05 ஏப்ரல் 2012

டெல்லியை நோக்கி முன்னேறிய ராணுவ பிரிவுகள்:செய்தியில் உறுதியாக உள்ளோம் – இந்தியன் எக்ஸ்பிரஸ்!

புதுடெல்லி:கடந்த ஜனவரி மாதம் தரைப்படையின் இரண்டு யூனிட்டுகள் டெல்லியை நோக்கி ராணுவத்தின் 2 பிரிவுகள் வந்ததாக வெளியிட்ட செய்தியில் உறுதியாக உள்ளோம் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை கூறியுள்ளது.

ஆறுவாரம் நீண்ட புலனாய்வுக்கு பிறகே இச்செய்தியை வெளியிட்டோம் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் நிர்வாகிகள் பத்திரிகைச் செய்தியில் கூறியுள்ளனர்.

ஜனவரி 16-ஆம் தேதி நள்ளிரவில் நடந்த ராணுவ பிரிவுகளின் நகர்வு அரசுக்கு தெரிவிக்காமலேயே நடந்துள்ளது. நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலமாக இச்செய்தி தங்களுக்கு கிடைத்ததாகவும், ஆனால், அவர்களை பாதுகாப்பதற்கான பொறுப்பு உள்ளதால் அவர்களது பெயரை வெளியிட இயலாது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் எடிட்டர் இன் சீஃப் சேகர் குப்தாவின் தலைமையிலான குழு இச்சம்பவம் குறித்து செய்தியை தயாராக்கியது.

நன்றி (செய்தி ) :- தூது ஆன்லைன் , தட்ஸ்தமிழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக