புதுடெல்லி : விமான பயண சேவை வரியை திரும்ப பெற கேட்டுக் கொள்வதாக மத்திய விமான துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்தார். அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், விமான பயண சேவை வரி உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. விமான பயண சேவை வரியை உயர்த்துவதால் பயணிகள் பாதிக்கப்படுவர் என்று தனியார் விமான நிறுவனங்கள் தெரிவித்தன. இந்நிலையில் அமைச்சர் வயலார் ரவி கூறுகையில், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் விமான பயண சேவை வரியை திரும்ப பெறுவது குறித்து பரிசீலனை செய்ய கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக