05 ஜூலை 2011

மயிலாடுதுறையில் பரபரப்புPDFPrintE-mail

மயிலாடுதுறை சம்பவத்தை பற்றி நாளேடுகள் வெளியிட்டுள்ள செய்திகள் உங்கள் பார்வைக்கு ....

பத்திரிகைகளை தனியாக பார்க்க மட்டும் டவுன்லோட் செய்ய தமிழக அரசியல் தினமலர் தினமணி தினகரன்மாலைமுரசு

மேலும் உண்மை விபரம் அரிய Read More சுட்டியை சொடுக்குக »

விபசாரத்தை தட்டிகேட்ட இஸ்லாமிய இளைஞர்கள் கைது

நீடூர்-நெய்வாசலைச் சார்ந்த அப்துல் ரவூப் மயிலாடுதுறையில் மன்சூர் கைலி சென்டர் என்கிற ஜவுளி நிறுவனத்தை நடத்தி வருகிறார். தனது இளம் வயது முதல் சமுதாய பணிகளில் தன்னை அர்ப்பணித்து வரும் அப்துல் ரவூப் சமீபகாலமாக நமது சமுதாயத்தில் பெருகிவரும் விபச்சாரத்தை தடுத்து நிறுத்தும் முகமாக சமூக இளவல்களின் துணையோடு மயிலாடுதுறை சுற்று வட்டாரத்தில் இத்தொழிலில் ஈடுபடும் பல பெண்களை கண்டித்து திருத்தி அனுப்புவது வழக்கம். மயிலாடுதுறை சுற்று வட்டாரத்தில் ஓர் ஊரில் 4 முஸ்லிம் பெண்கள் ஒரு வீட்டில் விபச்சாரம் செய்வதாக கேள்விப்பட்டு அவ்விடத்திற்கு சென்று பலமுறை கண்டித்திருக்கிறார். இவரது கண்டிப்புகளை சற்றும் ஏற்றுக் கொள்ளாத விபச்சாரக் கும்பல் அப்துல் ரவூப் மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறது. இந்த புகாரின் அடிப்படையில் நள்ளிரவில் ரவூப் கடையின் பூட்டுகளை உடைத்து உள்ளே நுழைய எத்தனித்த காவல் துறை சமுதாய இயக்கத்தினரால் கண்டிக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது.

இந்நிகழ்வைப் பயன்படுத்தி சற்றும் சம்மந்தமில்லாத மயிலாடுதுறை பழவியாபாரிகளில் BJP-RSS ஐச் சார்ந்தவர்கள் 100 பேர் கூடி முஸ்லிம்களுக்கு எதிராக (துலுக்கர்கள் ஒழிக! என்று)கோஷமிட்டு தாக்குதல் நடத்த முற்பட்டார்கள். அத்தாக்குதலில் ஒரு முஸ்லிம் பெரியவர் தாக்கப்பட்டு அரசு பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார்.

அப்துல் ரவூப் மீது 4 பிரிவுகளில் பொய் வழக்கு தொடர்ந்த காவல் துறை அவரை திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு அழைத்து சென்றுக் கொண்டிருக்கிறது. அப்துல் ரவூபுடன் 6 முஸ்லிம் சகோதரர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

மயிலாடுதுறையில் கைது செய்யப்பட்ட அப்துல்ரவூபை காண முயன்ற 7

வக்கீல்களுக்கும் எளிதில் அனுமதி கிடைக்கவில்லை. மனித உரிமை கமிஷ்ன் தலையிட்டதும்தான் சந்திக்க முடிந்தது.

அப்துல் ரவூபை காவல்துறை கயவாளிகள் அடித்திருக்கிறார்கள். அதற்கான ஆதாரமான காயம் நீதிபதியிடம் உடனடியாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

இதற்கிடையில் மயிலாடுதுறை சுற்றுவட்டாரத்தில் உள்ள த.மு.மு.க, T.N.T.J, வட்டார ஜமாஅத் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து இஸ்லாமிய இயக்கங்களைச் சார்ந்த இளைஞர்கள், தலைவர்கள் சுமார் 500 பேர் இன்று(01-07-2011) ஜும்ஆவிற்குப்பின் மயிலாடுதுறையில் கூடி சாலைமறியலில் ஈடுபட்ட போது காவல் துறை சமாதானத்திற்கு வந்தது.

  1. முஸ்லிம் பெரியவரைத் தாக்கிய ஆர்.எஸ்.எஸ் காலிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.
  2. காலிகளுக்கு ஆதரவாகவும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் செயல்பட்ட மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உடனடியாக பணி இடை நீக்கம் செய்யப்பட வேண்டும்.
  3. கைது செய்யப்பட்ட அப்துல்ரவூப் மற்றும் ஏனைய முஸ்லிம் சகோதரர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

இக்கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மயிலாடுதுறை சுற்றுவட்டார ஜமாஅத்கள் அனைத்தையும் ஒன்று கூட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்று அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் சார்பில் எச்சரிக்கப்பட்டது.

இயக்கங்களின் சார்பில் வைக்கப் பட்ட கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை உயர் அதிகாரிகள் உறுதியளித்துள்ளார்கள்.

அப்துல் ரவூப் மீது பல்வேறு அவதூறுகளைப் பரப்பும் வேலையில் காவல்துறையில் சிலரும், அப்துல் ரவூப் கடையை சுற்றிலும் உள்ள தள்ளுவண்டி பழ வியாபாரிகளும் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு பின்னணியில் மயிலாடுதுறையில் முஸ்லிம்களின் பேராதரவுடன் நடத்தப்படும் ஜுவல்லரி உரிமையாளரும் இருப்பதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகவல் ஊர்ஜிதமானால் சம்மந்தப்பட்ட ஜுவல்லரியை பகிஷ்கரிக்கும் முடிவை ஜமாஅத்கள் உடனடியாக எடுக்க வேண்டும் .

நன்றி - நீடூர் ஆன்லைன்

http://niduronline.com/?p=4517#more-4517

நன்றி: http://www.kiliyanur.net/index.php?option=com_content&view=article&id=125:admin&catid=27:kiliyanur-news&Itemid=28


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக