உலகக் கோப்பைப் போட்டியில் அரை இறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அளித்த பேட்டியில், இந்தியர்களுக்கு குறுகிய மனசு என்று கூறி விமர்சித்திருந்தார் அப்ரிதி. இந்திய
மீடியாக்களையும் கடுமையாக அவர் விமர்சித்திருந்தார்.
ஆனால் தான் அப்படி கூறவில்லை என்று இப்போது மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், மீடியாக்கள் சிறிய விஷயங்களைக் கூட பெரிதாக்கி விடுகிறார்கள். இது வெட்கமாக உள்ளது. இந்திய, பாகிஸ்தான் உறவு மேம்பட வேண்டும் என்றுதான் நான் தொடர்ந்து விரும்பி வருகிறேன். சில நேரங்களில் அதுகுறித்துக் கூறும்போது ஏதாவது வேறு அர்த்தம் எடுத்துக் கொள்கிறார்கள். அப்படித்தான் இப்போது நான் பேசியதையும் தவறாக கூறி வி்ட்டனர்.
இந்தியாவில் விளையாடியது எனக்கு நல்ல அனுபவமாக இருந்தது. இந்தியர்களை நான் நேசிக்கிறேன். எனது கருத்துக்களை எதிர்மறையாக பார்க்காதீர்கள். இந்திய ரசிகர்களிடமிருந்து எனக்கு எப்போதும் ஆதரவு இருந்து வருகிறது. எனவே இதுபோன்ற சிறிய விஷயங்களைப் பெரிதாக்கி இரு நாட்டு மக்களிடையே துவேஷத்தை வளர்த்து விட மீடியாக்கள் காரணமாக அமைந்து விடக் கூடாது.
நன்றி (செய்தி ) :-தட்ஸ்தமிழ் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக