ஸன்ஆ,நவ:திருமணச் செலவை தாங்கமுடியாததால் யெமன் நாட்டில் ஆண்கள் சமூக திருமணங்களை விரும்புவது அதிகரித்து வருகிறது.
மணப்பெண்ணின் வீட்டினர் கேட்கும் மஹ்ர்(திருமணக் கொடை) மற்றும் திருமணச் செலவுகளை ஈடுகட்ட முடியாத சூழலில் பெரும்பாலான ஆண்கள் திருமண வயதை தாண்டியும் மணமுடிக்க முடியாத சூழலில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
மஹ்ர் தொகை மட்டும் 11.5 லட்சம் யெமன் ரியால்(5000 டாலர்) ஆகிறது. மூன்று தினங்கள் நீளும் திருமண நிகழ்ச்சிகளுக்கான செலவுகள் தனி. இந்த செலவுகளை ஈடுகட்ட முடியாமல்தான் பெரும்பாலான யெமன் நாட்டு ஆண்கள் சமூக திருமணங்களை விரும்புகின்றனர்.
10 முதல் 1600 தம்பதிகள் பங்கேற்ற சமூகத் திருமணங்கள் யெமனில் நடந்தேறிவிட்டன. கடந்த மாதம் நடைபெற்ற 1600 தம்பதிகளுக்கான சமூகத் திருமண நிகழ்ச்சிதான் இதுவரை நடந்ததில் பெரியதாகும்.
தலைநகரின் ஸ்போர்ட்ஸ் அரங்கில் 1600 தம்பதிகள் பாரம்பரிய கலாச்சார உடையுடன் அணிவகுத்து நின்றது ருசிகரமான காட்சியாகும்.
ஆர்ஃபன் சாரிட்டபிள் ஆர்கனைசேசன் என்ற அமைப்புதான் இத்திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடுச் செய்திருந்தது.
சவூதி இளவரசர் சுல்தான் பின் அப்துல் அஸீஸ்தான் இத்திருமணத்திற்கான ஸ்பான்சர். திருமணம் முடிக்கப்பட்ட அனைத்து மணமக்களும் அநாதைகளாவர்.
மஹ்ர் செலவுக்காக ஒவ்வொருவருக்கும் இரண்டரை லட்சம் யெமனி ரியால்(900 டாலர்) சவூதி இளவரசர் வழங்கினார். திருமணம் தாமதிப்பதனால் பாலியல் ரீதியான அராஜகம் உண்டாவதை தடுப்பதற்காகவே உள்ளூர் சமூக அமைப்புகள், ஷேக்குமார்கள், அரசு மற்றும் ராணுவம் ஆகியோர் எடுத்த முயற்சியின் விளைவாகவே இத்தகைய சமூக திருமணங்கள் யெமனில் நடந்தேறுகிறது. இது சமீபகாலமாக அதிகரித்து வருவதாக அல்ஜஸீரா தொலைக்காட்சி தெரிவிக்கிறது.
சில தனியார் நிறுவனங்களும் இத்தகைய சமூகத் திருமணங்களுக்கு ஸ்பான்சர் செய்கின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக