புதுடெல்லி:அஸிமானந்தா வாக்குமூலத்தை மாற்றினாலும், குண்டுவெடிப்பு வழக்குகளில் ஹிந்துத்துவாவின் பங்கினை நீதிமன்றத்தில் நிரூபிக்க இயலும் என தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) தெரிவித்துள்ளது.சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கு அஸிமானாந்தாவின் வாக்குமூலத்தையும் தாண்டி முன்னேற்றமடைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அளித்த அறிக்கையில் என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.
சிறையிலடைக்கப்பட்டுள்ள தயானந்த் பாண்டே, கர்னல் புரோகித்திடம் வெடிப்பொருட்களை கோரிய தொலைபேசி உரையாடல்களின் பதிவுகள் என்.ஐ.ஏவுக்கு கிடைத்துள்ளது.ராம்ஜி கல்சங்கராவுக்கும், சந்தீப் டாங்கேவுக்கும் குண்டுவெடிப்பிற்கு தேவையான ஆர்.டி.எக்ஸை அளிக்க தொலைபேசி மூலமாக பாண்டே புரோகித்திடம் கூறியிருந்தார்.புரோகித் அளித்த வெடிப்பொருட்களை பயன்படுத்தி ஹிந்துத்துவா தீவிரவாதிகள் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் குண்டுவைத்து 48 பாகிஸ்தானியர்கள் உள்பட 68 பேரை கொலைச்செய்தனர்.இதே கும்பல்தான் அஜ்மீர், மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புகளையும் நடத்தியதற்கு ஆதாரம் உள்ளதாக என்.ஐ.ஏவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பிற்கு பயன்படுத்திய வெடிக்குண்டு, பி.என்.டி.என், டி.என்.டி, ஆர்.டி.எக்ஸ், ஸல்ஃபர், பொட்டாஸியம் க்ளோரேட், நைட்ரேட் ஆகியவற்றின் சேர்மானங்களை உபயோகித்து தயாரிக்கப்பட்டு இருந்தது. கர்னல் புரோகித் இந்த வெடிப்பொருட்களை அளித்ததற்கான ஆதாரங்களை 2008 ஆம் ஆண்டு மஹாராஷ்ட்ரா ஏ.டி.எஸ் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது. குண்டுவெடிப்பு நடந்த இடங்களிலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஜார்கண்டில் பத்திரிகை தாள், இரும்பு பைப், வெடிப்பொருட்களின் சேர்மானங்கள் ஆகியவையெல்லாம் ஒரே போன்றதாகும்.ஆதலால் அஜ்மீர், மக்கா மஸ்ஜித், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புகளுக்கு பின்னணியிலும் ஒரே கும்பல்தான் செயல்பட்டுள்ளது என்பது நிரூபணமாகிறது.கல்சங்கரா மற்றும் டாங்கே ஆகியோரை கைதுச்செய்து விசாரணை நடத்துவது அத்தியாவசியமானது என என்.ஐ.ஏ அறிக்கையில் கூறுகிறது.
இருவரையும் குறித்து துப்புக்கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு என என்.ஐ.ஏ அறிவித்துள்ளது.கர்னல் புரோகித், சன்னியாசினி பிரக்யாசிங் தாக்கூர், சுனில் ஜோஷி, கல்சங்கரா, சுவாமி தயானந்த் பாண்டே, டாங்கே ஆகியோருக்கு சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் பங்குள்ளது குறித்து தெளிவான ஆதாரங்கள் உள்ளன.சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் பங்கினை ஹரியானா போலீஸ் உறுதிச்செய்துள்ளது.2010 முதல் ஹரியானா போலீஸ் இவ்வழக்கை விசாரித்து வந்தது.சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பை நடத்துவதற்கு தேவையான பொருட்களை வாங்கிய இந்தூரில் ஏழு கடைகளையும் என்.ஐ.ஏ கண்டறிந்துள்ளது.சூட்கேஸ், ப்ளாஸ்டிக் பாட்டில், வாட்ச், இரும்பு பைப், சர்க்யூட் போர்டு, குண்டுவெடிப்பிற்கு உபயோகித்த ஆறு வோல்ட் பாட்டரி ஆகியவை இக்கடைகளிலிருந்து வாங்கப்பட்டுள்ளன.
குண்டுவெடிப்புகளுக்கு பின்னணியில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் செயல்பட்டதாக சுவாமி அஸிமானந்தா வாக்குமூலம் அளித்து கடந்த டிசம்பர் மாதமாகும்.சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பின் பின்னணியில் சங்க்பரிவார தலைவர் சுனில் ஜோஷி என அஸிமானந்தா தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.

நன்றி (செய்தி ) :- தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக