01 மார்ச் 2011

கேரளா: தமிழக சிறுமி நாய் கூண்டில் அடைத்து சித்ரவதை செய்ததில் பலி-4 பேர் கைது

திருவனந்தபுரம்: கேரளாவில் வீட்டு வேலை செய்து வந்த தமிழக சிறுமியை நாய் கூண்டில் அடைத்து சித்ரவதை செய்துள்ளனர். சித்ரவதை தாங்கமுடியாத சிறுமி இறுதியில் பரிதாபமாக இறந்தாள்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா அசோகபுரத்தைச் சேர்ந்தவர் வக்கீல் ஜோஸ் குரியன். இவரது மனைவி சிந்து. இவர்கள் வீட்டில் கடலூர் அன்பு மணி நகரைச் சேர்ந்த செல்லையா-அஞ்சலை தம்பதியினரின் மகள் தனலெட்சுமி வீட்டு வேலை செய்து வந்தாள். இந்த சிறுமி கடந்த 24-ம் தேதி உடல் முழுவதும் வெட்டு காயம் மற்றும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அங்கு சிகி்ச்சை பலனின்றி இறந்தாள். இதையடுத்து ஜோஸ் குரியன், சிந்து, சிறுமியின் மாமா நாகப்பன், சிறுமியை ரூ. 15 ஆயிரத்துக்கு வாங்கி கொடுத்த ஷைலா ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

செய்தி நன்றி:-
Thatstamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக