06 ஜனவரி 2011

ஜப்பானில் நாய் பூனைக்கு வரி


பூனை வைத்திருந்தாலும் வரி


ஜப்பானில் மனிதர்களின் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே இருக்கிறது, ஆனால் செல்லப் பிராணிகளின் விகிதம் பெருகி கொண்டே உள்ளது.

பெருகி போன செல்லப் பிராணிகள் ரோடுகளில் அல்லாடுவதும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான செல்லப் பிராணிகள் கைவிடப்படுகின்றன.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்துடன் செல்லப் பிராணிகள் வைத்திப்பவர்கள் அதற்கென்று வரியை கட்ட வேண்டும் என்ற புதிய திட்டம் ஒன்றை ஜப்பான் அதிகாரிகள் கொண்டு வருகின்றனர்.

ஆனால் இந்த திட்டத்திற்கு வரவேற்பு மற்றும் எதிர்ப்பு என்று இரண்டுமே உள்ளது.

ஜப்பானில் செல்லப்பிராணிகளுக்கு வரி விதிக்கும் திட்டம் அமலுக்கு வந்தால், ஜப்பானில் வாடகைக்கு எடுக்கப்படும் நாய்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எண்ணப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக