20 மார்ச் 2011

கதிர்வீச்சை தடுக்க அணு உலைகளை புதைக்க திட்டம்

டோக்கியோ: ஜப்பானில் அணுஉலைகளில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சை தடுக்க திணறி வரும் ஜப்பான், அது முடியாமல் போனால் இறுதி நடவடிக்கையாக, கான்கிரீட் கலவைகளை பூசி அணு உலைகளை மண்ணில் புதைக்க திட்டமிட்டுள்ளது.
ஜப்பானில் கடந்த 11ம் தேதி ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமியால் மியாகி மாநிலம், பியூகுஷிமா டைச்சி அணுஉலைகளில் ரியாக்டர்களை குளிர்விக்கும் முறைகள் அடுத்தடுத்து செயல்ப டாமல் போயின. அதனால் வெப்பம் அதிகரித்து 3 அணுஉலைகள் வெடித்துச் சிதறின. 4வது அணுஉலை தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்துகளால் அணுஉலையில் உள்ள யுரேனியம் மற்றும் புளுடோனியம் எரிபொருள்களிலிருந்து கதிர்வீச்சுகள் வெளியேறின. அணுஉலைகளை குளிர்விக்க ஜப்பான் விஞ்ஞானிகள் எடுத்த முயற்சிகள் இதுவரை பயனளிக்கவில்லை.
அதனால், உக்ரைனின் செர்னோபில் அணுஉலை துயரம் நடந்ததுபோல பியூகுஷிமா அணுஉலைகளும் ஜப்பானியர்கள் அதிகளவில் பலியாக காரணமாகி விடுமோ என்ற அச்சம் நிலவு கிறது.
கதிர்வீச்சை தடுக்க முடியாத நிலையில், கான்கிரீட் கலவை மூலம் அணுஉலைகள் மண்ணில் புதைக்க முடிவு செய்யப்பட்டு ள்ளது.

செய்தி :- தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக