28 பிப்ரவரி 2011

அமெரிக்க ராணுவ நடவடிக்கைக்கு எதிராக ராபர்ட் கேட்ஸ்

வாஷிங்டன்,பிப்.28:பல்வேறு நாடுகளில் ராணுவ தளங்களை விரிவுப்படுத்திவரும் அமெரிக்காவின் நடவடிக்கையை அந்நாடு பாதுகாப்புத்துறை செயலாளர் ராபர்ட் கேட்ஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தனக்கு பின்னால் இப்பதவிக்கு வருபவர்கள் அமெரிக்காவின் ராணுவ பலத்தை அதிகரிப்பதற்கு சிபாரிசுச் செய்தால் அவருடையை தலையை பரிசோதிக்க வேண்டும் என ராபர்ட் கேட்ஸ் கிண்டலாக தெரிவித்துள்ளார்.

ஈராக், ஆப்கானிஸ்தான் போர்கள் அமெரிக்காவின் நலனுக்கு உகந்ததல்ல எனக்கூறிய ராபர்ட் கேட்ஸ் மேற்காசியா, வடக்கு ஆப்பிரிக்கா, ஆசியா ஆகிய பகுதிகளுக்கு அமெரிக்க ராணுவத்தை அனுப்புவதில் தனக்கு விருப்பமில்லை என தெரிவித்துள்ளார்.

செய்தி:மாத்யமம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக