22 மார்ச் 2011

இலங்கையில் உள்ளூராட்சி மன்றத்தில் முஸ்லிம் பெண்

இலங்கையில் சுமார் அரை நூற்றாண்டு இடைவெளிக்குப் பின்னர் முஸ்லிம் பெண்மணி ஒருவர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் சகோதரியான சல்மா ஹம்சா ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

இதற்கு முன்னர், ஆயிஷா ரவூஃப் என்ற பெண்மணி கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயராக 1950களில் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இலங்கையிலுள்ள முஸ்லிம் பெண்களுக்காக குரல்கொடுக்க வேண்டும் என்பதற்காகவே தான் உள்ளூராட்சி மன்றத்துக்குள் பிரவேசித்துள்ளதாக சல்மா ஹம்சா தமிழோசையிடம் கூறினார்.

இலங்கையின் அரசியலில் முஸ்லிம் பெண்களின் ஈடுபாடு மிகக் குறைவாக இருந்து வரும் நிலையில், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற எண்ணம் தனக்கு உள்ளதாக சல்மா ஹம்சா கூறியுள்ளார்.


நன்றி (செய்தி ) :-  bbc தமிழோசை .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக