ஐநாவின் சிறார்களுக்கான நிதியமான யுனிசெஃப் உலகளாவிய ரீதியில் சிறார்களின் நிலை குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
இலங்கை குறித்த யுனிசெஃப் அறிக்கையில், இலங்கையில் மொத்தமாக உள்ள 30 லட்சத்துக்கும் அதிகமான விடலைப் பருவத்தினருக்காக சுகாதாரம், கல்வி, குடிநீர் மற்றும் பொதுச்சுகாதார சேவை ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் அவர்களுக்கு நல்ல பலனைத் தரத்தொடங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால்,அனைத்து இலங்கைக்குமான இந்த தகவல்கள், அண்மையில் போரிலிருந்து விடுபட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு பொருந்தாது என இலங்கை மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் தலைவியும் மகளிர் விவகார அமைச்சின் மகளிர் ஆலோசனைக்குழுவின் உறுப்பினருமான சரோஜா சிவச்சந்திரன் கூறுகிறார்.
அடிப்படை வசதிகளுக்கான நிலைமைகள் வடக்கு கிழக்கில் போருக்குப் பின்னர் இன்னமும் முன்னேற்றம் அடையவில்லை என்றும் அவர் தமிழோசையிடம் குறிப்பிட்டார்.
அதேவேளை, இலங்கையை பொறுத்தவரை அங்கு வாழ்கின்ற பெரும்பாலான விடலைப்பருவப் பெண்கள், மனைவியை கணவன் அடிப்பது நியாயப்படுத்தப்படக் கூடியதே என்று கருதுவதாகவும் யுனிசெஃபின் அறிக்கை கூறியுள்ளது.
இது தெற்காசிய பெண்கள் மத்தியில் காணப்படுகின்ற ஒரு பழமைவாத கருத்து என்று கூறிய திருமதி சிவச்சந்திரன், அது ஒரு வீட்டுவன்முறை என்பது குறித்து பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.

செய்தி :-
BBC Tamil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக