06 ஜனவரி 2011
பா.ஜ.வுக்கு உமர் எச்சரிக்கை
ஜம்மு : குடியரசு தினத்தன்று ஸ்ரீநகரில் தேசியக் கொடி ஏற்றக் கூடாது என்று பா.ஜ.வுக்கு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு, ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக் மைதானத்தில் தேசியக் கொடி ஏற்றுவோம் என்று பா.ஜ. இளைஞர் அணியினர் அறிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சிக்கு ‘காஷ்மீர் சலோ’ என்று பெயரிட்டு ஊர்வலமாக செல்லவும் முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து ஜம்முவில் முதல்வர் உமர் அப்துல்லா நேற்று கூறுகையில்,
‘குடியரசு தினத்தன்று அரசு சார்பில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. மாவட்ட தலைநகரங்கள், பாதுகாப்பு முகாம்கள் போன்ற இடங்களிலும் கொடி ஏற்றப்படுகிறது. பா.ஜ. சார்பில் தேசிய கொடி ஏற்ற வேண்டிய அவசியம் என்ன? பாதுகாப்பு படையினருக்கு எதிராக ஸ்ரீநகரில் நடந்த கலவரங்கள் சமீபத்தில்தான் ஓய்ந்துள்ளன. மீண்டும் கலவரம் ஏற்பட வேண்டுமென பா.ஜ. விரும்புகிறதா? ஸ்ரீநகரில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சியை பா.ஜ. கைவிட வேண்டும். மீறி தேசிய கொடி ஏற்றினால் ஏற்படும் விளைவுகளுக்கு பா.ஜ.தான் பொறுப்பு’’ என்றார்.
லேபிள்கள்:
இந்தியா,
பொது,
ஹிந்துத்துவா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக