06 ஜனவரி 2011

அறிவியல் கதை படங்களில் மிகவும் மோசம் '2012'




புளோரிடா: இதுவரை எடுக்கப்பட்ட அறிவியல் கதை படங்களில் மிகவும் மோசமான படம் '2012' என நாசா விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த 2009ம் ஆண்டு வெளியான அறிவியல் கதை படம் 'டுவென்ட்டி டுவெல்வ் (2012). இதை டைரக்ட் செய்து இயக்கியவர் ரோலண்ட் எமிரிச். ஜான் குசாக், அமந்தா பீட் உட்பட பல ஹாலிவுட் பிரபலங்கள் இதில் நடித்தனர். 2012ம் ஆண்டில் ஏற்படும் இயற்கை சீற்றங்களை சித்தரிக்கும் படமாக இது வெளிவந்தது.

புவியின் மையப்பகுதி சூடாகி எரிமலை சீறுவது, பூகம்பம் ஏற்படுவது போன்றவற்றுக்கு சூரியனின் ஒளிப்பிழம்புகளில் வெளியாகும் நியூட்ரினாஸ்தான் காரணம் என்பது போல் சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்த படம் பற்றி நாசா விஞ்ஞானிகளும், அறிவியல் பொழுது போக்கு நிகழ்ச்சி அமைப்பாளர்களும் கலிபோர்னியாவில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தி விவாதித்தனர்.

அப்போது
பேசிய நாசா விஞ்ஞானிகள், "சூரியனிலிருந்து வெளிப்படும் நியூட்ரினோவுக்கும் பூமியின் மையப்பகுதியின் வெப்பம் அதிகரிப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை’’ என்றனர். விண்கற்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானி டொனால்டு யோமென்ஸ் கூறுகையில், " இந்த படத்தின் கருத்து அபத்தமானது" என்றார். ‘2012’ என்ற படம் மிகவும் மோசம் என்று விஞ்ஞானிகள் கருத்து கூறினாலும், அந்தப் படம் வசூலில் 769 மில்லியன் டாலர் (ரூ.3,500 கோடி) குவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக