அகர்தாலா : திரிபுரா மாநிலத்தில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மற்றொரு ஆயுதப்படை வீரர், போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திரிபுரா மாநிலம், கோவாய் பகுதியில் உள்ள நந்தர்மம்பரா கிராமத்தைச் சேர்ந்த, அரசியல் கட்சி தொண்டர் ஒருவரின் 15 வயது மகள் கடந்த புதன் கிழமை, பக்கத்து ஊரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தாள். அப்போது, திரிபுரா மாநில ஆயுதப்படை வீரர் ஒருவர், அந்த சிறுமியை வழிமறித்து, காட்டுப்பகுதிக்கு இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து, அந்த சிறுமி, தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஆந்திரமடைந்த உறவினர்களும், கிராமத்தினரும், நந்தர்மம்பா கிராமத்தில் உள்ள ஆயுதப்படை முகாமை முற்றுகையிட்டனர். ஆனால், ஆயுதப்படை வீரர்கள், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, கிராமத்தினரை விரட்டியுள்ளனர். இதுகுறித்து, உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், விசாரணை நடத்தி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆறாவது பட்டாலியனைச் சேர்ந்த தேஜேந்திர பரூய் என்ற வீரரை கைது செய்தனர். அவர் மீது பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த 18 ம் தேதி, கோவாய் பகுதியில் உள்ள அய்தான்குர் என்ற கிராமத்தைச் சேர்ந்த நிலிமா தெப்பர்மா என்ற பெண், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, திரிபுரா ஆயுதப்படை ஆறாவது பட்டாலியனைச் சேர்ந்த ஆனந்தஹரி ஜமாதியா, நாராயண்கோஷ், தீபக் தெப்பர்மா ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி நன்றி:-
dinamalar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக