07 மார்ச் 2011

அன்பு சகோதரர்களே அல்ஜீரியாவில் இஸ்லாமிய கட்சி தேர்தலில் மூலம் ஆட்சியை பிடித்த போது

சகோ .சாகுல் அமீத்  மின்னசல் இட்டது ............

அல்ஜீரியாவில் இஸ்லாமிய கட்சி தேர்தலில் மூலம் ஆட்சியை பிடித்த போது (ஜனநாயக கொள்கையின் மூலம் இஸ்லாம் எனும் கொள்கை நிலை பெற முடியாது என்பது வேறு விஷயம்) ஹிந்து தன் தலையங்கத்தில் இது இஹ்வானுல் முஸ்லீமின் தாக்கம் என்று எழுதப்பட்டிருந்தது. ஆம் உண்மை தான் கடந்த மற்றும் இந்நூற்றாண்டில் உலகின் எப்பகுதியில் ஏற்பட்ட தாக்கத்துக்கும் இரண்டு இயக்கங்களின் தாக்கங்கள் தான் காரணம். ஒன்று இஹ்வானுல் முஸ்லீமின் இரண்டாவது ஜமாத்தே இஸ்லாமி

இஹ்வான்கள் இஸ்லாத்திற்காக தங்களையே அர்ப்பணித்தவர்கள்

அல்லாஹ் எமது இறைவன், முஹம்மது எமது தூதர், திருகுரான் எமது சாசனம், போராட்டம் எமது பாதை, வீரமரணம் எமது வேட்கை எனும் முழக்கத்துடன் இறையாட்சிக்கு பாடுபட்ட ஹசன் அல் பன்னாவை சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஷஹீதாக்கினார்கள்.

ஏன் புத்தகங்களை எழுதுவதில்லை என்று ஒரு தடவை ஷஹீத் ஹசன் அல் பன்னாவிடம் கேட்ட போது அவர் சொன்னார் “ நான் மனிதர்களை எழுதுகிறேன். ” என்றார். ஆம் அவர் எழுதிய மனிதர்கள் ஏகாதிபத்தியங்கள் நடுங்கும் புத்தகங்களை எழுதியது மாத்திரமல்ல, மீண்டும் இவ்வுலகில் சத்திய சஹாபாக்களை நினைவுபடுத்தும் அளவு இஸ்லாத்திற்காக எதையும் தியாகம் செய்யவும் துணிந்தார்கள். நாசர் தன் ஆட்சி காலத்தில் 1954 ல் ஒட்டு மொத்த இஹ்வான்களையும் கூண்டோடு சிறை பிடித்தார் . சிறைச்சாலைகளில் கொடுமையோடு தேர்ச்சி பெற்ற வேட்டை நாய்களை விட்டு கடிக்க வைப்பார்கள். பல தடவை அவர்களின் தோல் புயங்கள், கால் உடைக்கப்பட்டு உள்ளங்கை கிழிக்கப்பட்டு குற்றுயிராக கிடப்பார்கள். இப்படிப்பட்ட சூழலில் தான் சையது குதுபை விடுவித்து கல்வி அமைச்சர் பதவி தருகிறோம், அதை மறுத்து விட்டு சொன்னார்கள் “என்னை இஸ்லாத்தின் எதிரிகள் என்ன செய்து விட முடியும்.
தனிமை சிறையில் அடைத்தால் அது இறைவனுடான உரையாடல், தூக்கிலிட்டால் அது ஷஹாதத், நாடு கடத்தினால் அது ஹிஜ்ரத்" என்று முழங்கினார்கள். தலைமை நீதிபதியாக இருந்த அப்துல் காதர் அவ்தா இஸ்லாத்துக்கு முரணான மனித சட்டத்தின் அடிப்படையில் நீதி வழங்குவதை தன் பதவியை ராஜினாமா செய்தார்கள். பெண் என்றும் பாராமல் ஜைனப் கஜ்ஜாலி சிறையில் சித்ரவதை செய்யப்பட்டார்கள்.

அத்துணை கொடுமைகளையும் சகித்து கொண்டு சிறையிலிருந்து தான் உலக புகழ் பெற்ற திருக்குரான் விளக்கவுரையான பீ லீலாலில் குரான் (திருக்குரானின் நிழலிலே) புத்தகத்தை சையது குதுப் எழுதினார்கள். ஜைனப் கஜ்ஜாலியின் “ என் வாழ்வின் மறவா நினைவுகளும்” உலகையையே உலுக்கிய குதுபின் “மைல் கற்கள்”உள்ளிட்ட புத்தகங்கள் வெளியாயின. உஸ்தாத் செய்யித் குதுப், யூஸுப் ஹவ்வாஷ், அப்துல் பத்தாஹ் இஸ்மாயில் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்த போது இஸ்மாயில் உரத்த குரலில் நீதிமன்றத்தில் முழங்கினார்கள் “ கபாவின் ரட்சகன் மீது ஆணையாக நான் வெற்றியடைந்து விட்டேன்”. இவை அனைத்தும் ”அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்டார்கள் என்பதற்காக தவிர வேறு எதற்காகவும் பழிவாங்கவில்லை.” என்று இறைவன் சூரத்துல் புரூஜில் குறிப்பிடும் படியே நடந்தது.

முதலில் இச்சலபுகள் இஸ்லாத்துக்கு முரணான மன்னராட்சியை எதிர்த்து பேசட்டும். ரசூல் (ஸல்) எவ்வாறு தொழுதார்கள், எத்துணை அங்குலம் தாடி வைத்திருந்தார்கள் என்பதில் காட்டும் அக்கறையை போல் ரசூல் சல் அவர்களின் அரசியலையும் பிரச்சாரம் செய்யட்டும்

shahul hameed

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக