19 செப்டம்பர் 2011

மோடிக்கு எதிராக போராட்டம் - மல்லிகா சாராபாய் கைது

நரேந்திரமோடியின் உண்ணாவிரதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, குஜராத் கலவரத்தின்போது அதிகம் பாதிப்புக்கு உள்ளான நரோடா பகுதியில் ஞாயிற்றுக் கிழமையன்று சில அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்த முயன்றனர். இந்த போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், தடையை மீறி அங்கு செல்ல முயன்ற சமூக ஆர்வலர் மல்லிகா சாராபாய் உள்ளிட்ட 25 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

"2002ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்துக்கு தார்மீக பொறுப்பு ஏற்றுக்கொள்கிறீர்களா?" என்று உண்ணாவிரதம் இருந்த நரேந்திர மோடியிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு கோபத்துடன் பதில் அளித்த நரேந்திரமோடி, "ஏற்கனவே இது குறித்து நான் விளக்கமாக கூறிவிட்டேன். அது உண்மை என்பதால் நீங்கள் வசதியாக மறந்துவிட்டீர்கள். நீங்கள் (ஊடகங்கள்) பொய்யை மட்டும் விரும்பினால், அதை எவ்வளவு நீளத்துக்கு சொல்ல முடியுமோ, அப்படி சொல்லிக்கொள்ளுங்கள்'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக