15 அக்டோபர் 2011

முகத்தை காட்டி, குரலை உயர்த்தும் முஸ்லிம் பெண்ணே!

(முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள் என்ற நூலிலிருந்து)
ஆசிரியர் : ஷேக் டாக்டர் ஸாலிஹ் பின் ஃபவ்ஸான் அல் ஃபவ்ஸான்
(ஹைஅதுல் கிபார் அல்உலமா ரியாத்-சவூதிஅரபியா)


image.pngimage.pngimage.pngimage.pngimage.pngimage.png

     




பர்தாவின் பலன்கள்

........ஒரு பெண் பிற ஆடவர்களின் பார்வையிலிருந்து தன் உடலை மறைத்துக் கொள்ளும் விதமாக அணியும் ஆடை பர்தா எனப்படும்.அல்லாஹ் கூறுகிறான்: தானாக வெளிப்படு வதைத் தவிர வேறு எதையும் அப்பெண்கள் தங்கள் அழகை வெளிப்படுத்த வேண்டாம். இன்னும் தங்கள் முன்றானைகளில் அவர்கள் தங்கள் மார்பகங்களை மறைக்க வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்: ”(இறைநம்பிக்கையுள்ள பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள், அல்லது தம் புதல்வர்கள், அல்லது தன் கணவர்களின் புதல்வர்கள் அல்லது தம் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தம் பெண்கள், அல்லது தம் வலக் கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் (அடிமைகள்), அல்லது ஆடவர்களில் தம்மை அண்டிவாழும் (இச்சை யோடு பெண்களை விரும்ப முடியாத (அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப்பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர வேறு ஆண்களுக்கு தங்களின் அழகலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம்.” (அல்குர்ஆன்: 24:31)

”அப்பெண்களிடம் ஏதாவது ஒருபொருளை நீங்கள் கேட்பதாக இருந்தால் திரைக்கு அப்பால் இருந்தே அவர்களிடம் கேளுங்கள்.” (அல்குர்ஆன்:33:53)

இந்த வசனத்தில் திரைக்குப் பின்னால் எனச் சொல் வது ஒரு சுவர் அல்லது வாசல் அல்லது ஆடை போன்ற வற்றை திரையாக்கி தன் உடலை மறைப்பதைக் குறிக்கும்.மேற்கண்ட வசனத்தில் நபி(ஸல்)அவர்களின் மனைவியருக்காகச் சொல்லப்பட்டாலும் இந்தச் சட்டம் எல்லா முஸ்லிம் பெண்களுக்கும் பொதுவானதாகும். ஏனெனில் அதற்கான ஆடை அணிவதற் குண்டான காரணத்தை அல்லாஹ் சொல்லும் போது,

”அதுவே உங்களின் இதயங்களுக்கும், அவர்களின் இதயங்களுக்கும் தூய்மையானதாகும்.” (அல்குர்ஆன்:33:53) என்று குறிப்பிடுகிறான்.

இன்னும், அல்லாஹ் கூறுகிறான்: ”நபியே! நீர் உம் மனைவிகளுக்கும்,உம் பெண்மக்களுக்கும், இறைநம்பிக்கை யாளர்களின் மனைவியர்களுக்கும் அவர்கள் தங்கள் தலை முன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறும்!” (அல்குர்ஆன்: 33:59)

ஷேகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா தம் ஃபத்வா தொகுப்பின்22/110 ல் சொல்கிறார்கள். மேற்கண்ட வசனத்தில் ‘ஜில்பாப்’ என அல்லாஹ் குறிப்பிடுவது ஒரு பெண் தன் தலை மற்றும் முழு உடலையும் மறைத்துக் கொள்ளும் விதத்தில் அணியும் ஆடை என இப்னுமஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு போன்றவர்கள் கூறியுள்ளார்கள். அவள் தன் கண்களைத் தவிர முழு உடலையும் மறைத்துக் கொள்ளும் விதத்திலான ஆடையை அணிவது என அபூஉபைதா போன்றோர் கூறுகின்றனர். ஒரு பெண் பிற ஆடவர்களிடமிருந்து தன் முகத்தை மறைக்க வேண்டும் என்பதற்கான நபிவழி ஆதாரங்களில் ஒன்று பின் வரும் ஹதீஸாகும்.

”நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இஹ்ராம் அணிந்த நிலையில் இருக்கும்போது வாகனக் கூட்டம் ஒன்று எங்களைக் கடந்து செல்லும். எங்களுக்கு நேரே அவர்கள் வரும்போது எங்களில் உள்ள பெண்கள் தங்கள் தலையில் தொங்கிக் கொண்டிருக்கும் துணியால் முகத்தை மறைத்துக் கொள்வார்கள்.
வாகனக் கூட்டம் எங்களைக் கடந்து சென்றதும் எங்கள் முகத்தைத் திறந்து கொள்வோம்” என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார். (நூற்கள்: அஹ்மத், அபூ தாவூது)

பெண்கள் பிற ஆண்களிடமிருந்து தங்கள் முகத்தை மறைத்துக் (கொள்ள வேண்டும்) கொள்வது கட்டாயம் என்பதற்கு குர்ஆனிலும், நபி வழியிலும் ஆதாரங்கள் உள்ளன.

இஸ்லாமியப் பெண்ணே! உனக்கு நான் சில புத்தகங்களைக் குறிப்பிடுகின்றேன். அவற்றைப் படித்துப்பார்!

1. தொழுகையில் பெண்களின் திரையும், ஆடையும் (இப்னு தைமிய்யா)
2. பர்தா அணிவதன் சட்டங்கள். (ஷேக் இப்னு பாஸ்)
3. அரைகுறை ஆடையால் கெட்டுப்போனவர்கள் மீது உருவப்பட்டவாள். (ஹமூத் இப்னு அப்துல்லாஹ்
துவைஜிரி)
4. பர்தா (முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல் உஸைமீன்)

இந்தப் புத்தகங்களில் போதுமான அளவு விளக்கங்கள் உள்ளன.பெண்கள் தங்கள் முகத்தை திறந்து செல்ல அனுமதி வழங்கிய அறிஞர்கள் குழப்பமான நிலைகளில் இருந்து பாதுகாப்பு இருந்தால்தான் இந்த அனுமதி என்பதை இஸ்லாமியப் பெண்ணாகிய நீ புரிந்து கொள்ள வேண்டும். பெண்ணிற்கு குறிப்பாக இந்த காலத்தில் பாது காப்பில்லாத நிலையைத்தான் காண முடிகிறது. ஆண்களி டத்திலும் இஸ்லாமிய உணர்வு குறைந்துவிட்டது. வெட்கம் குறைந்து விட்டது. தவறுகளின் பால் அழைக்கக் கூடியவர்கள் அதிகரித்து விட்டனர். பெண்கள் தங்கள் முகங்களை பல்வேறு அலங்காரங்களைக் கொண்டும் அலங்கரிக்கிறார்கள். இதுதவறுக்குத் துணை போகின்றது.

எனவே இஸ்லாமியப் பெண்ணே! இது போன்ற காரியங்களிலிருந்து விலகிக்கொள்! குற்றங்களிலிருந்து உன்னைக் காக்கக்கூடிய பர்தாவை நீ அணிந்துகொள்! தவறானவற்றில் விழுந்துவிடக்கூடிய இப்படிப்பட்டப் பெண்களுக்கு தற்காலத்திலோ, ஆரம்பகாலத்திலோ உள்ள எந்த இஸ்லாமிய அறிஞர்களும் தன் முகத்தை பிற ஆடவர்களுக்குக் காட்ட அனுமதித்த தில்லை. பர்தா விஷயத்தில் இஸ்லாமியப் பெண்களில் நயவஞ்சகத் தன்மையோடு நடந்துகொள்ளக் கூடியவர்களும் உண்டு. பர்தாவை கடைபிடிக்கின்றவர்களிடையில் இருக்கும் போது பர்தாவை அணிந்து கொள்கிறார்கள். பர்தாவை கடைபிடிக்காத மக்களிடையே செல்லும் போது அதை அகற்றிக் கொண்டு செல்கிறார்கள். இன்னும் சிலர் பொதுவான இடங்களில் பர்தா அணிவார்கள் கடைவீதி களுக்குச் செல்லும்போது அல்லது மருத்துவமனைகளுக்குள் செல்லும்போது அல்லது நகைக்கடைகளுக்குச் செல்லும்போது அல்லது தையல்காரனிடம் செல்லும் போது தன் கனவன் முன் நிற்பதுபோன்று முகம், கைகளைத் திறந்து நிற்கின்றனர். இது ஆடை அணியும் விஷயத்தில் நயவஞ்சகத் தன்மையாகும். இப்படிச் செய்யக்கூடிய பெண்ணே நீ அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! வெளிநாடுகளிலிருந்து விமானத்தில் வரக்கூடிய பல பெண்கள் விமானத்திலிருந்து இறங்கும்போதுதான் பர்தா அணிகின்றனர். பர்தா ஒரு நாட்டுக் கலாச்சாரமாகக் கடைபிடிக்கப் படுகிறதே தவிர மார்க்கச் சட்டமாக அதை கடைபிடிப்பதில்லை.

இஸ்லாமியப் பெண்ணே! சமுதாயத்தில் நாய் போன்று அலைகின்ற, இதயத்தில் நோயைச் சுமந்துள்ளவர்களின் விஷப் பார்வையிலிருந்து உன்னைக் காப்பாற்றக் கூடியதாக பர்தா இருக்கிறது! தவறான எண்ணங்களிலிருந்து அது உன்னைப் பாதுகாக்கிறது. எனவே பர்தா வை நீ கடை பிடித்துக்கொள். பர்தாவை எதிர்த்து அல்லது அதன் மதிப்பைக் குறைத்து செய்யப்படும் தவறான பிரச்சாரத்தின் பக்கம் நீ திரும்பிப்பார்த்து விடாதே!

”தங்களின் கீழ்த்தரமான இச்செய்கைகளைப் பின் பற்றி நடப்பவர்களோ,நீங்கள் (பாவத்தின் பக்கம்) முற்றிலும் சாய்ந்துவிட வேண்டும் என விரும்புகின்றனர்.” (அல்குர்ஆன்: 4:27)

பெண் வெளியில் செல்லும்போது…

ஆபரணங்கள் மற்றும் ஆடைகளால் அலங்கரித்து வெளியில் செல்வது கூடாது.
”நாம் இன்று பெண்களிடத்தில் பார்ப்பவற்றை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பார்த்திருப்பார்களானால் இஸ்ரவேலர்கள் தங்களின் பெண்களை பள்ளிவாசலுக்குச் செல்வதை விட்டும் தடுத்தது போன்று முஸ்லிம் பெண்களையும் தடுத்திருப்பார்கள்” என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

இந்த நபிமொழிக்கு விளக்கம் அளிக்கும்போது இமாம் ஷவ்கானி அவர்கள் கூறுகின்றார்கள். ஆடை அலங்காரம், நறுமணம், உடலை வெளியில் காட்டுதல் போன்ற செயல்களைத்தான் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் உடல் முழுவதும் மறைக்கின்ற ஆடைகளையும் கடினமான ஆடைகளையுமே அணிந்துதான் பெண்கள் வெளியில் செல்லக் கூடியவர்களாக இருந்தனர்.

இமாம் இப்னுல் ஜவ்ஸி அவர்கள் ‘அஹ்கா முன்னிஸா’ எனும் நூலில் பக்கம் 39 ல் குறிப்பிடுகிறார்கள். இயன்ற வரை பெண் வெளியில் செல்லாது இருக்கவேண்டும். அவள் தன்னைப் பாதுகாத்துக் கொண்டாலும் கூட அவளிடமிருந்து மற்ற ஆண்கள் பாதுகாப்புப் பெறவில்லை. வெளியில் செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டால் தன்னுடைய கணவனின் அனுமதி பெற்று அலங்காரம் இல்லாத நிலையில் செல்லவேண்டும். அதிகமாக ஆள் நடமாட்டம் இல்லாத பாதைகளிலேயே செல்லவேண்டும். அதிகமாக ஆட்கள் நடமாடும் பாதைகளிலும், கடைவீதிகளிலும் செல்வதைத் தவிர்ந்து கொள்ளவேண்டும். அவளுடைய சப்தத்தை மற்றவர்கள் கேட்பதிலிருந்து தன்னைப் பேணிக் கொள்ளவேண்டும். பாதையில் செல்லும்போது அதன் நடுவில் செல்லாது ஓரமாகச் செல்லவேண்டும்.

நாம் முன்னர் கூறியது போன்று ஒருபெண் தன்னை முழுவதுமாக மறைக்கப்பட வேண்டியவளாக இருக்கிறாள். எனவே அவள் தன்னை மறைத்துக் கொள்ள வேண்டியது அவள் மீது கடமையாகிறது. பார்வையைத் தாழ்த்துமாறு கட்டளையிடப்பட்டதன் நோக்கம் மனித குலம் தவறுகளில் விழாமலிருக்க வேண்டும் என்பதற்காகத்தான் சந்தேகமின்றி உடலும் உடலும் உரசுவது உணர்வுகளைத் தூண்ட வலுவானதாக அமைகிறது. கண்ணால் பார்ப்பதால் ஏற்படும் தீங்கை விட இது மிகப் பெரிய தீங்காகும். இதை நடுநிலையான எல்லோரும் நன்கு அறிவர்.

(அதிக பக்கங்களைக் கொண்ட இந்த நூலில், முஸ்லிம் பெண்கள் அன்னியர்கள் முன் வருதல், முகம், கைகளை காட்டுதல், குரலை உயர்த்துதல் போன்ற செய்திகள் மட்டும் தரப்பட்டுள்ளது).


(நன்றி: தக்கலை.காம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக