டோக்கியோ : ஜப்பானில் இன்னொரு அணுஉலை வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி, வட கடலோர மாநிலங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஜப்பானில் அணு மின் நிலையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தால் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 160 பேர் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, பாதுகாப்பு கருதி 3 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
பெரும் அசம்பாவிதத்தை தவிர்க்க அணு மின் நிலையத்தில் கடல் நீரை நிரப்பி அதை செயல் இழக்கச் செய்தனர் விஞ்ஞானிகள். கதிர்வீச்சால் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து பாதிக்கப்பட்டவர்களிடம் மருத்துவக் குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த வெள்ளியன்று பசிபிக் கடல் பகுதியில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தால் ஜப்பானின் கடற்கரை நகரங்களை சுனாமி தாக்கியது. அதில் பல கட்டடிங்கள், வீடுகள் தரை மட்டமானது. 13,000க்கும் மேற்பட்டவர்கள் பலியாயினர்,
ஆயிரக்கணக்கானோர் காணவில்லை. இந்த பூகம்பத்தால் பிகுஷிமா டைச்சி அணு மின் நிலையத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதனால், அங்குள்ள அணு உலையின் கூலண்ட் சிஸ்டம் செயலிழந்து, ஹைட்ரஜன் வாயு அழுத்தத்தால் பாதுகாப்பு கான்கிரீட் சுவர் வெடித்தது. பிகுஷிமா டைச்சி அணு மின் நிலையத்திலிருந்து கதிர்வீச்சு வெளியானது. இதனால், அப் பகுதியில் 160 பேர் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, அப்பகுதியில் 20 கி.மீ. சுற்றளவில் வசிக்கும் மக்களை வெளியேறும்படி சர்வதேச அணு சக்தி அமைப்பு (ஐஏஇஏ) உத்தரவிட்டது. பாதுகாப்பு கருதி அங்கிருந்து 3 லட்சம் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனர்.
டோக்கியோவிலிருந்து 240 கி.மீ. தொலைவில் பியூகுஷிமா டைச்சி அணுமின் நிலையம் உள்ளது. 40 ஆண்டுகள் பழமையானது இந்த அணு மின் நிலையம். பூகம்பம் காரணமாக, அங்கு மொத்தம் உள்ள 5ல் ஓர் அணு உலையில், கூலண்ட் சிஸ்டம் சனிக்கிழமை செயலிழந்தது. இதனால் வெப்பம் அதிகமானது. ஹைட்ரஜன் வாயு அழுத்தம் காரணமாக அணு உலையின் வெளிபுறத்தில் உள்ள பாதுகாப்பு கான்கிரீட் சுவர் வெடித்தது.
ஆனால், அணு உலையில் உள்ள ஸ்டீல் கவசம் உடையவில்லை. இதனால் பேரழிவு ஏற்படவில்லை. இருந்தபோதிலும் கதிரியக்க வாயு கசிந்தன. இதையடுத்து, அதன் 20 கி.மீ. சுற்றுப்பகுதியில் இருந்த 3 லட்சம் பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அமெரிக்காவிலிருந்து வரவழைக்கப்பட்ட கூலண்ட் சிஸ்டம் மூலம் அணு உலைகள் குளிர்விக்கப்படுகின்றன.
இந்நிலையில், நேற்று 2வது அணு உலையிலும் கூலண்ட் சிஸ்டம் பாதிக்கப்பட்டது. இதுவும் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அணு உலைகளை குளிர்விக்க விஞ்ஞானிகள் கடுமையாக போராடி வருகின்றனர். கடல் நீரை நிரப்பி அணு உலைகள் செயலிழக்கச் செய்யப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக