வாஷிங்டன்- இனி போர்களில் மனிதர்களுக்குப் பதில் ரோபோக்களை ஈடுபடுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ராணுவத்தை முற்றிலும் நவீனமயமாக்குவதில் தீவிரமாக உள்ளது அமெரிக்கா. போரின் போது ராணுவ வீரர்களை நேரடியாக பயன்படுத்துவதால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இது அமெரிக்காவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. வியட்நாமியப் போர், ஈராக் போர்களில் வீரர்களின் உயிரிழப்பு பெரும் பிரச்சினையாக இருந்தது அமெரிக்காவுக்கு.
இந்த சிக்கலுக்கு தீர்வு காணும் விதத்தில், போர்களில் அதி நவீன ரோபோக்களை (எந்திர மனிதனை) பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஸ்பெஷல் ரோபோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
அவை எதிரிகளை மறைந்திருந்து தாக்கும் வல்லமை படைத்தவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. தொட்டறியும் உணர்வையும் இந்த ரோபோக்களுக்கு வழங்கியிருப்பதன் மூலம், எந்திர மனிதனால் மனிதர்களுக்கு தீங்கு நேராமல் பார்த்துக் கொள்ள முடியும் என்றும், இலக்கை மட்டுமே தாக்கும் என்றும் அமெரிக்கா கருதுகிறது.
15 இஞ்ச் அளவுள்ள இந்த ரோபோக்களுக்கு ஜெர்ஷியா மாகாணத்தில் உள்ள போர்ட் பென்னிங் ராணுவ தளத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த ரோபோக்கள் ஆணையைப் பெற்றதும் குறிப்பிட்ட இலக்கை தாக்கி அழித்தன. எனவே இதை போர் முனையில் பயன்படுத்தலாம் என முன்னாள் ராணுவ அதிகாரி ஜோசப் டபிள்யூ டயர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக