கோவை: எட்டு கொலைகள் செய்த கைதியை தப்பவிட்டதால், நடவடிக்கைக்கு பயந்து, ஆயுதப்படை போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கன்னியம்பட்டியை சேர்ந்தவர் சங்கர் என்ற ஜெய்சங்கர்(33). இவர் மீது திருப்பூர், திருச்சி, நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களில் 8 கொலை உட்பட 16 வழக்குகள் உள்ளன.
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெய்சங்கரை, வழக்குகள் தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, கடந்த 14ம் தேதி கோவை ஆயுதப்படை போலீஸ்காரர்கள் சின்னசாமி(25), ராஜவேல் ஆகியோர் அழைத்து சென்றனர். திருச்சி, நாமக்கல், தர்மபுரி கோர்ட்டுகளில் ஜெய்சங்கரை ஆஜர்படுத்திவிட்டு, நேற்று முன்தினம் இரவு சேலம் பஸ் ஸ்டாண்ட் வந்தனர். கோவை செல்ல பஸ்சுக்காக காத்திருந்தனர்.
அப்போது ஜெய்சங்கர், ‘ஊர் ஊராக சாதா பஸ்சில் சென்றதால் உடம்பு வலிக்கிறது. அல்ட்ரா டீலக்ஸ் பஸ் இருந்தால் பாருங்கள்‘ என கூறியுள்ளார். ராஜவேல் அல்ட்ரா டீலக்ஸ் பஸ்சை பார்க்க சென்றுள்ளார். சின்னசாமியுடன் பேசிக்கொண்டிருந்த ஜெய்சங்கர், திடீரென அவரது கவனத்தை திசை திருப்பி தப்பிவிட்டான்.
அதிர்ச்சி அடைந்த சின்னசாமி, இதுபற்றி ராஜவேலுவிடம் தெரிவித்தார். இது குறித்து போலீசில் புகார் செய்யவில்லை. இருவரும் நேற்று அதிகாலை கோவை வந்தனர். இவர்கள் தங்கி இருக்கும் கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்துக்கு சென்றனர். கைதி தப்பியதால் சஸ்பெண்ட் செய்து விடுவார்களே என புலம்பியபடி சின்னசாமி வந்துள்ளார்.
பாப்பநாயக்கன்பாளையம் பாரதியார் ரோட்டில், போலீஸ் பயிற்சி பள்ளியின் பின்புற கேட் அருகே வந்தபோது, திடீரென சின்னசாமி தான் வைத்திருந்த துப்பாக்கியை தொண்டையில் வைத்து சுட்டுக் கொண்டார். இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்துவிழுந்து இறந்தார்.
தகவல் அறிந்து ஆர்டிஓ முகமது மீரான், போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தற்கொலை செய்து கொண்ட சின்னசாமியின் சொந்த ஊர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள இருமத்தூர்.
இன்னும் திருமணம் ஆகவில்லை. பி.ஏ. படித்தவர். தப்பிய கைதி ஜெய்சங்கரை பிடிக்க மாநிலம் முழுவதும் போலீசார் வலை விரித்துள்ளனர்.

செய்தி :- தினகரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக