21 மார்ச் 2011

ஜோதிடத்தையும், வாஸ்துவையையும் தடைச்செய்யக் கோரிய மனுவை தள்ளுபடிச் செய்த நீதிமன்றம்

தானே:ஜோதிடமும், வாஸ்து போன்ற மூடநம்பிக்கைகளால் இந்திய மக்களில் ஒரு சாராரின் பணமும், நேரமும் வீணடிக்கப்படுகிறது. முட்டாள்தனமான இச்செய்கைகளால் மனிதர்கள் தங்களது பகுத்தறிவை பறிகொடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஜோதிடமும், வாஸ்து சாஸ்திரமும் தடைச் செய்யப்பட வேண்டுமெனக்கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை நீதிமன்றம் தள்ளுபடிச் செய்துவிட்டது.

ஜோதிடத்திற்கும், வாஸ்துவிற்கும் விஞ்ஞானரீதியான அடிப்படை இல்லை எனவும், பொதுமக்களை ஏமாற்றும் சூழலில் அவற்றை தடைச்செய்ய வேண்டுமென அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரி ஜன்ஹித் மஞ்ச் என்ற அரசுசாரா நிறுவனம் ஒன்று பொது நல வழக்கை தொடுத்தது.

பல்வேறு அரசு ஏஜன்சிகளும், ஜோதிடர்களும் இவ்வழக்கில் எதிர் தரப்பினராவர். இம்மனுவின் மீது தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிபதிகளான எஸ்.ஜெ.வாஸிஃப்தர் மற்றும் மொஹித்ஷா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கூறுகையில், நீதிமன்றங்கள் செயல்படுவது, அரசிடம் சட்டமியற்ற உத்தரவிட வேண்டும் என்பதற்காக அல்ல. இத்தகைய செயல்பாடுகளுக்கு அரசிடம் உத்தரவிடவும் நீதிமன்றங்களால் இயலாது எனவும் தெரிவித்துள்ளது.

நன்றி (செய்தி ) :-  தூது ஆன்லைன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக