த கிராமத்திற்கும், தங்கள் சொந்த வீட்டிற்கும் வர இயலமால் மற்ற இடங்களில் வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட 2002-ல் நடந்த குஜராத் சம்பவத்திற்கு காரணமான மோடியை முஸ்லிம் மக்கள் என்றும் மன்னிக்க இயலாது.

மோடி உண்ணாவிரதம் இருப்பதே அவர் ஏற்படுத்திய மதக் கலவரங்களையும், நூற்றுக்கும் மேற்ப்பட்ட குற்றச்சாட்டுகளை மக்கள் மறக்கவும், அவருக்கு நற்பெயரை உண்டாக்கவும் தான் என்றும் பல முஸ்லிம் மக்கள் தெரிவித்துள்ளனர். இது ஒரு அரசியல் வித்தை.

குஜராத் கலவரத்தில் மூவாயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் படுகொலை செய்யப்பட்டு, உலக அளவில் இந்தியாவின் நற்பெயரை கெடுத்தும், மனித உரிமை கமிஷன் பெரும் அளவில் செயல்பட்டும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என்றும், மேலும் இந்த உண்ணாவிரதம் மதச்சார்பற்றது என்று அனைத்து சிறுபான்மை மக்களுக்கு தெரிவிக்கவும், அவர்களிடம் நம்பிக்கையை உருவாக்கவும், நற்பெயரை பெறவும் மோடியும் அவரது குழுவும் திட்டம் தீட்டி செயல்படுகிறது. ஆனால் இவர் என்ன செய்தாலும் எங்களை சமதானப்படுத்தவும், எங்களை நம்ப வைக்கவும் முடியாது என்று மசூதியில் வேலை பார்க்கும் கல்பி சாதிக் என்பவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க எதிர்ப்பு பிரச்சாரத்தில் உறுதியாக இருப்பது என்.டி.எஃப்: விக்கிலீக்ஸ் தகவல்

 கோழிக்கோடு: பல ரகசியமான தகவல்களை வெளியிட்டு வரும் அமெரிக்கரால் நடத்தப்பட்டு வரும் விக்கிலீக்ஸ் இணையதளம் தற்போது பாப்புலர் ஃப்ரண்டின் நிலைப்பாட்டை பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் கேரளத்தில் செயல்பட்டுவரும் என்.டி.எஃப் (பின்னர் இது பாப்புலர் ஃப்ரண்ட் ஆனது) என்ற அமைப்புதான் இந்தியாவில் அமெரிக்காவிற்கு எதிரான போராட்டங்களில் உறுதியுடன் செயல்பட்டு வருவதாக செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

அரசாங்கம் முதல் அரசியல்வாதிகள் வரை அனைவரும் கண்டு நடுங்கும் ஒரே இணையதளம் “விக்கிலீக்ஸ்” என்று சொல்லலாம். காரணம் அந்த அளவிற்கு பரம ரகசியமாக செயல்பட்ட, ரகசியமாக பாதுகாக்கப்பட்ட பல தகவல்களை ஆதாரத்துடன் வெளியிட்டு பலரது புருவங்களையும் உயர்த்த வைத்திருக்கின்றது.

சமீபத்தில் மிகவும் பரப்பரப்பையும் அதே சமயத்தில் உண்மை நிலையையும் வெளிக்கொண்டு வரும் முகமாக தற்போது இந்தியா முழுவதும் பரவி திடமான அஸ்திவாரத்துடன் செயல்பட்டு வரும் தேசிய இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வை பற்றிய செய்தியினை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து வாஷிங்டனுக்கு ஒரு செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அதில் கடந்த காலங்களில்

அபினவ் பாரத் மற்றும் சனாதன் சஸ்தாவை தடைச் செய்ய மகாராஷ்டிரா போலீஸ் கோரிக்கை

 புதுடெல்லி:தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் இரண்டு ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகளான சனாதன் சஸ்தா மற்றும் அபினவ் பாரத் ஆகிய அமைப்புகளை தடைச் செய்ய வேண்டும் என்று மகாராஷ்டிரா போலீஸ் பரிந்துரை செய்துள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற கோவா குண்டுவெடிப்பில் சனாதன் சாஸ்தாவின் பங்கு நிரூபணம் ஆனது மேலும் கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த மலேகான் குண்டுவெடிப்பில் அபிநவ் பாரத்தின் பங்கு அம்பலம் ஆனது.

லெப்டினென்ட் கர்னல் ஸ்ரீகாந்த ப்ரோகித், அஜய் ரஹீர்கர், ரமேஷ் உபாதை மற்றும் சம்மர் குல்கர்னி ஆகிய அபினவ் பாரத்தின் உறுப்பினர்கள் கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த மலேகான் குண்டுவெடிப்பில் மும்பை தீவிரவாத தடுப்பு பிரிவு மற்றும் சிபிஐ யால் கைது செய்யப்பட்டு குற்றவாளிகள் என்று தெரியவந்தது.

அதேபோல் சனாதன் சாஸ்தாவின் பதினோரு உறுப்பினர்கள் கோவா குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டிருப்பதை தேசிய புலானாய்வுக் குழு கண்டறிந்தது.

19 செப்டம்பர் 2011

பாரத்புர்:குஜ்ஜார்களுடன் இணைந்து முஸ்லிம்களை நரவேட்டையாடிய காவல்துறை

புதுடெல்லி:ராஜஸ்தான் பாரத்புரில் உள்ள கோபால்கர் என்ற இடத்தில் முஸ்லிம்களுக்கும் குஜ்ஜார்களுக்கும் இடையில் கலவரம் நடந்து இரண்டு நாட்கள் ஆகியும் பதற்றம் நிலவுகிறது. அந்த பகுதியில் வசிக்கும் முஸ்லிம்கள் காவல்துறையையோ அல்லது மற்ற அரசு துறைகளையோ நம்ப முடியாமல் பீதியில் உள்ளனர்.

முஸ்லிம்களுக்கும் குஜ்ஜார்களுக்கும் இடையில் நடந்த கலவரத்தில் போலிஸ் குஜ்ஜார்களுடன் சேர்ந்து முஸ்லிம்களை கடந்த புதன் அன்று நரவேட்டை ஆடியதால் முஸ்லிம்கள் அச்சத்தில் உள்ளனர்.

குஜ்ஜார்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நடந்த சண்டையில் காவல்துறையும் அப்பகுதி அரசு நிர்வாகத்துறையும் முற்றிலுமாக ஒருதலைப்பட்சத்துடனும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் செயல் பட்டுள்ளனர் என்பதற்கு பல தெளிவான ஆதாரங்கள் உள்ளன. இக்கலவரம் ஈத்கா பள்ளி இடம் தொடர்பாக ஆரம்பித்து சிறுது நேரத்திற்குள் துப்பாக்கி சண்டை அளவுக்கு வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் காவல்துறை குஜ்ஜார்களுடன் இணைந்து முஸ்லிம்களை சரமாரியாக சுட்டதுடன் மட்டுமல்லாமல் குஜ்ஜார்கள் முஸ்லிம்களை உயிருடன் எரித்து கொலைச்செய்ததை தடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளனர்.

குஜ்ஜார்களும் போலீசும் சிறுபான்மையினர் சமூகத்திற்கு எதிராக செய்துள்ள மனித உரிமை மீறல்களை மறைப்பதற்கு தற்போது கடுமையான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்பதற்கு பல ஆதாரங்கள் கிட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.