14 மார்ச் 2011

அழிந்தது சென்டாய் நகரம்

டோக்கியோ : வரலாறு காணாத பயங்கர பூகம்பத்தால் ஜப்பானில் சென்டாய் நகரம் தான் முற்றிலும் பாதிக்கப்பட்டது. ஜப்பானின் துறைமுக நகரமான சென்டாய் நகரில் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வசித்து வந்தனர். இந்த பூகம்பம் & சுனாமியால் எத்தனை பேர் உயிர் தப்பி இருப்பார்கள் என்று சொல்ல முடியாத அளவுக்கு ஆயிரக்கணக்கானவர்கள் இறந்துள்ளனர்.

சுனாமியால் எழுந்த பேரலையில் நகரமே சூறையாடப்பட்டது. கட்டிடங்கள் கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. சாலைகள் இருந்த இடமே தெரியாத அளவுக்கு பொருட்கள் சிதறி கிடக்கின்றன. சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றது. கடல் நீர் 10 கி.மீ. தூரம் நகருக்குள் வந்து பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. குடிநீர், உணவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடலில் ஏராளமான உடல்கள் மிதக்கின்றன.
சென்டாய் நகரம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக