பாலைவனத் தூது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாலைவனத் தூது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14 ஏப்ரல் 2011

அன்னா ஹசாரே!! காந்தியவாதியா? காவிவாதியா?

ஏப்ரல் 14, இந்த வாரம் முழுவதும் பத்திரிகையில் நிறைந்து நின்ற நபர் அன்னா ஹசாரே, யார் இவர்? இத்தனை நாள் இவர் எங்கே இருந்தார்.

இதுபோன்ற ஆயிரமாயிரம் கேள்விகள் நம் மனதில் எழுகின்றன. ஊழல் நடப்பது நம் நாட்டில் ஒன்றும் புதிதல்ல.

இதற்க்கு முன்பும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் நம் நாட்டு ராணுவ வீரர்களுக்கு வாங்கிய ஆயுதத்திலும், கார்கில் யூத்தத்திலே கொல்லப்பட்ட வீரர்களுக்கு வாங்கிய சவபெட்டிகளிலும், கொள்ளை அடித்தார்கள்.

அப்போது இந்த அன்ன ஹசாரே எங்கு இருந்தார்?. இப்போது நடந்த ஜி ஊழலின் தொடக்கமே பாரதிய ஜனதா கட்சிகாரர்கள் ஆட்சியில்தான். அப்போது இந்த காந்தியவாதி எங்கு இருந்தார்?.

குஜராத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக கலவரம் நடந்ததே ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் கொள்ளபட்டர்களே அப்போது இவர் எங்கே போனார். இன்றும் அந்த கயவர்கள் ஆட்சிபீடத்தில் அமர்ந்து இருக்கிறார்களே மோடியின் ஆட்சியில் ஊழலும், மதவாதமும் தலைவிரித்தாடுதே அவர்க்களுக்கு எதிராக இந்த காந்தியவாதி என்ன செய்தார்?.

16 மார்ச் 2011

அமெரிக்க அரசின் கண்காணிப்பில் முஸ்லிம்கள்

வாஷிங்டன்:தீவிரவாதத்திற்கெதிரான நடவடிக்கை எனக்கூறி அமெரிக்காவின் ரகசிய புலனாய்வு நிறுவனமான ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேசன்(எஃப்.பி.ஐ) அந்நாட்டில் வாழும் முஸ்லிம்களை கண்காணித்து வருகிறது.

மஸ்ஜிதுகளுக்கு வரும் முஸ்லிம்களை முழுநேர கண்காணிப்பிற்கு உட்படுத்தியுள்ளது எஃப்.பி.ஐ என அமெரிக்க இஸ்லாமிக் ரிலேசன்(CAIR) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் பாதுகாப்பு ஏஜன்சிகளிடம் தகவல்களை உடனுக்குடன் அளிக்குமாறு எஃப்.பி.ஐ உத்தரவிட்டுள்ளது. பயிற்சியிலிருக்கும் புதிய அதிகாரிகளுக்கு இஸ்லாம் மற்றும் பயங்கரவாதம் குறித்து தவறான புரிந்துணர்வு நிலவும் சூழலில் அவர்கள் அளிக்கும் அறிக்கைகள் குறித்து CAIR கவலை தெரிவித்துள்ளது.

தேர்தல் களத்தில் களமிறங்கும் விழுப்புரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் பேரவை

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்ட ஐக்கிய ஜமாஅத் பேரவை விழுப்புரம் மாவட்டத்தில் 4 இடங்களில் போட்டியிடப் போவதாகவும், அதில் முதல்கட்டமாக இரண்டு வேட்பாளர்கள் பெயரையும் ஜமாஅத் பேரவைத் தலைவர் எஸ்.எம்.அமீர் அப்பாஸ் ஞாயிற்றுக்கிழமை இரவு அறிவித்தார்.

இந்த அமைப்பின் நிர்வாகிகள் கூட்டத்துக்கு பிறகு அவர் நிருபர்களிடம் கூறியது: ‘முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியதற்காக கடந்த மக்களவைத் தேர்தலில் முஸ்லிம்கள் வாக்களித்து விட்டனர். இனி என்ன செய்யப் போகிறோம் என்று சொன்னால்தான் எங்கள் ஆதரவு குறித்து தெரிவிப்போம்.

குறிப்பாக இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள இருபெரும் கூட்டணி கட்சிகள், அவர்கள் கட்சி சார்பிலேயே விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு முஸ்லிமாவது நிறுத்தப்பட வேண்டும். அப்படி நிறுத்தும் கட்சிக்கு எங்களின் ஆதரவு உண்டு. இரு கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்தால், தொகுதிக்கேற்றவாறு முடிவு செய்து வாக்களிப்போம். இல்லையென்றால் நாங்கள் இந்த மாவட்டத்தில் விழுப்புரம், செஞ்சி, சங்கராபுரம், திருக்கோவிலூர் ஆகிய தொகுதிகளில் ஜமாஅத் சார்பில் போட்டியிடுவது உறுதி.

விக்கிலீக்ஸ்:மணிசங்கர் அய்யரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கக் காரணம் அமெரிக்காவின் நிர்பந்தம்

புதுடெல்லி:பெட்ரோலியத்துறை அமைச்சராக பதவி வகித்த காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மணி சங்கர் அய்யரை அத்துறையிலிருந்து நீக்கக் காரணம் அமெரிக்காவின் நிர்பந்தமாகும் என விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ரகசிய ஆவணச் செய்தி கூறுகிறது.

இந்தியா-பாகிஸ்தான்-ஈரான் எரிவாயு பைப்லைன் திட்டத்திற்காக முயற்சி மேற்கொண்ட அமெரிக்க எதிர்ப்பாளரான மணி சங்கர் அய்யரை பெட்ரோலியத்துறை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு முரளி தியோராவை நியமித்தது அமெரிக்காவின் விருப்பத்தை நிறைவுச்செய்ய இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை என விக்கிலீக்ஸ் வெளியிட்ட செய்தி கூறுகிறது.

இதனைக் குறித்து கருத்துத் தெரிவித்த மணிசங்கர் அய்யர்

15 மார்ச் 2011

ஜெர்மனி:அணு சக்தி நிலையங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மனித சங்கிலிப் போராட்டம்

பெர்லின்,மார்ச்.15:ஜெர்மனியில் அணுசக்தி நிலையங்கள் செயல்படும் கால அளவை நீட்டிப்பதுக் குறித்த அரசுத் திட்டத்தை கண்டித்து ஸ்டூட்கர்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

45 கிலோமீட்டர் நீண்ட மனித சங்கிலியில் 60 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

அணுசக்தி கட்டுப்படுத்தக்கூடிய தொழில்நுட்பம் அல்ல என்பது ஜப்பானில் நிரூபணமாகியுள்ளது என போராட்டத்தில் கலந்துக் கொண்டோர் தெரிவித்தனர்.

அங்கலா மெர்கலின் அரசு அணுசக்தி நிலையங்கள் செயல்படும் கால அளவை கடந்த ஆண்டு ஒருவருடத்திற்கு நீட்டியது. ஜெர்மனியில் அணுசக்தி

ஆப்கானிஸ்தான்:குழந்தைகள் படுகொலையைக் கண்டித்து பேரணி

காபூல்,மார்ச்:ஆப்கானிஸ்தான் மாகாணமான குனாரில் அந்நிய ஆக்கிரமிப்புப் படையான நேட்டோவின் கொடூரத் தாக்குதலில் 9 குழந்தைகள் கொலைச் செய்யப்பட்டதைக் கண்டித்து நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.

போராட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள், 'அமெரிக்காவுக்கு சாவு', 'ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாவு' என முழக்கமிட்டனர்.

குனார் மாகாணத்தில் விறகுகளை பொறுக்கிக் கொண்டிருந்த குழந்தைகளை கொலைச் செய்ததுக் குறித்து விசாரணை நடத்தப்படும் என நேட்டோவின் கட்டுப்பாட்டிலுள்ள இண்டர்நேசனல் செக்யூரிட்டி அஸிஸ்டன்ஸ் ஃபோர்ஸ்(ISAF) தெரிவித்துள்ளது.

2030 ஆம் ஆண்டில் மணமகள் கிடைப்பது கடினம்

டொரான்டோ,மார்ச்.15:இந்தியா,சீனா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெறும் கருக்கலைப்பின் காரணமாக 2030 ஆம் ஆண்டில் ஆண்களுக்கு திருமணம் முடிக்க மணப்பெண் கிடைப்பது அரிதாகும் என கனேடியன் மெடிக்கல் அசோசியேசன் ஜெர்னலில் வெளியான ஆய்வு தெரிவிக்கிறது.

20 சதவீதம் ஆண்களுக்கு மணப்பெண் கிடைக்கமாட்டார்கள் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது. மேற்கண்ட நாடுகளில் 105 ஆண் குழந்தைகள் பிறக்கும் பொழுது 100 பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கின்றனர். இது சில கொரிய நகரங்களில் 125 வரை எட்டியுள்ளது.

கர்ப்பத்திலிருக்கும் சிசு ஆணா? பெண்ணா? என்பதுக் குறித்து பரிசோதனைச் செய்யும் ஸ்கேனிங் செண்டர்கள் கட்டுப்பாடுகளில்லாமல்

அணுசக்தி பாதுகாப்பானதல்ல - சுற்றுச்சூழல் ஆர்வலர்

டோக்கியோ,மார்ச்.15:அணுசக்தி ஒருபோதும் பாதுகாப்பானதல்ல என சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர் ஸ்டீவ் கேம்பல் தெரிவித்துள்ளார்.

பேரழிவு ஏற்பட்ட ஜப்பானில் பூகம்பமும், சுனாமியும், அணுசக்தி நிலையங்களின் வெடிப்பும் உலக அளவில் புதிய விவாதத்திற்கு களம் ஏற்படுத்தியதாக கேம்பல் கூறுகிறார்.

ஹைடெக் தொழில்நுட்ப கட்டமைப்பைக் கொண்ட ஜப்பானில் அணுசக்தி நிலையங்கள் வெடித்துள்ளதால் அணுசக்தி பாதுகாப்பானதல்ல என்பது நிரூபணமாகியுள்ளது.

அதிகமான எரிசக்திக்காக அணுசக்தி நிலையங்களை நிறுவும் பொழுது அதன் பாதுகாப்பு மனிதன் கட்டுப்பாட்டிற்கு அப்பால் உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக கேம்பல் கூறுகிறார்.

ஹிந்துத்துவா குண்டுவெடிப்பு: ம.பி பா.ஜ.க அரசின் தடைகளை முறியடிக்க என்.ஐ.ஏவிடம் வழக்கை ஒப்படைக்க மத்திய அரசு ஆலோசனை

புதுடெல்லி,மார்ச்.15:சங்க்பரிவார பயங்கரவாதிகள் இந்தியாவில் நடத்திய பல்வேறு குண்டுவெடிப்புகளைக் குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு ஏஜன்சியிடம் ஒப்படைப்பதுக் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனைச் செய்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 2007-ஆம் ஆண்டு குண்டுவெடிப்புகளின் சூத்திரதாரிகளில் ஒருவரான சுனில்ஜோஷி கொல்லப்பட்டார். இவருடைய கொலை வழக்கை விசாரிக்கிறோம் என்ற போர்வையில் வழக்கை சீர்குலைக்க அம்மாநில பா.ஜ.க அரசு முயல்கிறது. இதனை முறியடிக்கத்தான் மத்திய உள்துறை அமைச்சகம் என்.ஐ.ஏவிடம் ஹிந்துத்துவா குண்டுவெடிப்பு வழக்குகளை ஒப்படைக்க ஆலோசித்தது.

மாநிலங்களின் அனுமதியில்லாமலேயே பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளில் விசாரணை நடத்த என்.ஐ.ஏவுக்கு அனுமதி இருந்த பொழுதிலும் எவ்வித வீழ்ச்சிகள் வராமல் விசாரணையை நடத்துவதற்கு ஏதுவாக மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

மோடிக்கு உபகாரம் செய்த ஆர்.கே.ராகவன் - காங்கிரஸ் குற்றச்சாட்டு

அஹ்மதாபாத்,மார்ச்.15:குஜராத் இனப் படுகொலைக் குறித்து விசாரணை மேற்கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவர் ஆர்.கே.ராகவனுக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடனான தவறான உறவைக் குறித்து சுதந்திரமாக விசாரணை நடத்தவேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

ராஜ்காட்டில் கட்சிக் கூட்டத்தில் உரையாற்றும் பொழுது காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் சக்தி சிங் கோஹில் இந்த கோரிக்கையை எழுப்பியுள்ளார்.

நரேந்திர மோடியிடமிருந்து பல்வேறு சலுகைகளை பெற்றவர் ஆர்.கே.ராகவன் எனக் குற்றஞ்சாட்டிய கோஹில், இனப்படுகொலை வழக்கில் மோடியை பாதுகாத்ததற்கு கிடைத்த உபகாரம்தான் அவருடைய லண்டன் பயணங்கள் என தெரிவித்துள்ளார்.

ராகவன் பலமுறை லண்டன் சென்றுள்ளார். இப்பயணங்களை அவர் மேற்கொண்டது, தனிப்பட்ட ரீதியிலாகும். மாறாக, குஜராத் இனப்படுகொலை விசாரணை தொடர்பானது அல்ல. மேலும், இப்பயணங்களுக்கான செலவை குஜராத் அரசே ஏற்றுக்கொண்டுள்ளது.

14 மார்ச் 2011

ஆகவே உங்கள் பொன்னான வாக்குகளை...

தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டும் தேர்தல் களம் இன்னும் சூடு பிடித்ததாக தெரியவில்லை. அதிமுக கூட்டணியில் இன்னும் கூட்டணி கட்சிகள் யார் என்றே முடிவு செய்யப்படவில்லை. அம்மாவின் தரிசனத்திற்காக வைகோவும் காம்ரேட்களும் தவமாய் தவமிருந்தும் இதுவரை பிரயோஜனம் எதுவும் இல்லை. திமுக கூட்டணியில் தொகுதி எண்ணிக்கையில் முடிவு ஏற்பட்டுள்ள போதும் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பதில் இன்னும் சிக்கல் தீர்ந்தபாடில்லை. நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கை பொறுத்த வரை சென்ற முறை பெற்றதை போன்று மூன்று தொகுதிகளை பெற்றுக்கொண்டு ஒன்றை கூட்டணி தர்மத்திற்காக விட்டுக்கொடுத்துள்ளனர்!

இரண்டு திராவிட கட்சிகளுக்கும் மாறி மாறி ஓட்டளித்த முஸ்லிம்கள் சமீப ஆண்டுகளாக அரசியல் விழிப்புணர்வு அடைந்துவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். முஸ்லிம்கள் தங்களின் பலத்தை காண்பிக்க வேண்டும் என்ற கருத்து வேகமாக ஒலித்து வருகிறது. திருமாவளவனையும் ராமதாசையும் இவர்கள் உதாரணமாக கூறி வருகின்றனர். இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளை இனம் கண்டு வெளியிட்டனர்.

பெரும்பான்மையினரின் கூற்று 'நாம் இனியும் யாருக்கும் ஓட்டளித்து ஏமாறக் கூடாது.

ஆயுத இறக்குமதியில் இந்தியாவுக்கு முதலிடம் , ஆயுத ஏற்றுமதியில் முதலிடத்தில் அமெரிக்கா

புதுடெல்லி,மார்ச்.14:உலகில் அதிக அளவு ஆயுதங்களை இறக்குமதிச் செய்யும் நாடாக இந்தியா மாறியுள்ளது. சீனாவை முந்திய இந்தியா ஆயுத இறக்குமதியில் முதலிடத்தை பிடித்துள்ளது.

ஸ்டாக்ஹோம் இண்டர்நேசனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்ட்யூட்டின் ஆய்வில் இந்தியாவை ஆயுத இறக்குமதியில் முதலிடத்திலிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

2006-ஆம் ஆண்டு முதல் 2010-ஆம் ஆண்டுவரை ஒன்பது சதவீதம் அனைத்து சர்வதேச ஆயுதங்களையும் இந்தியா இறக்குமதிச் செய்துள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது. அதேவேளையில், சீனா ஆறு சதவீதம் மட்டுமே சர்வதேச அளவில் ஆயுதங்களை இறக்குமதிச் செய்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. சீனா
உள்நாட்டில் ஆயுதங்களை தயாரிப்பதாக ரிசர்ச் இன்ஸ்ட்யூட்டின் ஃபெலோ ஸீமன் வெஸ்மான் கூறுகிறார்.

அமெரிக்கா ஆயுத ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ளது.

13 மார்ச் 2011

தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவை தடை செய்ய மகாராஷ்டிரா அரசு முடிவு

மும்பை,மார்ச்.:மலேகான் குண்டுவெடிப்பு போன்ற நாட்டின் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவை தடை செய்ய மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "பல்வேறு சட்ட விரோத தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சனாதன் சன்ஸ்தாவை தடை செய்வதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு தொடங்கி இருக்கிறது. இது தொடர்பான திட்டம் மத்திய அரசுக்கு விரைவில் அனுப்பப்படும் என்றார்.

கடந்த 2008ம் ஆண்டு, தானே மாவட்டத்தில் மராத்தி நாடகம் நடந்து கொண்டிருந்த தியேட்டரில் குண்டு வெடித்த சம்பவம் தொடர்பாக சன்ஸ்தாவை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போதே இந்த அமைப்பை தடை செய்யும்படி மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு படை கோரியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கஷ்மீர்:முழு அடைப்பில் மாமூல் வாழ்க்கை பாதிப்பு

ஸ்ரீநகர்,மார்ச்.13:கஷ்மீர் பள்ளத்தாக்கில் இளைஞர்களின் கைதை கண்டித்து ஹூர்ரியத் மாநாட்டுக் கட்சி அழைப்பு விடுத்திருந்த முழு அடைப்பைத்தொடர்ந்து மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்பிற்குள்ளானது.

லால்சவுக் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால் வாகனங்கள் ஓடியது. நகரத்தின் சுற்று வட்டாரங்களில் முழு அடைப்பிற்கு ஓரளவு ஆதரவு இருந்தது. கிராமங்களிலும், சிறிய நகரங்களிலும் முழு அடைப்பு பெருமாலும் பாதிக்கவில்லை. அமைதியான முறையில் போராட்டம் நடத்திய இளைஞர்களை போலீஸும், பாதுகாப்பு படையினரும் கைது செய்ததைத் தொடர்ந்துதான் கிலானி முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்தார்.

பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என ஐ.ஜி எஸ்.எம்.ஸஹாயி தெரிவிக்கிறார்.

12 மார்ச் 2011

சீட் தானம்:முஸ்லீக் தலைமைக்கு எதிராக ஃபாத்திமா முஸஃபர்

சென்னை,மார்ச்.11:தி.மு.க-காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட சீட் தகராறில் சமரசம் ஏற்படுத்துவதற்காக கிடைத்த 3 சீட்டில் ஒன்றை தானமாக வழங்கிய முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைமைக்கு எதிராக அக்கட்சியின் மகளிரணி களமிறங்கியுள்ளது.

முஸ்லீம் லீக்கையும், முஸ்லீம் சமுதாயத்தையும் அவமானப்படுத்தும் நடவடிக்கையை தேசிய தலைமை மேற்கொண்டதாக லீகின் மகளிரணி மாநில அமைப்பாளர் ஃபாத்திமா முஸஃபர் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் குற்றஞ்சாட்டினார்.

தி.மு.க கூட்டணியில் முஸ்லீம் லீக்கிற்கு 3 இடங்கள் வழங்கப்பட்டிருந்தன. காங்கிரஸ் கட்சிக்கு 63 இடங்களை அளித்து பிரச்சனையை தீர்ப்பதற்காக லீகிற்கு கிடைத்த 3 இடங்களில் ஒன்றை தானமாக வழங்க தேசிய தலைவர் இ.அஹ்மத் சம்மதித்தார். மாநில தலைவர் பேராசிரியர் காதர்மைதீன், பொதுச்செயலாளர் அபூபக்கர் ஆகியோரிடம் கலந்தாலோசிக்காமல் இ.அஹ்மத் சீட் தானத்திற்கு சம்மதித்ததாக ஃபாத்திமா முஸஃபர் சுட்டிக்காட்டினார்.

கத்தாஃபி பதவி விலக ஐரோப்பிய யூனியன் கோரிக்கை

பிரஸ்ஸல்ஸ்,மார்ச்.12:மக்கள் எழுச்சிப் போராட்டத்தைத் தொடர்ந்து லிபியாவின் ஏகாதிபத்திய அதிபர் முஅம்மர் கத்தாஃபி பதவி விலக வேண்டுமென ஐரோப்பிய யூனியன் அரசியல் தலைவர்களின் கூட்டம் வலியுறுத்தியுள்ளது.

நேற்று பிரஸ்ஸல்ஸில் நடந்த அவசர உச்சி மாநாட்டில் 27 நாடுகளின் தலைவர்கள் இக்கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

லிபியாவின் பிரச்சனைக்கு காரணம் கத்தாஃபி ஆவார். எனவே அவர் அதிகாரத்திலிருந்து விலகவேண்டும் என உச்சிமாநாட்டிற்கு வருகைத்தந்த ஐரோப்பிய கமிஷனின் தலைவர் ஜோஸ் மானுவல்
பரோஸா பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சர்வதேசச் சட்டங்களை கடைப்பிடித்து அந்த லட்சியத்தை அடைவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்வோம் என அவர் தெரிவித்தார்.

ஹவாய் மற்றும் இந்தோனேஷியாவிலும் சுனாமி: பீதியில் பசிபிக் நாடுகள்

ஹோனொலூலு,மார்ச்.12:ஜப்பானில் ஏற்பட்ட பெரும் பூகம்பத்தைத் தொடர்ந்து பசிபிக் கடற்கரையோர பிரதேசங்களில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலுள்ள பசிபிக் கடல் பிராந்தியத் தீவான ஹவாயில் பூகம்பத்தைத் தொடந்து உருவான சுனாமியில் பெரும் சேதம் விளைந்துள்ளது. இங்கு ஏற்கனவே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் அப்பிரதேசங்களிலிருந்து மக்கள் வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டனர்.

ஹவாய் தீவிலுள்ள கவாயில் கடல் அலைகள் 6 மீட்டர் உயரத்திற்கு எழும்பியதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது. உள்ளூர் நேரம் அதிகாலை மூன்றரை மணிக்கு இங்கு சுனாமி நாசத்தை விதைத்தது.

10 மார்ச் 2011

வெடிக்குண்டு தயாரிக்க ஹிந்து சிறார்களுக்கு பயிற்சி அளித்த பிரவீன் முத்தலிக்

மும்பை,மார்ச்.10:இந்தியாவில் நடந்த பல்வேறு வெடிக்குண்டு தாக்குதல்களில் ஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் பங்கு சுவாமி அஸிமானந்தாவின் வாக்குமூலத்தை தொடர்ந்து வெட்ட வெளிச்சமானது. அவர் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருந்த பிரவீன் முத்தலிக் மலேகான் 2008 குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாவார்.

பிரவின் முத்தலிக்கை கைது செய்து மஹராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படையினர்(ஏ.டி.எஸ்) விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் பிரவீன் முத்தலிக்கிடம் மேற்கொண்ட விசாரணையின் போது ஹிந்து சிறுவர்களுக்கு வெடிக்குண்டு தயாரிக்க பயிற்சி அளித்த திடுக்கிடும் செய்தி வெளியாகியுள்ளது.

பிரவீன் முத்தலிக் பல ஹிந்து சிறுவர்களுக்கு தீவிரவாத தாக்குதல்களை எவ்வாறு நிகழ்த்துவது என்பதுக் குறித்து தனது கண்காணிப்பின் கீழ் பயிற்சி அளித்துள்ளதாக ஏ.டி.எஸ் கூறுகிறது. இதனை அவரிடம் நடத்திய விசாரணையின்போது பெற்றதாக ஏ.டி.எஸ் தலைவர் ராகேஷ் மரியா தெரிவிக்கிறார்.

பாலியல் கொடுமை: 21 பாதிரியார்கள் சஸ்பெண்ட்

வாஷிங்டன்,மார்ச்.10:அமெரிக்காவில் ஃபிடெடெல்பியாவில் சிறுவர்களை பாலியல் ரீதியாக கொடுமைச் செய்த 21 கிறிஸ்தவ பாதிரியார்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

சிறுவர்களை வன்புணர்வுக்கு ஆளாக்கியதாக கடந்த மாதம் வெளியான விசாரணை அறிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஃபிடெடெல்பியாவில் ஆர்ச் பிஷப் கர்தினால் ஜஸ்டின் ரிகாலி, 21 பாதிரியார்களை இடைநீக்கம் செய்வதாக அறிவித்தார். 37 பாதிரியார்கள் குற்றவாளிகள் என விசாரணை கமிட்டி கண்டறிந்தது.

அறிக்கை வெளியாகி சில வாரங்களுக்கு பிறகு மூன்று பாதிரியார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.


பாலியல் கொடுமை:ஹிந்துத்துவா மடாதிபதிக்கு அமெரிக்காவில் 20

வாஷிங்டன்,மார்ச்.10:ஆசிரமத்தில் பெண்களை பாலியல் ரீதியாக கொடுமைச் செய்த இந்தியாவைச் சார்ந்த பிரகாஷானாந்தா சரஸ்வதி என்ற குருஜிக்கு அமெரிக்க நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்காவின் மேற்கு ஹூஸ்டனில் குருஜி நிறுவிய ஆசிரம வளாகத்தில் தங்கியிருந்த பெண் பக்தர்கள்தாம் இவருடைய பாலியல் வெறிக்கு பலியாகியுள்ளனர். இவர் மீது சுமத்தப்பட்ட 20 குற்றங்களுக்கு, ஒவ்வொரு குற்றத்திற்கும் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை வீதம் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்க வேண்டுமெனவும் ஹூஸ்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குருஜி தற்பொழுது தலைமறைவாக உள்ளார். ட்ரிஃப் வுட்டில் குருஜி நிறுவிய ஆசிரமத்தில் 1990 களின் மத்தியில் தங்களை பலமுறை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாக இரண்டு பெண்கள் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.