15 அக்டோபர் 2011

பிரதமர் பதவிக்குப் போட்டியிட மாட்டேன்! - அத்வானி

வரும் தேர்தலில் பிரதமர் பதவிக்குப் போட்டியிட மாட்டேன் என பாஜக மூத்த தலைவர் எல்கே அத்வானி அறிவித்துள்ளார்.ய

ஊழலை ஒழிக்க வேண்டும் என்று கோரி, பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கடந்த 11-ந் தேதி பீகாரில் ரத யாத்திரை தொடங்கினார். 23 மாநிலங்கள் வழியாக அவரது யாத்திரை செல்கிறது.

நவம்பர் 20-ந் தேதி டெல்லியில் ரத யாத்திரை நிறைவு பெறுகிறது. தற்போது அவரது ரத யாத்திரை மத்திய பிரதேச மாநிலத்தில் செல்கிறது. சத்னா நகரில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், "பாரதீய ஜனதா கட்சியில் ஜனநாயக முறைப்படிதான் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு மன்னர் ஆட்சி இல்லை. நான் பாரதீய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் பதவிக்கு போட்டியிட மாட்டேன். ஆனால், அதற்கு யார் போட்டியிடுவார்கள் என்பதை கட்சியின் தலைவர்கள் கூட்டாக சேர்ந்து முடிவு எடுப்பார்கள்.

ஆனால் காங்கிரசில் இந்த நிலை இல்லை. லோக்பால் மசோதாவுக்குள் பிரதமர் பதவியை கொண்டு வருவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. பிரதமர் பதவியையும் லோக்பால் மசோதாவுக்குள் கொண்டு வருவதே நல்லது.

ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கில், பாரதீய ஜனதா எம்.பி.க்களை வேண்டும் என்றே காங்கிரஸ் ஆட்சி சிறையில் தள்ளிவிட்டது. 2ஜி ஊழல் உள்பட பல்வேறு ஊழல்களால் மத்திய அரசு மூழ்கிக்கொண்டு இருக்கிறது," என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக