03 ஏப்ரல் 2011

நிர்வாணமாக ஓடுவதாக கூறிய மாடல் அழகி மீது போலீசார் வழக்கு

மும்பை: நிர்வாணமாக ஓடப் போவதாக அறிவித்த மாடல் அழகி பூனம் பாண்டே மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2 நாட்களாக இன்டர்நெட்டில் அதிகம் தேடப்படும் நபராக மாடல் அழகி பூனம் பாண்டே உள்ளார். காரணம், அவர் விடுத்த பரபரப்பு அறிவிப்பு. ‘இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன்‘ என அவர் அறிவித்து இருந்தார். இது பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் செய்தியாக வெளியானது. இந்த செய்தியின் அடிப்ப டையில் தானாக முன்வந்து நடவடிக்கை எடுத்த தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுபாஷ் சந்திரா, பூனம் பாண்டே மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை நடத்தும்படி போலீ சுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, பூனம் மீது பல்ராம்பூர் தேஹத் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக