02 ஏப்ரல் 2011

இந்தியாவும்,சீனாவும் கச்சா எண்ணெய் உபயோகத்தை குறைக்க வேண்டும் – ஒபாமா

வாஷிங்டன்:வளர்ந்துவரும் பொருளாதார சக்திகள் என்ற நிலையில் இந்தியாவும், சீனாவும் மிக அதிகமாக கச்சாய் எண்ணையை உபயோகிக்கின்றன.இதனை எவ்வாறேனும் குறைக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கோரிக்கை விடுத்துள்ளார்.

வெளிநாட்டிலிருந்து எண்ணெய் உபயோகம் அமெரிக்கா 2025 ஆம் ஆண்டில் நான்கில் ஒரு பகுதியாக குறைக்கும் என ஒபாமா தெரிவித்தார்.

கச்சா எண்ணெய் உபயோகம் அதிகரிப்பதால் பெட்ரோலியம், சமையல் வாயு ஆகியவற்றின் விலையை அதிகரிக்க வேண்டிய சூழல் இந்தியாவுக்கும், சீனாவுக்கு ஏற்படுவதாக அவர் தெரிவித்தார்.

ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே உரைநிகழ்த்தும் பொழுது அவர் இதனை தெரிவித்தார்.

நன்றி (செய்தி ) :- தூது ஆன்லைன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக