14 ஏப்ரல் 2011

முகலாயர் கால நினைவுச் சின்னத்தை பாதுகாக்க ஜெர்மனி ரூ.96 லட்சம் உதவி

புதுடெல்லி:முகலாயர் கால நினைவுச் சின்னமான சவ்ஸத் காம்பாவின் பாதுகாப்பிற்கும் நவீனப்படுத்துவதற்கும் ஜெர்மனி ரூ.96 லட்சம் உதவியாக வழங்குகிறது.

சவ்ஸத் காம்பாவின் ஆகா கான் கலாச்சார அறக்கட்டளையுடன் இந்தியாவின் ஜெர்மன் தூதர் தாமஸ் மடுஸெக் இதுத்தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

மொகலாய மன்னர் அக்பரின் வளர்ப்பு சகோதரரான மிர்ஸா அஸீஸ் கொகல்தாஷின் கல்லறைதான் சவ்ஸத் காம்பா. கி.பி.1623-24 காலக்கட்டத்தில் இது நிர்மாணிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக