12 பிப்ரவரி 2011

யாஸின் மாலிக் மீது செருப்பை வீசிய பா.ஜ.க குண்டர்கள்

அஜ்மீர்: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீருக்கு ஜே.கே.எல்.எப் தலைவர் யாசின் மாலிக் 2 நாட்களுக்கு முன்பு வந்தார். கஞ்ச் பகுதியில் உள்ள ஓட்டலில் தங்கியுள்ளார். இதை அறிந்த பா.ஜ தொண்டர்கள் நேற்று ஓட்டல் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 3வது மாடி பால்கனியில் நின்றிருந்த யாசின் மாலிக் மீது பா.ஜ.வினர் ஷூ வீசினர். அது வேறு இடத்தில் போய் விழுந்தது.

பின்னர் யாசின் மாலிக் காஷ்மீருக்கு திரும்பி போக வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த பா.ஜ எம்.எல்.ஏ வாசுதேவ் கூறுகையில், ‘‘யாசின் மாலிக் போன்ற சமூக விரோத சக்தி, புனித நகரமான அஜ்மீருக்கு வருவதை ஏற்க முடியாது. காஷ்மீரில் பா.ஜ தொண்டர்கள் தேசிய கொடியேற்ற எதிர்ப்பு தெரிவித்த சமூகவிரோத நபர், சுதந்திரமாக உலா வருவதை எதிர்க்கிறோம்’’ என்றார்.
செய்தி நன்றி:-
Thatstamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக