12 பிப்ரவரி 2011

அழிந்து வரும் கழுகுகள்.... அதிர்ச்சி தகவல்கள்

கோவை : தமிழகத்தில் கோவை, நீலகிரி, சத்தி, திருநெல்வேலி, திண்டுக்கல், ஸ்ரீவில்லிபுத்தூர், சேலம் சேர்வராயன் மலை, கேரளாவில் இடுக்கி, திருவனந்தபுரம், கண்ணூர், வயநாடு, அட்டப்பாடி பகுதிகளில் கழுகு குறித்த ஆராய்ச்சி நடந்தது. தமிழகம், கேரளத்தில் 1993ம் ஆண்டு ஒரு சதுர கி.மீ பர ப்பில் 100 கழுகுகள் வரை வாழ்ந்து வந்தன. தற்போது 60க்கும் குறைவான கழுகுகளே இருக்கின்றன.

கழுகுகளின் இனம் அழிந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பிணந்தின்னி, செந்தலை, கோடாங்கி உட்பட 4 வகை கழுகுகள் காணப்பட்டன. இறந்த விலங்குகளை சாப்பிட்டு நோய் பரவாமல் தடுத்து, சூழலுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தி வந்தன. கூட்டமாக இருந்த கழுகு இனம் ஒட்டு மொத் தமாக அழிய போடப்பட்ட வலி நிவாரண மருத்து முக்கிய காரணம்.

வலி நிவாரணமாக மருந்து போடப்பட்ட கால்நடைகள் இறந்துவிட்டால், அதை சாப்பிடும் கழுகுகள் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இறந்தன. மத்திய அரசு மருந்துக்கு 2006ம் ஆண்டு தடை விதித்தது. மாற்று மருந்தாக மெலாக்சிகம் மருந்து பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் தடை செய்யப்பட்ட மருந்து பயன்பாட்டில் இருக்கிறது.

இறந்த கால்நடைகளை காக்கை, பருந்து போன்றவையும் சாப்பிடுகின்றன. ஆனால், கழுகு இனம் இற ந்த கால்நடைகளை முழு உணவாக எடுக்கின்றன. காக்கைகளும் அதிகளவு இறந்துள்ளன. பெரும் பாதிப்பை சந்தித்தது கழுகு இனம் மட்டுமே. தற்போது கழுகுகளை விட, பருந்துகள் மட்டுமே ஆங்காங்கே தென்படுகின்றன.கழுகுகளை காக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக