இன்று சந்தையில் புகழ்பெற்றுள்ள ஐ போன் என்கின்ற புதிய கைத்தொலைபேசி வடிவமைப்பில், மற்றுமொரு வசதியாக அந்த நிறுவனம் புதிதாக ஒரு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன் மூலம் கத்தோலிக்கர்கள் தமது பாவங்களை ஒப்புக்கொண்டு மன்னிப்புக்கோரும் சம்பிரதாயத்தை முன்னெடுக்க தொழிநுட்பத்தின் உதவியுடன் வழி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இந்த புதிய தொழிநுட்பம், ஒருபோதும் பாதிரியார் ஒருவரிடம் நேரடியாக சென்று பாவமன்னிப்பு பெறும் நடைமுறைக்கு ஈடாக அமைந்துவிட முடியாது என போப் ஆண்டவர் உத்தியோகபூரவ பேச்சாளர் அருட்தந்தை ஃபெட்ரிகோ லொம்பார்டி எச்சரித்துள்ளார்.
பாவமன்னிப்பு என்ற இந்த கத்தோலிக்க நடைமுறையை டிஜிடல் தொழில்நுட்பத்தின் மூலம் செய்யக்கூடியதாக் மாற்றுவது குறித்து கத்தோலிக்க உலகிலேயே கருத்து வேறுபாடுகள் இருப்பது தெரிகிறது. அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் கத்தோலிக்க குருமார்கள் இதை அங்கீகரித்திருந்தாலும், வத்திகான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற தொழில் நுட்பத்தில் முன்னேறிய சமூகங்களில் இது ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும், இந்தியா போன்ற சமூகங்களில் இதை ஏற்றுக் கொள்வதில் தயக்கங்கள் இருக்கும் என்று அகில இந்திய கத்தோலிக்க பல்கலைக்கழக அமைப்பின் முன்னாள் தேசிய ஆலோசகர் அருட்தந்தை ஹென்றி ஜெரோம் கூறுகிறார்.
ஹென்றி ஜெரோம் பேட்டி
பாதிரியாரோடு நேரடியாக பேசி, ஒப்புரவு அருட்சாதனம் என்று கூறப்படும் பாவமன்னிப்பைப் பெறுதல் என்பதற்கு ஒரு மாற்றாக இந்த தொழில் நுட்பம் இருக்க முடியாது என்று அவர் கூறுகிறார்.
ஆனாலும், தொழில்நுட்பம், வாழ்க்கை முறையை மாற்றிவரும் இந்தக் காலகட்டத்தில், இது போன்ற நடைமுறைகள் ஓரளவு தவிர்க்க முடியாதவை என்று ஒப்புக்கொண்ட ஹென்றி ஜெரோம், ஆனால் பாவமன்னிப்பு பெறவேண்டியவர், தனது முழு அகமன சுதந்திரத்தோடு தனது குற்றங்களைச் சொல்லக்கூடிய அளவுக்கு, இந்த தொழில்நுட்பம் வாய்ப்புகளை தருமானால், ஒருவேளை ஆறுதல் தருமளவுக்கு இந்த நடைமுறை இருக்கலாம் என்றார்.
செய்தி நன்றி:-bbctamil

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக