லண்டன்: கவர்ச்சியான கலர் சிகரெட் பாக்கெட் விற்பனைக்கு இங்கிலாந்து அரசு தடை விதிக்க திட்டமிட்டு¢ உள்ளது. சிகரெட் பிரியர்களை கவர்வதற்காக கவர்ச்சிகரமான வண்ண கலர் பாக்கெட்டில் சிகரெட் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கடந்த 2008&09ம் ஆண்டில் இங்கிலாந்தின் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கை 22 சதவீதமாக அதிகரித்ததாக புள்ளி விவரம் தெரிவித்தது.
இதற்கு சிகரெட் பாக்கெட்டின் கவர்ச்சிகரமான தோற்றமும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க அரசு முடிவு செய்தது. அதற்காக புதிய சட்டம் ஒன்று இங்கிலாந்தில் அமலாகிறது. அதன்படி சிகரெட் நிறுவனங்கள் வண்ண கலர், முத்திரை போன்றவை இல்லாத வெள்ளை சிகரெட் பாக்கெட்டை மட்டும்தான் தயாரிக்க வேண்டும். அதில் சிகரெட் பிடிப்பதன் தீமை குறித்த வாசகம் இடம் பெறலாம் என்று அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக