30 நவம்பர் 2010

பிரதமரை விமர்சித்த எழுத்தாளருக்கு சிறைவாசம்

குவைத்,நவ:எழுத்தாளரும், வழக்கறிஞருமான முஹம்மத் அப்துல் காதிர் அல் ஜாஸிமிற்கு குவைத் குற்றவியல் நீதிமன்றம் ஒருவருட சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இணையதளத்தில் தனக்கெதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை அல் ஜாஸிம் எழுதினார் என்ற குவைத் பிரதமரின் புகார் மனுவில்தான் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடுச் செய்யப்படும் என அல் ஜாஸிமின் வழக்கறிஞர் அப்துல்லாஹ் அல் அஹ்மத் தெரிவித்துள்ளார்.

எம் என்று அழைக்கப்படும் வியாபாரி மூலமாக ஈரான் உளவுத்துறை குவைத் உள்நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைப்பதாக அல் ஜாஸிம் தான் எழுதிய கட்டுரையில் குற்றஞ்சாட்டியிருந்தார்.

குவைத்தில் ஷியா முஸ்லிம்களுக்கிடையே நல்ல செல்வாக்கு பெற்ற இந்த நபர் பிரதமருடன் நெருங்கிய தொடர்பிருப்பதாக அல் ஜாஸிம் குறிப்பிடுகிறார்.

குவைத் அமீரை தரக்குறைவாக விமர்சித்தது மற்றும் தேசிய நலனுக்கு கேடுவிளைவித்தது தொடர்பாக அல் ஜாஸிமிற்கு கடந்த மே மாதம் ஆறு வாரம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து அல் ஜாஸிமிற்கு ஆதரவு தெரிவித்து பெரிய அளவிலான பேரணிகள் நடைப்பெற்றது. அவருடைய விடுதலைக்காக சர்வதேச அளவில் கோரிக்கைகள் எழும்பின. கட்டுரைகள் மற்றும் அறிக்கைகளின் பெயரால் அல் ஜாஸிம் மீது பல வழக்குகள் உள்ளன.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக